புதன், 30 ஜூன், 2010

அறிஞர் அண்ணா: ஒரு சிறப்புப் பார்வை(இறுதி பகுதி)
 
"கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும்.

அதுபோன்றே " எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,மறப்போம் மன்னிப்போம்,கத்தியை தீட்டாதே புத்தியைத்  தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க,  ஏழையின் சிரிப்பில் இறைவனைக்  காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, 

இதுபோன்ற  பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும்,பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த  எடுத்துகாட்டுகளாகும்.

புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். வாசிக்கும் திறந்தான் ஒரு மனிதனை அறிவுடையவனாக அடையாளம் காட்டும்என்பார் அண்ணா.பழைய மூர் மார்க்கட்டில் இருந்த யுனிவர்சல், சென்னை ஹிக்கிம்பாதம்ஸ், இந்த இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கில புத்தகங்களையும் வாங்கிவிடுவார்.

ஹிக்கிம்பாதம்ஸ் எடுத்த கணக்கின்படி மைசூர் மகாராஜா சாம்ராஜ் உடையாரும்,அண்ணாவும்தான் அந்தக் காலத்தில் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்கலாம்.

திங்கள், 28 ஜூன், 2010

அறிஞர் அண்ணா :ஒரு சிறப்புப் பார்வை (பகுதி-2 )
   
தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. 

அறிஞர்  அண்ணா அவர்கள் 1962 லிருந்து 1967 வரை மாநிலங்கவை உறுப்பினராக பதவி வகித்தார். 1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னையும்,கழகத்தையும் அதில் தீவிரமாக ஈடு படுத்திகொண்டதால் தமிழக மக்களின் பேராதரவு அவருக்கும்,தி.மு.க விற்கும் கிடைத்தது.  

1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தார்அண்ணா. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். 

ஞாயிறு, 27 ஜூன், 2010

அறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை ! 

அப்பாவியாக தோற்றமளித்த அறிஞன்.எதிராளியையும் வசப்படுத்திய வைசியன்.குரலால்,எழுத்தால்,ஆண்ட மன்னன்.தமிழ் நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா.

சி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் "தளபதி" .பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார்.அதன் பிறகு எல்லோருக்கும்  அவர் அண்ணாதான்.

பள்ளியில் படிக்கும்போதே பொடி போடும் பழக்கம் கொண்டவர்.கல்லூரிக் காலத்தில் வெற்றிலை போடும் பழக்கத்திற்கு ஆளானார்.அதன் காரணமாக எச்சில் துப்ப வகுப்பில் ஜன்னல் ஓரமாக அமர்ந்துகொள்வார்.வெற்றிலை போடும்  பழக்கம் அவரின் மரணம் வரை இருந்தது.

வெள்ளி, 25 ஜூன், 2010

செம்மொழிகளில் வாழும் மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே: ஆய்வரங்கத்தில் தமிழுக்கு புகழாரம்

 
கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது.  இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி தலைமை வகித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

கிரிகோரி ஜேம்ஸ்:- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர். அவரது பேச்சு: மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

உல்ரிக் நிக்லாஸ்:- (ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.) நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. 

புதன், 23 ஜூன், 2010

வாருங்கள் வாழ்த்துவோம்:அன்னைத் தமிழுக்கு மகுடாபிசேகம்

பிறப் பொக்கும்
 எல்லா உயிர்க்கும் 

இன்று சூன் 23  தேதி தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்னாள்.ஆம்.இன்று கோவையில் செம்மொழியாம் நம் தமிழ் மொழிக்கு,தமிழ் அன்னைக்கு மகுடாபிசேகம் நடைபெறும் நாள்.

இதற்க்கு முன்னாள் நடைப்பெற்ற உலகதமிழ் மாநாடுகளைவிட 
இன்று நடைபெறும் இந்த மாநாடு ஒரு வகையில் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. காரணம் "செம்மொழி" என்ற அந்தஸ்து கிடைக்கப்பெற்ற பிறகு நடைபெறும் முதலாவது மாநாடாகும். 

கோவை மாநகரேமே இன்று விழாகோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் எல்லா சாலைகளுமே கோவையை நோக்கியே.தமிழகத்தில் திருவிழா கொண்டாட்டமாக செம்மொழி மாநாடு சிறப்பிக்கப் படுகிறது.

திங்கள், 21 ஜூன், 2010

கட்சி தாவல் : கழகங்கள் போடும் கணக்கு ?

அற்ற நீர்குளத்து அறுநீர் பறவைபோல்' அ.தி.மு.க., என்ற குளத்தில் இருந்து பறக்கும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க., தலைமை தனது அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பது இந்த பறவைகளால் அந்த கட்சிக்கு கிடைத்த நன்மை.


பறந்து வரும் பறவைகளுக்கு அடைக்கலம் தரும் கூடாரமாக தி.மு.க., மாறி வருகிறது. வந்தவர்களை வரவேற்ற நிலை மாறி, "வாருங்கள்... வாருங்கள்...' எனஅழைக்கும்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ளது தி.மு.க., தலைமை.அ.தி.மு.க.,வை நிலைகுலையச் செய்ய, ஆளுங்கட்சி நடத்தும் இந்த இழுப்பு வேலைகள், அவர்களது கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில், ஆளுங்கட்சியும், அதில் இணைபவர்களும், எதிர்காலக் கணக்குகளை போட்டுப் பார்த்த பின்புதான், இணைப்பு வைபவம் நடந்து வருகிறது.


தூத்துக்குடியில் பெரியசாமியின் இடத்தை எதிர்காலத்தில் நிரப்பவும், பெரியசாமிக்கு, "செக்' வைக்கவும் ஒரு ஆள்தேவை என்பது தி.மு.க.,வின் கணக்கு. தூத்துக்குடி தி.மு.க.,வில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம், இதே சொல்வாக்குடன் அரசியலைத் தொடர முடியும் என்பது அனிதா ராதாகிருஷ்ணனின் எதிர்பார்ப்பு.

ஞாயிறு, 20 ஜூன், 2010

ரூ. 16 கோடிக்கு ஏலம் போன இந்தியரின் ஓவியம்:

  
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைசிறந்த ஓவியர் சயீது ஹைதர் ராசா, இந்திய கலாசாரத்தை மையமாக வைத்து வரைந்த நவீன ஓவியம், லண்டனில் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு, சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் பிரபல ஓவியர் சயீது ஹைதர் ராசா. தற்போது பிரான்சில் வசிக்கிறார். தலைசிறந்த ஓவியரான இவரின் ஓவியங்கள், இதற்கு முன் பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.


சனி, 19 ஜூன், 2010

உலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை

 
 
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின், தற்போது முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடக்கிறது. தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடு. தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள், பண்பாடு, தமிழ் மொழி வரலாறு, தொல்லியல் ஆய்வுகள், கலைகள், மொழியியல் பற்றி இம்மாநாட்டில் புதிய உண்மைகள் வெளியாகும் என்பதால் தமிழ் அறிஞர்களிடமும் மாணவர்களிடமும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


தற்போது நடைபெறும் செம்மொழி மாநாடு, இதற்கு முன் நடந்த மாநாட்டின் தொடர்ச்சி அல்ல. தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் முதல் மாநாடு. உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் கடின முயற்சியின் விளைவாக 1964ம் ஆண்டு, டில்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் துவக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்த வேண்டும் என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது. முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.


இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது. மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.

வியாழன், 17 ஜூன், 2010

வானம் :தொட்டுவிடும் தூரம்தான்.

கனா ஒன்று கண்டேன் கனவில் 
கருப்பு வெள்ளையில் அல்ல 
வானவில்லின் வண்ணத்தில்

எட்டிப்பிடிக்க எத்தனித்தேன்
விலகி சென்றது 
விலகி நின்றேன் 
ஏளனமாய் சிரித்தது

நம்பிக்கையுடன் நடந்தேன் 
தூரத்தில் ஒரு புள்ளி 
ஒளி வட்டமாய்  

தன்னம்பிக்கை சொன்னது 
முயன்றால் முடியும்
வானம் தொட்டுவிடும் தூரம்தான்.

புதன், 16 ஜூன், 2010

அறிவியலும் தொழில்நுட்பமும் !

                               உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்
  
 

சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலை வனத்தில் இருக்கும் மலை உச்சியில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் இந்த டெலஸ்கோப் அமைகிறது. பூமி போன்ற பெரிய கோள்கள் முதல் சிறிய கோள்கள் வரை ஆராயும் சக்தி கொண்டதாக இந்த டெலஸ்கோப் இருக்கும். கருந்துளைகள் மற்றும் விண்வெளியில் நிலவும் பாதிப்பு களையும் இந்த டெலஸ்கோப் மூலம் விஞ் ஞானிகள் ஆராய முடியும். 

                   மாரடைப்பை குணப்படுத்தும் ஸ்டெம் செல்கள் 
 

மாரடைப்பை ஸ்டெம் செல்கள் மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த ஸ்டெம் செல்கள் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களையும் குணப் படுத்த முடியும் என்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக் கழக நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளனர்.

செவ்வாய், 15 ஜூன், 2010

இந்தியாவின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் சென்னையில்...


வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை துவங்குவது தொடர்பான சட்ட மசோதா கடந்த மார்ச் மாதம் லோக்சாபாவில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா டெக்னாலஜி பல்கலைக்கழகம் (வர்ஜீனியா டெக்) தனது கிளையை இந்தியாவில் துவங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் கிளையை துவங்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் இதுவே. அதுவும் சென்னையில் இப்பல்கலைக்கழகம் அமைய உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலமான மார்க் ஸ்வர்ணபூமி என்ற இடத்தில் இப்பல்கலைக்கழகம் அமைகிறது.
இதற்கான ஒப்பந்தம் பல்கலைக்கழகத்தின் தலைவர் சார்லஸ் மற்றும் மார்க் ஸ்வர்ணபூமி நிர்வாக இயக்குனர் ரெட்டி ஆகியோர் இடையே
கையெழுத்தாகியுள்ளது.


திங்கள், 14 ஜூன், 2010

விருந்தின் விலை ரூ.12 கோடி.! அம்மாடியோ ?

 உலகின் மூன்றாவது  பணக்காரரான " வாரன் பப்பட்" உடன் சாப்பிடுவதற்காக நடைபெற்ற ஏலத்தில் ஒருவர் ரூ.12  கோடி தருவதாக ஒப்புக்கொண்டு ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

அமெரிக்காவின் சான்பிரான்ஸ்சிஸ்கோ நகரில்  இயங்கி வரும் " கிளைடு பவுண்டேசன் " என்ற தொண்டு நிறுவனத்திற்கு நிதி  திரட்டுவதற்காக இந்த ஏலம் நடைபெற்றது.

இதற்கு உலகின் மூன்றவது பணக்காரரும்,பெர்க்சையர் ஹாத்வே " என்ற இன்சூரன்ஸ் முதலீட்டு நிறுவன அதிபருமான வாரன் பப்பெட் கடந்த 10  ஆண்டுகளாக நிதி திரட்டி வருகிறார். 

ஞாயிறு, 13 ஜூன், 2010

இந்தியா:லேசர் வெடிகுண்டு சோதனை வெற்றி!   
பெங்களூரில் இயங்கி வரும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர். டி.ஓ.) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள அதிநவீன ‘லேசர் கைடு பாம்’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
 
இது குறித்து டி.ஆர்.டி.ஓ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
நாட்டின் பாதுகாப்புக்கு தேவைப்படும் போர் தளவாடங்கள், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் சார்பில் பெங்களூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், போர் விமானங்கள் மூலம் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் படைத்த ‘லேசர் கைடு பாம்’ என்ற நவீன வெடிகுண்டு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

செயல்படுவது எப்படி?

ஒளிக்கற்றை மூலம் இலக்கை துல்லியமாக கணித்து, அதை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படுவதுதான் ‘லேசர் கைடு பாம்’. அமெரிக்கா இதை 1960ம் ஆண்டிலேயே தயாரித்து, வியட்நாம் போரில் பயன்படுத்தியது. போர் விமானங்களில் இருந்து வீசப்படும் சாதாரண வெடிகுண்டுகள் குத்து மதிப்பாகவே வீசப்பட்டு, இலக்குகள் தகர்க்கப்படுகின்றன. அது, நூறு சதவீதம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்க முடியாது.

வெள்ளி, 11 ஜூன், 2010

தமிழக கல்லூரி மாணவர் உலக சாதனை  


உலகின் 124 நாடுகளைச் சேர்ந்த மூன்று லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டியில் கலந்து கொண்டு மனிதக் கழிவுகளை எளிய வகையில் பயனுள்ளதாக மாற்றி, அதை எரிசக்தியாக மாற்ற முடியும் என சாதித்தார் தமிழக கல்லூரி மாணவர்.


அமெரிக்க நாட்டின் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் இடையே "இமேஜின் கப்' என்ற பெயரில் உலகளாவிய போட்டியை நடத்துவது வழக்கம். இதில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொள்வர்.

இந்த ஆண்டுக்கான போட்டியில் இந்தியா உட்பட 124 நாடுகளைச் சேர்ந்த மூன்று லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மொத்தம் ஆறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தாலும், கடும் போட்டிகளை சமாளித்து இன்விஷனிங் 2020 அவார்டு என்ற பிரிவில் இந்திய மாணவ, மாணவியர் தங்கள் பங்கை அளித்தனர்.

வியாழன், 10 ஜூன், 2010

நாறும் நாடாளுமன்றங்கள்! புகைப்படங்கள் ?

ஒவ்வொரு நாட்டின் நாடாளுமன்றமும் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய உச்ச அதிகாரம் கொண்ட சபையாக இருக்கிறது. உலகத்தில் உள்ள எல்லா நாட்டிற்கும் இது பொருந்தும்.
அந்த நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராக செல்பவர்கள் அந்தந்த தொகுதி மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார்களோ இல்லையோ. சண்டை போடுவதில் மற்றும்
கில்லாடியாக இருக்கிறார்கள். 
இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல என்பதைத்தான் இந்த படங்கள் உணர்த்துகின்றன.இதில் விதிவிலக்காக சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யாருக்கும்,எந்த தொந்தரவு இல்லாமல் தூங்கியே
நாடாளுமன்றத்தில் நேரத்தை கழிகின்றார்கள். வாழ்க ஜனநாயகம் (சீனாவில் அது இல்லை என்பது வேறு)
                                  
                                     துருக்கி நாடாளுமன்றம்  

                                              மெக்சிகோ 
                                           தென்கொரியா 
        

புதன், 9 ஜூன், 2010

பூமியை சூரியன் விழுங்கி விடுமா ?


 

இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது. 
அதை சூரியன் விழுங்கி விடும் என வானியல் நிபுணர்கள்
கணித்துள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தின்
வானியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஸ்மித் 
தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

சூரியன் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இப்படியே போனால் இன்னும் 760 கோடி ஆண்டுகளில் அது பூமியை விழுங்கி விடும். சூரியனின் வெப்பம் காரணமாக பூமியில் எதுவும் இருக்காது எல்லாம் சாம்பலாகி விடும். சூரியனின் வெப்பத்தால் கடல்கள் அனைத்தும் ஆவியாகி முற்றிலுமாக வற்றிப் போய் விடும் என்கிரார் ராபர்ட் ஸ்மித்.


செவ்வாய், 8 ஜூன், 2010

விழாக் கோலம் பூண்டது தென் ஆப்ரிக்கா!

      

 


உலகிலேயே அதிகமான நாடுகள் பங்கேற்கும், அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை முதன்முறையாக தென்னாப்பிரிக்கா நடத்துகிறது.
வருகின்ற 11.06.2010. வெள்ளிகிழமை அன்று போட்டிகள் தொடங்குகின்றன.இப்போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டிகள் 4 நாடுகளாக 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே  உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.  

ஜோகன்னஸ்பர்க் தம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போட்டி நடைபெறும் கால்பந்து மைதானம் வரையிலான சாலைகள் மிகவும் அழகாகவும் , அற்புதமாகவும் சீரமைக்கப்பட்டுள்ளன. 
தென்னாப்பிரிக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், அலுவலகங்கள் மற்றும், கார்களில் உலகக் கோப்பையை நினைவுகூரும் வகையில் வண்ணமயமான கொடிகளும், முக்கிய பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஏராளமான விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. 

திங்கள், 7 ஜூன், 2010

தமிழ் இணைய மாநாட்டில் புதிய மென்பொருள்களின் அணிவகுப்பு


  
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் கண்காட்சியில், தமிழில் உருவாக்கப்பட்டுள்ள ஏராளமான புதிய மென்பொருள்கள் இடம் பெறுகின்றன. 

தமிழ் இணைய மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 400 பேர் பிரதிநிதிகளாகப் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 120 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.தமிழ் இணைய மாநாட்டின் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 

பல்வேறு அரசுத் துறைகள், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, கணித் தமிழ்ச் சங்கம், உத்தமம் அமைப்பு, ஊடகங்கள், மென்பொருள் நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன.இந்த அரங்குகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இணையதள வசதி கொடுக்கப்படுகிறது. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் ஏறத்தாழ ரூ.1 கோடி செலவில் கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. 

வெள்ளி, 4 ஜூன், 2010

உலகின் அதி விலை உயர்ந்த பரிசுபொருட்கள்?

உலகின் அதி விலைஉயர்ந்த பரிசு பொருட்களின் படங்கள் இவை . விலையை பார்த்து மயக்கம் போட்டு விழுந்து விடார்தீர்கள்.உங்களில் யாருக்காவது இந்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி உங்களின் விருப்பமானவர்களுக்கு கொடுக்கக் கூடிய சந்தர்பம் கிடைக்காமலா போய்விடும்.

       Blue diamond Cost 7.98 million dollars
 
Frozen Haute Chocolate Dessert cost 25,000 dollars
   Diva Premium vodka spirit cost 1,060,000 dollars 
                Earrings cost 8.5 million dollars 
    

வியாழன், 3 ஜூன், 2010

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்? 
புத்திசாலிதனத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் மூளையின் அமைப்பில் சின்ன,சின்ன வித்தியாசங்கள் உண்டு.பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட ஆண்களின் மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம்.

அதனால்,மூளையின் எடையும் ஒரு 100 கிராம் அதிகம்.( அதாவது ஆண்களுக்கு தலைக்கனம் அதிகம்) பெண்களின் மூளையில் செல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,செல்களுக்கிடையே உள்ள இணைப்பு அதிகம். அதாவது, பெண்கள் குறைந்த அளவு செல்களை வைத்துகொண்டு விரைவாக வேலை செய்கிறார்கள்.
          
மூளையில் லிம்பிக் சிஸ்டம் என்றொரு அமைப்பு இருக்கிறது.இதுதான் நமது பலவித உணர்ச்சிகளைக் கையாள்கிறது. இது,ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். இதன் விளைவாக மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது,உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திகொள்வது,ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் மேலானவர்கள்.

இதனால்தான் குழந்தைகளைக் கவனிப்பது,வீட்டைப் பராமரிப்பது, போன்ற விசயங்களைப் பெண்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள்.உலகத்தின் எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் இதுதான் நியதி. மூளையின் இடப்பக்கம் ,கணக்குப் போடுவது, தர்க்க ரீதியான சிந்தனைகள் இதற்கு பொறுப்பு. 

மூளையின் வலப்பக்கம் மொழியாற்றல், பேச்சுத்திறன் இதற்கு பொறுப்பு. இடப்பக்க மூளையையும் வலப்பக்க மூளையையும் கோர்பஸ் கோலோசம் (corpus colosum) என்ற ஒரு " சாலை " இணைக்கிறது. ஆண்களைவிடப் பெண்களின் மூளையில் இந்த சாலை பெரியது.  அதன் காரணமாகப்  பெண்களின் மூளையில் தகவல் பரிமாற்றங்கள் மிக வேகமாக நடக்கின்றன. 

இதனால் பெண்கள், மூளையின் இரண்டு  பக்கங்களையும்  அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொழியை கற்றுகொள்வதில் ஆரம்பித்து, உள்ளுளணர்வு என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு திறன் சற்று  கூடுதல். ஆண்கள் கணக்குப் போடுவதில் கில்லாடிகள்.   

நன்றி:
புதிய தலைமுறை.

புதன், 2 ஜூன், 2010

அழகிய ஓவியங்கள் ?

           நீங்கள் பார்க்கும் இந்த  ஓவியங்கள் எவ்வளவு அழகாகவும், தத்ரூபமாகவும்            

                                             வரையப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.
                                                             முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.