துயரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துயரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 அக்டோபர், 2009

தமிழீழ மக்களின் துயரம்: தொல்:திருமா

பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக ஈழ‌த்த‌மி‌ழ் மக்கள் கதற‌ல்: திருமாவளவன் வேதனை
''பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக ஈழ‌த்த‌மி‌ழ் மக்கள் கதறி அழுதனர்'' எ‌ன்று ‌விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூ‌றினா‌ர்.

WD
செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ஈழத்தமிழர்களை நேரில் கண்டறிவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது. மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும்படி கதறி அழுதனர். அதைத் தாண்டி எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம். எங்கள் ஊருக்கு அனுப்பினால் நாங்கள் உழைத்து பிழைத்துக்கொள்வோம் என்பதை ஒருமித்த கருத்தாக கூறினார்கள். குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

5
லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மஞ்சள் காமாலை, தோல் நோய் ஏராளமாக பரவுகிறது. கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க பால், பால் பவுடர் கிடைக்கவில்லை. மாற்று உடைக்கு வழியில்லாமல் அழுக்கு துணியையே அணிந்து வருகிறோம். அரிசி, பருப்பு மட்டும் தருகிறார்கள். காய்கறி, மசாலா சாமான் தருவதில்லை. பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக அம்மக்கள் கதறி அழுதனர்.

இந்த விவரங்களை எல்லாம் தொகுத்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிடம் விளக்கி சொன்னோம். மழைக்காலத்திற்கு முன்னதாக அனைவரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அனைவரும் ஒரே குரலில் வற்புறுத்தினோம். அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் பேரை விடுவிப்பதாக ஒத்துக் கொண்டனர். உறவினர்கள் விண்ணப்பம் செய்த வகையில் 8 ஆயிரம் பேரையும், மொத்தம் 58 ஆயிரம் பேரை 2 வாரத்தில் அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்றி விட்டு மற்றவர்களையும் மீள் குடியமர்த்துவோம் என்று தெரிவித்தார்.

இலங்கைக்கு சென்று வந்தது ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. "எங்களை பார்க்க முதல் முறையாக இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்கள். இந்தியாவிடம் சொல்லி எங்களை சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்'' என்று அவர்கள் கதறி அழுதனர். முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை வெளியேற அனுமதித்தது, எங்களுடைய பயணத்தால் கிடைத்த பயன் என்று கருதுகிறேன். மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியை இந்திய அரசு மூலமாக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொள்வார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இலங்கை சிறையில் அடைபட்ட 40 இந்தியர்களை இந்தியாவில் உள்ள சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உறுதியளித்துள்ளது எ‌ன்று திருமாவளவன் கூறினார்.

இலங்கை அதிபருடனான சந்திப்பின் போது, "இலங்கையில் நடந்த போரின் போது பிரபாகரனோடு நீங்கள் இருந்திருந்தால் அவரோடு சேர்ந்து மறைந்திருக்க கூடும். உங்களை நான் இப்போது சந்திக்க முடியாமல் போயிருக்கலாம்'' என்று ராஜபக்சே கூறியது குறித்து திருமாவளவனிடம் கேட்டதற்கு, "என்னை அறிமுகம் செய்த போது இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்'' என்று தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

புதன், 14 அக்டோபர், 2009

என்று தீரும் இவர்களின் துயரம்

முகாமில் இருந்து விடுவியுங்கள் : தமிழக எம்.பி.,க்களிடம் கோரிக்கை

Front page news and headlines today

கொழும்பு : தமிழக எம்.பி.,க்கள் குழுவிடம், "அபிவிருத்திப் பணிகளுக்கு அவசரம் இல்லை; முகாம்களில் உள்ள மக்களின் விடுதலையே அவசியம்' என, யாழ் மாநகர சபை உறுப்பினர் ரெமிடியஸ்,கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தியத் தூதுக்குழு, யாழ் பொது நூலக மண்டபத்தில் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தது. இலங்கைப் படையினருடன் சேர்ந்து இயக்கும் துணைப் படையான, ஈ.பி.டி.பி., குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.அதில், "அரசியல் தீர்வைப் பெற துணை நில்லுங்கள். அபிவிருத்திப் பணிகள் இப்போது அவசரம் இல்லை; முகாம்களில் உள்ள மக்களின் விடுதலை தான் முக்கியம்' என, மாநகர சபை உறுப்பினர் ரெமிடியஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து வர்த்தக பிரமுகர் ஒருவர் கூறியதாவது:எங்களின் உறவினர்கள், அகதி முகாம்களில் வாடுகின்றனர். தமிழ் மக்களுக்கான தீர்வு விஷயத்தில் இந்தியா மவுனம் சாதிக்காமல், வெளிப்படையாக செயல்பட்டு, தீர்வு வழங்க வேண்டும். மேலும், அகதி முகாம்களில் உள்ள இரண்டரை லட்சம் மக்களை உடனடியாக விடுவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள், அனைத்துலக நியமனங்களுடனே அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. அவர்களின் சொந்த ஊர்களில் குடியேற வேண்டும் என்பதைத் தவிர, அவர்கள் வேறு எதையும் கோரவில்லை' என, தமிழக காங்கிரஸ் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்திருக்கிறார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:யாரையும் சந்திக்கக் கூடாது என எந்தத் தடையுமின்றி, சுதந்திரமாகவே முகாம்களுக்குச் சென்று, அவர்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தோம். முகாம்களில் உள்ளவர்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்பதையே, பிரதான கோரிக்கையாக கூறினர். முகாம்களும் அனைத்துலக நடைமுறைகளின் படியே அமைக்கப்பட்டுள்ளது. சென்னை திரும்பியவுடன், முதல்வர் கருணாநிதியிடம் இலங்கை முகாம்களின் நிலை குறித்த அறிக்கையை கொடுக்க உள்ளோம்.இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.