புதன், 11 நவம்பர், 2009

இதில்தான் இந்தியா முதல் இடம்


புதுடெல்லி, : கஸ்டமர்கள், ஊழியர்கள், சப்ளை மோசடி ஆகியவற்றால் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,500 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. ஷாப் லிப்டிங் எனப்படும் இந்த திருட்டில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் சிறிய கடைகள், ஷாப்பிங் மால்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் சரக்குகள் திருடு போவது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கை வெளியிடப்படுகிறது. குளோபல் ரீடைல் தெப்ட் பாரோமீட்டர் என்ற அந்த ஆய்வின் இந்த ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது. இதற்காக இந்தியா உட்பட 41 நாடுகளில் 1,069 பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு நடந்தது.
அதன்படி கடைகளில் நைசாக பொருள் திருடுவதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. சில்லறை திருட்டு மூலம் நம்நாட்டில் 3.2 சதவீத பொருட்கள் குறைகிறது. ஷாப்பிங் செய்ய வரும் கஸ்டமர், கடை ஊழியர்கள், சப்ளை நிறுவன ஆவண மோசடி ஆகிய வழிகளில் இந்த திருட்டு நடக்கிறது. இதனால், கடைகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.12,500 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
ஷாப் லிப்டிங் திருட்டில் எலக்டிரானிக் பொருட்கள், அழகு சாதனங்கள், மது, ஆடைகள், நகைகள் ஆகியவை மற்ற பொருட்களைவிட அதிகளவில் திருடப்படுகின்றன. மும்பையைச் சேர்ந்த ஜுவல்லரி நிறுவன தலைமை அதிகாரி கூறுகையில், நகைக் கடைகளில் வாடிக்கையாளராக நடித்து திருடுவது அதிகம் நடக்கிறது. இவர்கள் குழுக்களாக செயல்படுவதால் எளிதில் சிக்குவதில்லை என்றார். நகை, மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளின் பாதுகாப்பு செலவாக மட்டும் ஆண்டுக்கு ரூ.760 கோடி செலவிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை: