சனி, 23 அக்டோபர், 2010

ரசிக்கத் தெரிந்த மனமே ! உனக்கு ? பகுதி- 2


ரசிக்க தெரிந்த மனமே !உனக்கு ? பகுதி -1  படிக்க இங்கே  

என் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார்,அவர் எது அணிந்தாலும் அவருக்கு அது பொருத்தமாகவே இருக்கும்.ஆனால் அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த்ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒருமுறை அதை கேட்கவும் செய்தேன்." நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை" என்றார். 

என்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ,அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை.நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ,அதை பின் பற்றுவதுரசனை இல்லை. " நானும் இருக்கிறேன் ... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துகொள்ளுங்கள் என்பதற்கான முயற்சி. 

நீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால்,அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறொரு ரகமாக இருக்கலாம்.முடிந்தால் அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
நீரோடையின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு
நீரோடைக்கு அப்பால், அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம்.

பூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துக் கிடக்கலாம்...... காய்ந்து கிடக்கும் கருவேல மரங்களைக் கவனித்துக் கொண்டு இருப்பவரின் ரசனைக்கு ஒரு காரணம் இருக்கும்.


மேல்தட்டு வாழ்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர்வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத் தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்பதைப் போலவே,இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.இதில் உயர்வென்ன...தாழ்வு என்ன ? 

எல்லா ரசனைகளும் உயர்வானதுதான்.அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம்.அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.  மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்யமுடியாது.

முடிந்தால் அடுத்தவரின் ரசனையில் இருக்கும் " ரசனைகளையும்" அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்..... 

நன்றி : திரு : கோபிநாத் 
           மற்றும் ஆனந்தவிகடன் 

                                                                                            நட்புடன் 
                                                                                            அபுல்.

6 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

//
எல்லா ரசனைகளும் உயர்வானதுதான்.அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம்.//

super vaalththukkal

abul bazar/அபுல் பசர் சொன்னது…

வருகைக்கும் ,வாழ்த்துக்கும்
நன்றி@ மதுரை சரவணன்.

Dhosai சொன்னது…

good post

வெறும்பய சொன்னது…

உண்மை தான் .. ரசனை என்பது இடத்திற்கும், காலத்திற்கும், வயதிற்கும், வாழ்க்கைக்கும் ஏற்ப மாறுபாடும்,,

abul bazar/அபுல் பசர் சொன்னது…

முதல் வருகை தந்திருக்கும்
dhosai அவர்களே.
தங்களின் வருகைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன்றி.

abul bazar/அபுல் பசர் சொன்னது…

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி @ வெறும்பய அவர்களே.