திங்கள், 30 நவம்பர், 2009

2.1 கோடி சீன செல்போன் இன்றுடன் இணைப்பு ரத்து


சர்​வ​தேச செல்​போன் அடை​யாள எண் ​(ஐஎம்​இஐ)​ இல்​லாத செல்​போன்​கள் திங்​கள்​கி​ழமை முதல் செயல்​ப​டாது.​ ஐஎம்​இஐ எண் இல்​லாத செல்​போன்​க​ளுக்கு நவம்​பர் 29-ம் தேதி​யு​டன் சேவை அளிப்​பதை ​ தொலை​தொ​டர்பு சேவை நிறு​வ​னங்​கள் நிறுத்​திக்​கொள்ள மத்​திய அரசு கெடு​வி​தித்​தி​ருந்​தது. அந்த கெடு முடி​வ​டைந்த நிலை​யில் ஐஎம்​இஐ எண் இல்​லாத செல்​போன்​க​ளுக்​கான சேவை நிறுத்​தப்​ப​ட​வுள்​ளது.​ முன்​னணி செல்​போன் நிறு​வ​னங்​கள் தயா​ரிப்​பில் சந்​தைக்கு விற்​ப​னைக்கு வரும் ஒவ்​வொரு ​ செல்​போ​னுக்​கும் தனித்​தனி சர்​வ​தேச செல்​போன் அடை​யாள எண் அளிக்​கப்​ப​டு​கி​றது. இந்த எண்,​ அந்த செல்​போன் எந்த நிறு​வ​னத்​தால் தயா​ரிக்​கப்​பட்​டது,​ அந்த செல்​போ​னின் மாடல் ஆகி​ய​வற்றை குறிக்​கும். ஐஎம்​இஐ எண் குறித்த தக​வல்​கள் அனைத்​தும் அந்த செல்​போ​னுக்கு சேவை அளிக்​கும் நிறு​வ​னத்​தில் தானா​கவே பதி​வா​கி​வி​டும்.​ கொரியா,​ சீனா உள்​ளிட்ட நாடு​க​ளில் தயா​ரிக்​கப்​பட்டு இந்​திய சந்​தைக்கு வரும் பெரும்​பா​லான செல்​போன்​க​ளில் இந்த ஐஎம்​இஐ எண் இருப்​ப​தில்லை. ​ பயன் என்ன?​​ ஐஎம்​இஐ எண் மூல​மாக ஒரு செல்​போ​னில் இருந்து மற்​றொரு செல்​போ​னுக்கு சென்ற அழைப்​பு​கள்,​ வந்த அழைப்​பு​கள் குறித்​தும்,​ எந்த இடத்​தில் இருந்து செல்​போன்​க​ளுக்கு இடையே தக​வல் பரி​மா​றிக்​கொள்​ளப்​பட்​டது என்​ப​தை​யும் எளி​தாக அறிந்​து​விட முடி​யும்.​ சமீ​ப​கா​ல​மாக பெரும்​பா​லான குற்ற சம்​ப​வங்​க​ளில் செல்​போன்​கள் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன. இந்​நி​லை​யில் ஐஎம்​இஐ எண் உத​வி​யு​டன் அந்த செல்​போன்​களை பயன்​ப​டுத்​தி​ய​வர்​கள்,​ அதில் வந்த அழைப்​பு​கள் குறித்த தக​வல்​களை குற்ற சம்​ப​வங்​களை விசா​ரிக்​கும் அதி​கா​ரி​கள் பெற்று வரு​கின்​ற​னர்.​ ஐஎம்​இஐ எண் இல்​லாத செல்​போன்​கள் குற்ற சம்​ப​வங்​க​ளில் பயன்​ப​டுத்​தப்​ப​டும் போது குற்​ற​வா​ளி​கள் குறித்து எவ்​வித தக​வ​லை​யும் பெற முடி​யாது. இத​னால்​தான் பயங்​க​ர​வா​தி​கள் பெரும்​பா​லும் ஐஎம்​இஐ எண் இல்​லாத செல்​போன்​களை பயன்​ப​டுத்தி தங்​க​ளது சதித்​திட்​டங்​களை கச்​சி​த​மாக அரங்​கேற்​றி​வி​டு​கின்​ற​னர்.​ இந்​தி​யா​வுக்கு பயங்​க​ர​வா​தி​க​ளின் அச்​சு​றுத்​தல் நாளுக்கு நாள் அதி​க​ரித்து வரு​கி​றது. இத​னால் இனி​மே​லும் ஐஎம்​இஐ எண்​கள் இல்​லாத செல்​போன்​கள் புழக்​கத்​தில் இருப்​பதை அனு​ம​திப்​பது நாட்​டின் பாது​காப்​புக்கு உகந்​த​தல்ல என மத்​திய அரசு கருதி,​ அது​போன்ற செல்​போன்​க​ளுக்கு உட​ன​டி​யாக சேவையை நிறுத்​து​மாறு அறி​வு​றுத்​தி​யது.

கருத்துகள் இல்லை: