வியாழன், 26 நவம்பர், 2009

மும்பை சம்பவம்:முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு


மும்பை: மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 195 பேரைகொன்று குவித்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மும்பையில் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி தாவூத் இப்ராகிம் கோஷ்டி நடத்திய தொடர்வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு மும்பை பல தீவிரவாத தாக்குதல்களைசந்தித்துள்ளது.

இதற்கு நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருக்கின்றனர். இவைஎல்லாவற்றையும் விட கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான்தீவிரவாதிகள் கடல் வழியாக ஊருடுவி வந்து மும்பையில் நடத்திய தாக்குதல்உச்சக்கட்ட கொடூரமாக அமைந்தது. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ்மஹால் ஒட்டல், ட்ரைடன்ட் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனைஉள்ளிட்ட இடங்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் நவீன துப்பாக்கிகளால்சரமாரியாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் கொன்றுகுவித்தனர்.

அதில் பலியான உயிர்களின் எண்ணிக்கை 195. இந்த பயங்கர சம்பவத்தின்முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தாக்குதலில்கொல்லப்பட்டவர்கள், தீவிரவாதிகளை ஒழிக்க உயிரை தியாகம் செய்தவர்களைநினைவு கூறும் வகையில் மும்பையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நினைவு சின்னம்: இந்த தாக்குதலுக்கு பிறகுமும்பை காவல் துறையை பலப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட நவீனஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களுடன் கேட்வேஆப் இந்தியாவில் இருந்து மெரைன் டிரைவ் வரை போலீசார் நடத்தும்அணிவகுப்பு இன்று காலை நடக்கிறது.

முன்னதாக, கேட்வே ஆப் இந்தியாவில் சர்வமத அமைதி பிரார்த்தனை கூட்டம்நடக்கிறது. மாலை 6 மணிக்கு மெரைன் டிரைவ் போலீஸ் ஜிம்கானாவில் அரபிக்கடலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தை மத்தியஉள்துறை அமைச்சர் .சிதம்பரம் திறந்து வைக்கிறார். கூட்டு பிரார்த்தனை: தீவிரவாதிகளின் தாக்குதலில் அதிகப்பட்சமாக சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர். அங்கு இன்று பல நிகழ்ச்சிகள்நடக்கின்றன.

கொல்லப்பட்டவர்களின் நினைவாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரைமலரஞ்சலி செலுத்தப்பட்டு, கூட்டு பிரார்த்தனை கூட்டம், ரத்த தான முகாம், பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் ஆகியவைநடத்தப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு படையின் பேண்டு வாத்திய குழுவும்அஞ்சலி கீதம் இசைக்கிறது. இந்த நினைவு தினத்தின்போது அசம்பாவிதங்கள்நடப்பதை தடுக்க நகரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதலே முக்கிய சாலைகளில் போலீசார் சோதனைசாவடிகளை அமைத்து, வாகனங்களை சோதனை செய்த பிறகே நகருக்குள்அனுமதிக்கின்றனர். கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: