திங்கள், 16 நவம்பர், 2009

அமெரிக்காவின் அடாவடி தனம்


அமெரிக்காவில் உள்ள ஒரு முஸ்லிம் நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு மசூதிகளையும், நியூயார்க் நகரில் உள்ள மிக உயரமான பல அடுக்கு கட்டடம் ஒன்றையும், அமெரிக்க அரசாங்கம் கையகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் ஈரான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாக, சந்தேகத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அமெரிக்க சரித்திரத்திலேயே தீவிரவாதத்திற்கு எதிரான மிகப்பெரும் கையகப்படுத்தும் செயலாக அமையும்.

அலாவி ஃபவுன்டேஷன் (Alavi Foundation) என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான (சுமார் 235 கோடி ரூபாய்) சொத்துகளை முடக்க அரசு வழக்கறிஞர்கள், வியாழனன்று மத்திய அரசின் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சமர்ப்பித்துள்ளனர். அலாவி ஃபவுன்டேஷன் நிறுவனத்திற்கு நியூயார்க், மேரிலேன்ட், கலிபோர்னியா மற்றும் ஹுஸ்டனில் இஸ்லாமிய மையங்களும் மசூதிகளும் உள்ளன. தவிர விர்ஜினீயா மாநிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் மற்றும் நியூயார்க்கின் மன்ஹாட்டன் நகரில் 36 அடுக்கு கட்டடம் ஆகியனவும் உள்ளன. இவை அனைத்தையும் மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் பறிமுதல் செய்ய ஏற்பாடு நிகழ்ந்து வருகிறது. இது ஈரானுக்கு மிகப் பெரிய அடியாக அமையும்.

ஈரான் தீவிரவாத செயல்களுக்கு பண உதவி செய்து வருவதாகவும் அணு ஆயுதம் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. அதற்கான கடுமையான எதிர்நடவடிக்கையாக இதனை நிகழ்த்துகிறது.

அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள உள்ளது. அதன் வழக்கறிஞர் ஜான் டி. வி்ன்டர் (John D. Winter) ”இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம். அரசாங்கத்தின் புலன் விசாரனைக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக நல்ல ஒத்துழைப்பை அளித்தே வந்திருக்கிறோம். இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி.

இந்நேரம் .காம்

கருத்துகள் இல்லை: