ஞாயிறு, 8 நவம்பர், 2009

வாங்க,வாங்க,விண்டோஸ் 7 நாற்பது ரூபாதான்


புதுடெல்லி : மைக்ரோசாப்ட் நிறுவனம், அறிமுகம் செய்துள்ள விண்டோஸ் 7 புதிய சாப்ட்வேரின் போலி சிடி விற்பனை, நம்நாட்டில் ஒரு வாரத்தில் ரூ.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனம் மைக்ரோசாப்ட். அதன் அதிநவீன புதிய சாப்ட்வேரான விண்டோஸ் 7 இரண்டு வாரங்கள் முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், விண்டோஸ் 7 சாப்ட்வேர் அடங்கிய போலி சிடிக்கள் மெட்ரோ நகரங்களில் தாராளமாக கிடைப்பதாக தகவல்கள் வெளியாகின.
புதிய சாப்ட்வேரின் ஒரிஜினல் விலை ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை. வெளிநாடுகளில் இந்த விலை என்றாலும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தள்ளுபடி அளிக்கிறது. அதன்படி, இந்தியாவில் ஒரிஜினல் சாப்ட்வேரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ.6,000 முதல் ரூ.11,000 வரை வாங்கலாம். சர்வதேச நாடுகளைவிட இந்தியர்களுக்கு ரூ.4,000 வரை தள்ளுபடி கிடைத்தாலும், விலை அதிகம் என பலர் கருதுகின்றனர்.
எனவே, திருட்டு சிடியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்ப, ரூ.40 முதல் ரூ.250 விலையில் அதை பலர் கள்ள மார்க்கெட்டில் விற்று பல லட்சம் லாபம் பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் போலி சிடிக்கள் விற்பனை மூலம் இந்தியாவில் ரூ.50 லட்சம் வசூலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 கருத்து:

வடுவூர் குமார் சொன்னது…

உங்கள் பிளாக்கை திறக்கும் போது பிளாக்கரின் செய்தி” அதை கிளிக்கிய பிறகு தான் செய்தியே தெரிகிறது,போதாகுறைக்கு Word Verification வேறு வைத்துள்ளீர்கள்...இதெல்லாம் இருந்தா படிக்க மட்டும் தான் செய்வார்கள்.கொஞ்சம் யோசியுங்கள்.

லினக்ஸ் என்ற மாற்று அழகாக இருக்கும் போது இதன் பின் ஏன் ஓடுகிறார்கள் என்று தெரியவில்லை.