வியாழன், 5 நவம்பர், 2009

இப்படியும் சில மனிதர்கள் ?

ரூ.1,100 கோடி கம்பெனி எம்.டி. செல்போன் திருடியதாக கைது


Swine Flu






புதுடெல்லி: ஆண்டுக்கு ரூ.1,100 கோடி வர்த்தகம் செய்யும் கண்ணாடி கம்பெனியின் நிர்வாக இயக்குனர், செல்போன் திருடியதற்காக கைது செய்யப்பட்டார். டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிறுவனம் இந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் அண்ட் இண்டஸ்டிரீஸ். அதற்கு 11 நகரங்களில் கிளைகள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.1100 கோடி விற்பனை பார்க்கும் கம்பெனி இது. குளிர்பான, மதுபான நிறுவனங்களுக்கு பாட்டில் தயாரித்து சப்ளை செய்கிறது. அந்நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சோமனி (50). இவர் டெல்லியில் இருந்து சென்னை செல்ல விமான நிலையம் வந்தபோது விலையுயர்ந்த பிளாக்பெர்ரி செல்போனை திருடியதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) கைது செய்தனர். பிறகு, சஞ்சய் ஜாமீனில் விடப்பட்டார். சிஐஎஸ்எப் வீரர்கள் கூறியதாவது: மும்பை செல்ல பூரி என்பவர் டெல்லி விமான நிலையம் வந்தபோது பாதுகாப்பு சோதனைக்காக செல்போனை ஸ்கேனிங் இயந்திர டிரேயில் வைத்தார். பிறகு, டிரேயில் செல்போனை காணவில்லை என புகார் கொடுத்தார். விமான நிலைய பயணிகள், போலீசாரிடம் விசாரித்ததில் நீல சட்டை அணிந்த ஒருவர் அதை எடுத்ததாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில், அவர் சென்னை சென்ற ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் அடையாளம், தகவல்கள் பெறப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. மீண்டும் மாலை அதே நபர் டெல்லி செல்ல விமான நிலையம் வந்தபோது அவரை சிலர் அடையாளம் காட்டினர். அவரிடம் சோதனை நடத்தியதில் செல்போன் கிடைக்கவில்லை. விசாரித்ததில், திருடிய பிளாக்பெர்ரி செல்போனை விமான கழிவறையில் வைத்ததாக தெரிவித்தார். அங்கிருந்து போன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றனர். சஞ்சய் சோமனி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படலாம். எனினும், அவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலை இந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: