ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி-4 )


தொடர்ச்சி...................

மருத்துவமனைகள் தவிர தனிப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும் தமிழகத்தில் வெற்றிகரமாக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கும் லைப்செல் நிறுவனம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.பிரசவத்தின் போது அப்புறப்படுத்தப்படும் தொப்புள் கொடி ரத்த திசுக்களை எடுத்து பல ஆண்டுகள் பதப்படுத்தி வைத்து,தீவிர நோய்த் தாக்குதல் ஏற்படும்போது அதனை மருந்தாக பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. 

இத்துறையில் நாட்டின் ஒரேயொரு நிறுவனமும் இதுதான். அண்மையில் குறைந்த செலவில் இம்மதிரிகளைப் பாதுகாக்க ஒரு எளிய கட்டண திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்தது. " பெரும்பாலான மருத்துவமனைகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன

.நாங்கள் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக இருப்பதால் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மருந்து தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடமுடிகிறது " என்கிறார் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவமனையின் சி.இ.ஓ. மகேஷ் வக்கமுடி.

மருத்துவ உபகரணங்கள்,செயற்கை மனித உறுப்புகளை வெளிநாடுகளில் இருந்து தருவிக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது.இதனை கவனித்த" மியாட்" மருத்துவமனை,இந்தியர்களுக்கு ஏற்ற மூட்டுகளை வடிவமைக்கும் பிரிவு ஒன்றைத் துவக்கி இருக்கிறது.மருத்துவ உபகரண தயாரிப்பு என்பது ஆங்காங்கு தமிழகத்தில் நடந்தாலும் பெருமளவு உற்பத்தித் தொழிலாக அது வளரவில்லை.

இப்போது அந்த கதையும் மாறப்போகிறது. கடந்த மாதம சென்னையைச் சேர்ந்த"டிரிவிட்ரான்" நிறுவனம் ஆசியாவிலேயே முதன்முறையாக மருத்துவ தொழில்நுட்ப பூங்காவை சென்னை இருங்காட்டுக்கோட்டையில் துவக்கி இருக்கிறது. ரூ. 300 கோடி செலவில் அமைய இருக்கும் அப்பூங்காவில் பத்து நிறுவனங்கள் இடம் பிடிக்கும்.அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி சந்தையாக வளர இருக்கும் மருத்துவ உபகரணத் தொழில் தமிழகத்தின் பங்கு கணிசமாக இருக்கப்போகிறது.

மத்திய மாநில அரசுகளின் பெரும் பங்களிப்பு,தனியார் துறையுடனான இணக்கமான உறவு ஆகியவற்றால் தமிழகத்தில் போது சுகாதாரத் துறை வலுவாக இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு இணக்கமான அரசு எந்திரம் இருப்பதால் மருத்துவத் தொழில் துறையும் விண்ணை நோக்கி பயணிக்கிறது. ஆனால் இதற்கிடையில் மருத்துவக் கல்வி பெரும் வணிக விஷயமாக மாறிவிட்டதை இரு தரப்பும் வெளிப்படையாக ஒப்புகொள்வதில்லை.

அரசாங்கத்தின் கிடுக்கிப் பிடியும் தனியார்துறையின் பொறுப்புணர்வும் இணைந்து செயல்பட்டால்தான் மருத்துவத் தொழில் வணிகமயமாவதை தடுக்கமுடியும்.தமிழக பொது சுகாதாரத்துறை நகர்ப்புறம்,முதல் பட்டிதொட்டி வரை வலுவாகப் பரவியிருந்தாலும்கூட அத்துறையின் அங்கமாக இருக்கும் ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

 சுகாதாரத் துறையில் நிரந்தரமற்ற பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம்." 20 ஆண்டுகளாக பணியாற்றினால்கூட ஒரு கிராம சுகாதார செவிலியருக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை.ஆனால் இதே கல்வித்தகுதியில் ஆண்கள் பணியமர்த்தப்பட்டால் அவர்களுக்கு வட்டாரஅளவில் பதவி உயர்வு கொடுக்கிறார்கள்.சுகாதாரத்துறையின் வெற்றியில் ஒவ்வொரு கடைமட்ட ஊழியரின் வியர்வையும் ரத்தமும் இருக்கிறது என்கிறார் கிராம சுகாதார செவிலியர்-பகுதி சுகாதார செவிலியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவி விஜயலட்சுமி.

அரசு மருத்துவமனைகளுக்கு அரசு தாரளமாக நிதியை ஒதுக்குகிறது.அதனை பயன்படுத்தி அரசு மருத்துவமனைகள்,சுகாதார நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.ஆனால் தமிழக அரசியல் புள்ளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்ற ஒரு செய்தியை நீங்கள் கேள்விபடவே முடியாது. 

இருப்பினும் அண்மையில் கலைஞர் காப்பீட்டுத்திட்ட விழாவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அனுப்பியிருந்த வாழ்த்துச்செய்தியில் " தமிழகம்தான் பொது சுகாதாரத் துறையில் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கிறது "  என்று குறிப்பிட்டிருந்தார். அதனை மறுக்க யாராலும் வலுவான எதிர் வாதங்களை வைக்க முடியாது.ஏனென்றால் ஆதரவாகச் சொல்வதற்கு தமிழகம் வசம் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.  

முற்றும்.
Source: Indiatoday  

5 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றி அபுல்பசர்.

Unknown சொன்னது…

வாங்க அக்பர்.

TechShankar @ டெக்‌ஷங்கர் சொன்னது…

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல தொடர்; நன்றி அபுல் பசர்

Tamilparks சொன்னது…

அருமையான தொடர் வாழ்த்துக்கள்