சனி, 7 நவம்பர், 2009

தமிழக காவல்துறையை கலங்கடித்த பெண் ஏட்டுகளின் மரணங்கள்

தமிழக காவல் துறைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக போலீசாரை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. 98 ஆயிரத்து 858 போலீசாரும் 73,410 சிறப்பு காவல்படை போலீசாரும் உள்ளனர். 632 மக்களுக்கு 1 போலீஸ் என்ற நிலை உள்ளது.
அதே போன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பெண் போலீசாரும் உள்ளனர். முதல் முதலாக மகளிர் போலீஸ் நிலையமும் தமிழ்நாட்டில்தான் ஏற்படுத்தப்பட்டது.
இப்படி புகழ்பெற்ற தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பதிலும் சிறப்பாகவே செயல்படுகிறது. அதனால் தான் 2002ல் 26,696 ஆக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2008ல் 19ஆயிரத்து 410 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
திருடர்களையும், ரவுடிகளையும் ஒடுக்கி குற்றங்களை தடுக்கும் விஷயத்தில் சட்டை காலரை தூக்கி விட்டு கொண்ட தமிழக காவல்துறைக்கு சமீபத்தில் ஏற்பட்ட 2 பெண் ஏட்டுக்களின் துர் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. பெண் ஏட்டுக்களான திருப்பூர் ஜெயமணி, காயத்திரி மாலாவுக்கு ஏற்பட்ட முடிவுதான் இதற்கு காரணம்.
அப்பாவி ஏட்டு ஜெயமணிக்கு ஒரு கொடூரகாமுகனால் துர்மரணம் ஏற்பட்ட தென்றால் சிறைகாவலரான ஏட்டு காயத்ரி மாலாவுக்கு அவரது கள்ளக்காதலனால் துர் மரணம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய ஜெயமணி, கடந்த செப்டம்பர் மாதம் பணி விஷயமாக பெருமாநல்லூர் என்ற இடத்தில் பாதுகாப்பு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல முயன்றார்.
இரவில் ஆண் நடமாட்டம் இல்லாத ரோட்டில் தனியாக வந்த ஏட்டு ஜெயமணியைலிப்ட்கொடுப்பது போல நடித்து ஆத்தூரை சேர்ந்த வேன் சங்கர் என்பவர் காட்டுக்குள் கடத்திச் சென்று கற்பழித்தார். பிறகு கத்தியால் குத்தி கொன்றான்.
பெண் போலீசார் இந்த அதிர்ச்சியில் இருந்து மிள்வதற்குள் சேலம் மத்திய சிறையில் ஏட்டாக பணியாற்றிய கோவையை சேர்ந்த காயத்ரி மாலா, சங்ககிரி அருகே ஒரு காட்டுப்பகுதியில் தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் சிறையில் காவல் பணியில் இருந்த காயத்ரி மாலாவுக்கும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த சங்ககிரி சரவணனுக்கும் சிறைக்கு உள்ளேயே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. முதல் திருமணம் தோல்வியில் முடிந்து 2-வது திருமணமும் செய்த ஏட்டு காயத்ரி மாலா ஆயுள் தண்டனை கைதி சரவணனை கள்ளக்காதலனாக தேர்வு செய்து உள்ளார்.
சிறையைவிட்டு பரோலில் வெளியான சரவணன் தலைமறைவாக சுற்றி உள்ளார். தன்னை வாரம் 1 முறை சந்தித்து உல்லாசமாக இருக்காவிட்டால் போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என மிரட்டியதால காயத்ரி மாலாவை சரவணன் தலையில் கல்லை போட்டு கொன்றது தெரிய வந்தது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் நடத்திய தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட ஏட்டு ஜெயமணி பாதையில் லிப்டுக்கு தவறான ஆளை தேர்வு செய்ததும் சிறைக்காவலிலும் ஏற்பட்டு காயத்ரிமாலா வாழ்க்கையில் தவறான பாதையை தேர்வு செய்ததாலும் துர் மரணத்தை சந்தித்து உள்ளனர்.
இவர்களை கொன்ற ஆத்தூர் சங்கரும் சங்ககரி சரவணனும் தற்போது சேலம் சிறையில்தான் உள்ளனர். இவர்களுக்கு சிறையில் உணவு, வழங்கி பாதுகாப்பதும் போலீசாரின் கடமையாகிப் போவதுதான் கொடுமை!
ஏட்டு ஜெயமணியும் காயத்ரி மாலாவும் மற்றவர்களுக்கு உணர்த்துவது2 விஷயங்கள் தான் என்றனர் திருச்சி போலீசார். காவலரே ஆனாலும்... பெண் போலீசை... தனியாக பாதுகாப்புக்கு அனுப்ப கூடாது!
காவலரே... ஆனாலும்... குற்றவாளியுடன் பழக்கம் கூடாது.

கருத்துகள் இல்லை: