கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜூலை, 2010

எல்லைக் கோடும் ! வறுமைக் கோடும் ?

 
  
தேசத்தை பிரித்துக்காட்டுவது 
எல்லைக் கோடு

தேசத்தின் மக்களைப் பிரித்துபோடுவது 
வறுமைக் கோடு

எல்லைக் கோடு தேசத்தின் அடையாளம் 

வறுமைக் கோடு தேசத்தின் அவமானம் 

வறுமைக் கோட்டிற்கு மேல் -  வளமாம் 
வறுமைக் கோட்டிற்கு கீழ் -  பஞ்சமாம் 

செழிப்பின் நிறம் -      பச்சையாம்
வறுமையின் நிறம் -  சிவப்பாம் 
பிரித்தது யார்.
அதிகார வர்க்கமா, ஆளும் அரசா ?

கோடிகளில் புரளுகிறது  அங்கே ஒரு கூட்டம் 
தெருக் கோடி  குப்பைகளை புரட்டுகிறது இங்கே ஒரு கூட்டம்

வறுமை தேசங்கள் என்றால் நாம் கை காட்டுவது
ஆப்ரிக்க தேசங்களை 
வறுமைக் கோட்டிற்கு கீழ் இத்தனைக் கோடிபேர் இந்தியாவில் 
யுனெஸ்கோ நம்மை சுட்டிக்  காட்டுகிறது.

ஏன் இந்த சமமின்மை ? ஏன் இந்த பொருளாதார வேறு பாடு ?

வல்லரசு இந்தியா ! பெருமைதான் எமக்கு 
வறுமைக் கோட்டிற்கு கீழ் கோடி மக்கள்
எங்கே போய் முட்டிக் கொள்வது ?


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த 
ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய 

மீசை முறுக்கிய முண்டாசு கவிஞனே 

கோடிப் பேருக்கு உணவில்லையே இந்த பாரதத்தில் 
கோபம் கொண்டு யார் கோவணத்தை பறிப்பது ?


வளமையைக்  கொண்டு வறுமையை வெல்வோம் 
தோள் கொடு தோழா!
.







வெள்ளி, 16 ஜூலை, 2010

இடஞ்சுட்டி பொருள் விளங்கு !


 
மோதிப்பார் முயற்சியுடன் 
மலைகளும் மண் துகள்களாகும்  !
படித்துப் பார் கவனத்துடன்
பாடங்களும் பக்குவப்படும் !!

சிரித்துப் பார் மனம்விட்டு
சிலிர்த்துக்கொள்ளும்  இதயம்  ! 
சிந்தித்துப்பார் நிதானமாக
சிந்தைத் தெளிவு பெரும் !!



பேசிப் பார் பண்புடன்
பலரும்  பாராட்டுவர் !
பழகிப்பார் நட்புடன்
பகைவனும் பாசம்கொள்வான் !!

மறந்து விடு தீயதை
மனம் மகிழ்ச்சியுறும் 
வாழ்ந்துப்பார் ! நம்பிக்கையுடன் 
வாழ்க்கை வசந்தமாகும் !!!


நட்புடன்

வெள்ளி, 9 ஜூலை, 2010

புறப்படு தோழா! புது யுகம் படைத்திட !

 
 
நம்பிக்கை என்ற ஒளியை கொண்டு 
தன்னம்பிக்கையைத் தட்டிக் கொடு 

உளிகொண்டு மலையை சிலையாக்கிய 
உனக்கு இது எம்மாத்திரம்.
மூளையோடு மட்டும் கைகுலுக்கு 
முரன்பட்டோரை முடமாக்கு.

அறிவியல் கொண்டு அறியாமையை 
வென்று அதிகாரத்தை கைப்பற்று!

தலையெழுத்தை தண்ணீர்கொண்டு 
மறைக்க முடியாது 
உன் உழைப்பால், வெற்றியால் 
மாற்றமுடியும்...

எல்லா திசைகளும் உனக்கு கிழக்காகிப் போகும்.
புறப்படு தோழா புது யுகம்  படைத்திட !
 

வியாழன், 17 ஜூன், 2010

வானம் :தொட்டுவிடும் தூரம்தான்.





கனா ஒன்று கண்டேன் கனவில் 
கருப்பு வெள்ளையில் அல்ல 
வானவில்லின் வண்ணத்தில்

எட்டிப்பிடிக்க எத்தனித்தேன்
விலகி சென்றது 
விலகி நின்றேன் 
ஏளனமாய் சிரித்தது

நம்பிக்கையுடன் நடந்தேன் 
தூரத்தில் ஒரு புள்ளி 
ஒளி வட்டமாய்  

தன்னம்பிக்கை சொன்னது 
முயன்றால் முடியும்
வானம் தொட்டுவிடும் தூரம்தான்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

முடியும் உன்னால்

உன்னால் முடியும்
முயன்று பார்
முடியாதது எதுவும் இல்லை


அதி நவீன வசதி இல்லாத
போதே
ஓர் அதிசய தாஜ் மஹால்
முடியும் உன்னால்


முயற்சி திரு வினை ஆக்கும்.
முயன்றால் வானம் உன் வசப்படும்.