செவ்வாய், 14 டிசம்பர், 2010

கறைபட்டுப் போன கனவு ?



முகத்திலே முறுவல், நடையில் நம்பிக்கையின் துள்ளல்.மிடுக்காக உடை அணிந்து தலை நிமிர்ந்து நடந்து வருகிற இளைஞனின் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.வசிகரமா ? கம்பீரமா ? தன்னம்பிக்கையா 
எனக்கு அதைச் சொல்ல சரியான வார்த்தை அகப்படவில்லை.

வர்ணிக்க முடியாத அந்த வசீகரத்தின் பின் ஒரு வரலாறு இருக்கிறது.
நெடுநாள்களாக நானறிந்த பையன் அவன்.சில ஆண்டுகளுக்கு முன் வரை அவன் பொருளாதாரப் பின்னணி ஒன்றும் பிரமாதமாக இருந்திடவில்லை.ஆனால் அவன் நம்பிக்கை வைத்திருந்த கல்வியும்,அதற்குப்பின் இருந்த உழைப்பும்,உலகை ஜெயிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவனை மாற்றின.வெற்றியும் இளமையும்  இன்று அவன் விலாசங்களாகிவிட்டன.

கம்பீரமான இளைஞன் என் ஜன்னலைக் கடந்து போனான்.அவன் முதுகுப் புறத்தைப் பார்த்த நான் பதறிப் போனேன்.அவனது ஆடையின் பின் புறம் முழுவதும் -மிடுக்கான ஆடை எனச் சற்று முன் சொன்னேனே அந்த ஆடை-முழுக்க சேறு.குதிங்காலில் இருந்து தோள்பட்டைவரை மழைச் சேறு புள்ளி புள்ளியாய் கோலமிட்டிருந்தது.புள்ளிகள் எல்லாம் பெரும் புள்ளிகள்.

எப்படி சேறு வந்தது என்று உற்றுப்பார்த்தேன்.பாதுகாக்கும் என்று எண்ணி அவன் அணிந்திருந்த ரப்பர் செருப்பு தயக்கமின்றி அவன் முதுகில் சேற்றை வாரித் தெளித்திருந்தது.முதுகெல்லாம் சேறு இருப்பதை அறியாமல் அவன் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான் 
மிடுக்காக.

அவனது முன்புறத்தையும்  முகத்தையும் பாத்தவர்கள் நட்புப் பாராட்டி முறுவலித்தர்கள்.முதுகைப் பார்த்தவர்கள் ஏளனமாக சிரித்து உதட்டோரம் சிரிப்பை ஒளித்துக் கொண்டார்கள்.

ஓடிப் போய் அந்த இளைஞனிடம் உண்மை  நிலவரத்தைச் சொல்ல வேண்டும் என ஓர் துடிப்பு எழுந்தது. பாதுகாக்கும் என நீ நினைத்த செருப்பு உன்னைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது நண்பா.உதறி தள்ளு அதை என அவனுக்குச் சொல்லும் ஆசையில் எழுந்தேன். 

என் மடியில் இருந்த செய்தித்தாள்கள் நழுவித் தரையில் விழுந்து விரிந்தன.
விரிந்த இதழ்கள் எல்லாவற்றிலும்  ஊழல் செய்திகள் ஒலித்துக் கொண்டிருந்தன.காற்றையும் காந்த அலைகளையும் காசு பண்ணிய ஊழல்.படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை பதவியில் இருப்பவர்கள் பங்கு போட்டுக் கொண்ட ஊழல்.அண்டை மாநிலத்தில் அரசு நிலத்தை பெண்டு பிள்ளைகளுக்கு ஒதுக்கிய ஊழல்.

உலக அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் உள்ளிருந்தே சுருட்டிய ஊழல்.வரிக்கு வரி,வார்த்தைக்கு வார்த்தை ஊழல்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த நொடியில் நமது அரசமைப்பு சட்டம் இந்த தேசத்தை "சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசு " என்று வர்ணிக்கின்ற வரி மனதில் ஓடி மறைந்தது.

அத்தனையும் பொய்,அர்ததமற்ற அலங்கார வார்த்தைகள் என உள்ளம் குமுறியது. 

உன்னதமான ஒரு கனவு கறைபட்டுப் போனதை எண்ணிய போது இதயத்தின் ஓரத்தில் ஊமை வலி ஒன்று எழுந்தது.உட்கார்ந்து  விட்டேன்.அந்த இளைஞனைப் போல் அல்லவா இருக்கிறது என் தேசம்! முதுகிலே இருக்கிற சேறு தெரியாமல் முகத்திலே முறுவல் ஏந்தி நடை போடுகிறது.காலனி போல் காப்பாற்றும் என நினைத்த அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் சகதியை அல்லவா வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடந்திருந்தால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருமானம் வந்திருக்கும் என்கிறது மத்திய தணிக்கை அறிக்கை.அரசுக்கு இந்த பணம் வந்திருந்தால் இப்போது உள்ளதைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரித்திருக்கலாம்.( இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதி 49,904 கோடி ரூபாய் ) எத்தனை விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திருக்கலாம்! விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு 70 ஆயிரம் கோடி.இது அதைப் போல இரண்டரை மடங்கு அதிகம்.


ஊழலினால் பாதிக்கப்படுவது அமைச்சர்கள் வீட்டு குழந்தைகள் அல்ல.
அதிகாரிகளின் வீட்டு பிள்ளைகளும் அல்ல.பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும்,சிறுதொழில் புரிவோர்க்களும்தான்.ஊழல் நிறைந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய நிறுவனங்கள் ஏகபோக சந்தைகளை உருவாக்கி கொள்கின்றன.அதிக லாபம் அடைகின்றன. அவை இந்த ஊழல்நிறைந்த அமைப்பைப் பாதுகாக்கவே முயற்சிக்கும்.


சமநீதி கொண்ட,சம வாய்ப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் நம் குழந்தைகள், நம் குழந்தைகளின் குழந்தைகள் வாழ வேண்டும் என நாம் நிஜமாகவே விரும்புவோமானால் ஊளை ஒழிக்கக் களமிறங்க வேண்டும்.அதில் ஈடுபட்டோரையும்,அவர்களைக் காப்போரையும் கடுமையாக விரைந்து தண்டிக்க வகை செய்யும் சட்டங்களும் அமைப்புகளும்  கோரி நாம் குரலெழுப்ப வேண்டும்.


ஏனெனில் ஊழலை விடக் கொடுமையானது அதைக் கண்டு அமைதி காப்பது.


நன்றி : திரு.மாலன் அவர்கள்
              புதிய தலைமுறை

செவ்வாய், 16 நவம்பர், 2010

இனிய தியாகத் திருநாள் (பக்ரீத்)வாழ்த்துக்கள்






அஸ்ஸலாமு அழைக்கும்.....
தியாகத் திருநாள் (பக்ரீத்)வாழ்த்துக்கள் ........


வலைப்பூ நண்பர்கள், வலைப்பூ வாசகர்கள், வலைப்பூ திரட்டிகளான  தமிழ்மணம், இன்ட்லி,தமிழ்வெளி, தமிழ் 10   மற்றும் அனைத்து       நண்பர்களுக்கும் என்  இதயம் நிறைந்த  


" இனிய தியாகத் திருநாள் (ஹஜ்ஜு பெருநாள் ) வாழ்த்துக்கள்.. "

நட்புடன் 
அபுல்.



திங்கள், 25 அக்டோபர், 2010

தமிழனின் வெற்றிக்கு வாக்களிப்போம் !

 
நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!!
 
தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை. 
 
இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
 
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில்  வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை  யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின்  கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!  
இந்தமாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக  உதவணும் என்று இவர் முடிவு செய்த போது  இவரது வயது வெறும்  21    
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!   
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! 
சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!

கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது 
 இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx 

  • இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். 
  • உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.
  • அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள். 
  • அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
  • முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
      நண்பர் " வந்தேமாதரம் " சசிகுமார்  அவர்களின் வலைப்பூவில் வெளிவந்த இந்த பதிவு மீள்பதிவாக இங்கே பகிரப்படுகிறது. 
மறக்காமல் உங்கள் வாக்கை பதிவு செய்து ஒரு தமிழனை வெற்றி 
பெறச் செய்யுங்கள்.
நன்றி : சசிகுமார்.

பாதை மாறியப் பயணங்கள் ?

இந்த படத்தைப் பார்த்ததும் இந்த பதிவின் நோக்கம்  உங்களுக்கு 
புரிந்திருக்கும்.

குடி குடியை‌‌க் கெடு‌க்கு‌ம், குடி நா‌ட்டு‌க்கு‌ம், ‌வீ‌ட்டு‌க்கு‌ம் கேடு எ‌ன்பது போ‌ன்ற வாசக‌ங்க‌ள் மதுபான பா‌ட்டி‌ல்க‌ளிலேயே எழுத‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். ஆனா‌ல் அதை வா‌ங்‌கி‌க் குடி‌க்கு‌ம் குடிமக‌ன்க‌‌‌ள் யாரு‌ம் அதை‌ப் படி‌ப்பது‌ம் இ‌ல்லை, படி‌த்து நட‌ப்பது‌ம் இ‌ல்லை.

கோ‌யி‌ல் இ‌ல்லாத ஊ‌ரி‌ல் குடி‌யிரு‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ந‌ம்மூ‌ர் ஆ‌ண்மக‌ன்களோ, பா‌ர் இ‌ல்லாத ஊ‌ரி‌ல் குடி‌யிரு‌க்கவே மா‌ட்டா‌ர்க‌ள். அ‌‌ந்த அள‌வி‌ற்கு குடி‌ப் பழ‌க்க‌ம் த‌ற்போது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. காலை‌யி‌ல் 10 ம‌ணி‌க்கு டா‌‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ள் ‌திற‌க்க‌ப்படு‌கி‌ன்றன. இரவு 10 ம‌ணி‌க்கு மூட‌ப்படு‌கி‌ன்றன. காலை‌யி‌ல் வேலை‌க்கு‌ச் செ‌ல்வோரு‌ம், ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ‌பி‌ள்ளைகளு‌ம் அவசரக‌தி‌யி‌ல் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ந்த சமய‌த்‌திலு‌ம், டா‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ளி‌ன் வா‌யி‌ல்களை அடை‌த்து‌க் கொ‌ண்டு ‌நி‌ற்கு‌ம் பலரை நா‌ம் காண முடியு‌ம். மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே புரியும்.

காலை‌யிலேயே இ‌வ‌ர்க‌ள் இ‌ப்படி எ‌ன்றா‌ல், மாலை‌யு‌ம், அதையு‌ம் தா‌ண்டி இர‌விலு‌ம் இவ‌ர்க‌ள் எ‌ப்படி இரு‌ப்பா‌ர்‌க‌ள். மேலை நாடுக‌ளி‌ல் ‌நிலவு‌ம் த‌ட்பவெ‌ப்ப ‌நிலையை‌த் தா‌ங்க அவ‌ர்க‌ள் குடி‌க்‌கிறா‌ர்க‌ள். அதுவு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற அள‌வி‌ற்கு ம‌ட்டுமே. ஆனா‌ல் அதை நமது குடிமக‌‌ன்களோ ‌தினமு‌ம் ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் குடி‌ங்க எ‌ன்று மரு‌‌த்துவ‌ர் கூறுவதை‌க் கே‌ட்டு ந‌ல்ல ‌பி‌ள்ளையாக ‌இ‌ந்த‌ த‌ண்‌ணியை‌க் குடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். இது நமது உடலு‌க்கு‌ம் கேடு, நமது ‌வீ‌ட்டி‌ற்கு‌ம் கேடு எ‌‌ன்பதை எ‌ப்போது உண‌ர்வா‌ர்க‌ள்.

இவை எல்லாவற்றிலும் கொடுமை என்னவென்றால் அரசே மது விற்பனை செய்வதுதான். குடிமக்களை காக்கவேண்டிய  அரசே மக்களை குடிகாரர்களாக ஆக்கிகொண்டிருக்கிறது என்பதுதான். சாராயம் வித்தவர்கள்  எல்லாம்  இன்று  கல்வி தந்தையாகி விட்டார்கள். கல்வியைப் போதிக்க வேண்டிய அரசோ சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. கொடுமைக் கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இரண்டு கொடுமை  டிங்கி,டிங்கி  என்று ஆடியதாம். அது போலத்தான் இருக்கிறது அரசு சாராயம் விற்கும் முறை.

ஆண்கள் மட்டும் குடித்துகொண்டிருந்த நிலை மாறி இன்று பெண்களும் குடிக்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள். கைநிறைய சம்பளம் வாங்கும் மேல்தட்டு வர்க்க பெண்கள்( எல்லா பெண்களும் அல்ல ) பார்ட்டிகளிலும்,பப்பே,டிஸ்கொத்தே போன்ற நிகழ்ச்சிகளிலும் குடித்து கும்மாலமடிப்பதை செய்திகளிலும் பத்திரிகைகளிலும் அன்றாடம் 
நாம் படிகின்றோம். 

குடி‌ப்பத‌ற்கு மு‌ன் எ‌வ்வளவு ந‌ல்லவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்களோ, போதை தலை‌க்கே‌றியது‌ம் அ‌வ்வளவு‌க்கு அ‌வ்வளவு ‌தீய செய‌ல்க‌ளி‌ல் எ‌ந்த ‌தய‌க்கமு‌ம் இ‌ல்லாம‌ல் இற‌‌ங்கு‌கிறா‌ர்க‌ள். குடி‌ப்பதாலேயே பலரு‌க்கு‌ம் தவறு செ‌ய்ய அனை‌த்து உ‌ரிமையு‌ம் இரு‌ப்பதாக ‌நினை‌த்து மனை‌வியை அடி‌ப்பது, குழ‌ந்தைகளை அடி‌ப்பது, தெரு‌வி‌ல் போவோ‌ர் வருவோ‌ரிட‌ம் ச‌ண்டை போடுவது என பலவாறான ‌தீய செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடு‌கிறா‌ர்க‌ள்.

ஒரு ந‌ல்ல குடு‌ம்ப‌ம், குடு‌ம்ப‌த் தலைவ‌னி‌ன் குடி‌ப்பழ‌க்க‌த்தாலேயே கெ‌ட்டு ‌சீரழிந்து  போனதை ந‌ம்‌மி‌ல் பலரு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம். இ‌ன்னு‌ம் எ‌த்தனையோ குடு‌‌ம்ப‌ங்க‌ள் ‌சீ‌ர‌ழி‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதையு‌ம் க‌ண்கூடாக பா‌ர்‌த்து‌க் கொண்டிருக்கிறோம்.

கூ‌லி வேலை செ‌ய்பவ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, எ‌த்தனையோ பெ‌ரிய ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் பெ‌ரிய பத‌விக‌ளி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் நப‌ர்க‌ள் கூட, த‌ங்களது ச‌ம்பா‌த்‌திய‌த்தை முழுவது‌ம் டா‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ளி‌லேயே செலவ‌ழி‌த்து‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு போவதை பா‌ர்‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்.

குடி‌ப்பழ‌க்க‌த்தா‌ல் குடு‌ம்ப‌த்தை இழ‌ந்தவ‌ர்க‌ள் பல‌ர், வா‌ழ்‌க்கையை தொலை‌த்தவ‌ர்க‌ள் பல‌ர், கு‌ற்றவா‌ளிகளானவ‌ர்க‌ள் பல‌ர், உ‌ற்றவரை கு‌‌ற்றவா‌ளியா‌க்‌கியவ‌ர்களு‌ம், உ‌யிரையே இழ‌ந்தவ‌ர்களு‌ம் பல‌ர் உ‌ள்ளன‌ர். இ‌ப்படி‌யிரு‌க்கு, அ‌ந்த குடியா‌ல் அடையு‌ம் ந‌‌ன்மைதா‌ன் எ‌ன்ன?


சாலை‌யி‌ல் நட‌க்கு‌ம் பல வாகன ‌விப‌த்துகளு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌க் காரணமாக குடிய‌ல்லவா இரு‌க்‌கிறது. வாகன‌த்‌திலு‌ம் ச‌ரி, வா‌ழ்‌க்கை‌யிலு‌ம் ச‌ரி ‌விப‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் இ‌ந்த குடி எ‌ன்ற அர‌க்கனை ந‌ம் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வராம‌ல் தடு‌க்க வே‌ண்டாமா? சமுதாய‌த்தையே ‌சீர‌ழி‌க்கு‌ம் குடியா‌ல் ‌உ‌ங்க‌ள் குடி கெட வே‌ண்டுமா?

குடி‌ப்பதை மற‌ப்போ‌ம், குடு‌ம்ப‌த்தை ‌காப்போம்.
                                                                                           

சனி, 23 அக்டோபர், 2010

ரசிக்கத் தெரிந்த மனமே ! உனக்கு ? பகுதி- 2


ரசிக்க தெரிந்த மனமே !உனக்கு ? பகுதி -1  படிக்க இங்கே  

என் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார்,அவர் எது அணிந்தாலும் அவருக்கு அது பொருத்தமாகவே இருக்கும்.ஆனால் அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த்ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒருமுறை அதை கேட்கவும் செய்தேன்." நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை" என்றார். 

என்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ,அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை.நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ,அதை பின் பற்றுவதுரசனை இல்லை. " நானும் இருக்கிறேன் ... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துகொள்ளுங்கள் என்பதற்கான முயற்சி. 

நீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால்,அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறொரு ரகமாக இருக்கலாம்.முடிந்தால் அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
நீரோடையின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு
நீரோடைக்கு அப்பால், அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம்.

பூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துக் கிடக்கலாம்...... காய்ந்து கிடக்கும் கருவேல மரங்களைக் கவனித்துக் கொண்டு இருப்பவரின் ரசனைக்கு ஒரு காரணம் இருக்கும்.


மேல்தட்டு வாழ்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர்வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத் தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்பதைப் போலவே,இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.இதில் உயர்வென்ன...தாழ்வு என்ன ? 

எல்லா ரசனைகளும் உயர்வானதுதான்.அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம்.அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.  மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்யமுடியாது.

முடிந்தால் அடுத்தவரின் ரசனையில் இருக்கும் " ரசனைகளையும்" அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்..... 

நன்றி : திரு : கோபிநாத் 
           மற்றும் ஆனந்தவிகடன் 

                                                                                            நட்புடன் 
                                                                                            அபுல்.