செவ்வாய், 10 நவம்பர், 2009

டைட்டானிக்’ படத்தில் நடித்த கேத் வின்ஸ்லெட் மதிப்பு 470 கோடி


லண்டன் : டைட்டானிக் சினிமா ஹீரோயின் கேத் வின்ஸ்லெட், ரூ.470 கோடிமதிப்புள்ள தேசிய சொத்து என்று இங்கிலாந்து அரசு நியமித்த பொருளாதாரநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பற்றிஆய்வு நடத்த பொருளாதார நிபுணர்கள் குழுவை அந்நாட்டு அரசு நியமித்தது. அதற்கு நிதி உதவியும் அளித்தது.
அந்த நிபுணர்கள் அளித்த ஆய்வறிக்கையின்படி, டைட்டானிக் சினிமாஹீரோயின் கேத் வின்ஸ்லெட் ரூ.470 மதிப்பு கொண்ட தேசிய சொத்து என்றுஅறிவிக்கப்பட்டார். இங்கிலாந்து சினிமா கவுன்சிலால் தணிக்கை செய்யப்பட்டஒரே நடிகை என்ற பெயர் பெற்றவர் வின்ஸ்லெட்.
சினிமா துறை மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வின்ஸ்லெட் அளித்து வரும்பங்கு மகத்தானது என்று கவுன்சிலின் புள்ளிவிவரம் மற்றும் ஆராய்ச்சிக் குழுதலைவர் டேவிட் ஸ்டில் தெரிவித்தார். அவரது வசீகரம், சினிமாவைத் தாண்டிமற்ற துறை வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. எனது ஆடை வடிமைப்புகளைவின்ஸ்லெட்டின் அழகிய உடலமைப்பை மனதில் வைத்து உருவாக்கி வெற்றிபெற்றிருக்கிறேன்ÕÕ என பிரபல டிசைனர் இயன் கலும் கூறினார்.
இங்கிலாந்து அரசியல்வாதிகளும் வின்ஸ்லெட் பற்றி பெருமைப்படுகின்றனர். ஒரு படத்துக்கு அவரது அதிகபட்ச சம்பளம் (ரூ.47 கோடி), அதே நேரம் கலை, டாகுமென்டரிகளிலும் நடிப்பது, சினிமா துறையில் அவரது படங்கள் மூலம்சுமார் ரூ.420 கோடி முதலீடு ஆகியவை அவர்களை பிரமிக்க வைத்துள்ளன. எனவே, ஆஸ்கர் விருது பெற்ற கேத் வின்ஸ்லெட்டை தங்கள் தேசிய சொத்தாகஇங்கிலாந்து மக்கள் பலர் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: