ஞாயிறு, 8 நவம்பர், 2009

காதல் மனைவியை அழகூட்ட 8 ஆபரேஷன் செய்த டாக்டர் கணவன்

லண்டன்:காதல் மனைவியை அழகூட்ட, எட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தார் டாக்டர் கணவர். இந்த அறுவை சிகிச்சைகளை அவரே தன் வருங்கால மனைவிக்கு செய்தார்.ஜெர்மனியை சேர்ந்த புகழ் பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன் ரெசா வொஸாவ்(48). இவரின் காதலி கேனி; 33 வயதான இவர் ஓட்டல் பணிப்பெண்; திருமணம் செய்து கொள்ளுமுன், வருங்கால மனைவியை அழகியாக்க வேண்டும் என்று தீர்மானித்தார் டாக்டர் காதலன்.தேவையில்லாமல் அதிக சதை போட்ட இடுப்பு, தொடை, வயிறு போன்ற பகுதிகளில் அடிக்கடி "போடக்ஸ்' ஊசி மருந்தை செலுத்தி, பருமனை குறைத்தார். மார்பகத்தை பெரிதாக்க , "சிலிகான்' பஞ்சை பொருத்தினார்.இதுபோலவே, உதடு, கன்னம், நெற்றி, புருவங்கள் போன்ற இடங்களிலும் பேஷன் அறுவை சிகிச்சைகளை செய்தார். சதைப்பற்றை குறைக்க மட்டும், இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தார்.மற்ற இடங்களில் கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்தார். ஐந்தாண்டு வரை இந்த அறுவை சிகிச்சைகள் தொடர்ந்தன. அதன் பின் தான், கேனியை அவர் மணந்து கொண்டார். "கேனியை நான் ஓட்டலில் முதன் முதலில் பார்த்தபோது அவள் மிகவும் குண்டாக இருந்தாள். ஆனால், ஏதோ கவர்ச்சி காணப்பட்டது.பேஷன் மருத்துவரான நான், அவள் உடலில் சில முக்கிய பாகங்களில் அறுவை சிகிச்சை செய்தால் எப்படியிருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தேன். மகா அழகியாகி விடுவாள் என்று தோன்றியது. என் அறுவை சிகிச்சைகளுக்கு அவளும் ஒத்துழைத்தாள். அதனால் தான் இன்று பேரழகியாக இருக்கிறாள்; மாடல் அழகியாகவும் வலம் வருகிறாள்' என்று டாக்டர் வொஸாவ் தெரிவித்தார்.

1 கருத்து:

உதயம் சொன்னது…

தொழில் பழக கல்யாணம் பண்ணி இருப்பார் என நினைக்கிறேன் .