ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் பிரதமர் தேர்தலில் 50
ஆண்டுகளில் இல்லாதகடும் போட்டி நிலவுகிறது. அதில் தற்போதைய பிரதமர் "ஜூலியா" வெற்றி பெறுவார் என முதலை ஒன்று ஜோசியம் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய பெண் பிரதமர் ஜூலியா ஜிலார்ட் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து எதிர் கட்சி வேட்பாளராக " டோனி அபார்ட் " களத்தில் நிற்கிறார்.
கடந்த சில மாதங்களாக இந்த இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.தேர்தல் பிரச்சாரத்தின் போது அவ்வப்பொழுது எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் இரண்டுபேருக்குமிடையே சிறிதளவு இடைவெளியே இருப்பதாக கருத்து கணிப்புக்கள் தெரிவித்தன.
இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை உறுதியாக கூறமுடியாத நிலையில் அரசியல் பார்வையாளர்கள் உள்ளனர்.ஆனால் இபொழுது உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முடிவை தன ஜோசியத்தின் மூலம் கூறி உலகப் புகழ் பெற்றுவிட்ட " ஆக்டோபஸ் பால் " இந்த தேர்தலில் " ஜூலியா" வெற்றிபெறுவார் என்று கணித்துள்ளது.
இதை பின்பற்றி ஆஸ்திரேலியாவில்,சிட்னியில் உள்ள முதலை பண்ணையில் உள்ள " ஹேரி " என்ற முதலையும் இந்த தேர்தலில் " ஜூலியா வெற்றிபெறுவார் என்று கணித்துள்ளது. இந்த முதலையின் தொட்டிக்கு மேல் இரண்டு கயிறுகளில் கோழி கறி,மற்றும் களத்தில் உள்ள இரண்டு வேட்பாளர்களின் படங்களும் கட்டி தொங்கவிடப்பட்டது.
ஒரு நிமிடம் இரண்டு படங்களையும் அதன் உடன் இணைக்கப்பட்ட கோழி கறியையும் உற்று நோக்கிய " ஹேரி " ஜூலியா படம் இருந்த கோழி கறியை கவ்விசென்றது. இதனை அடிப்படையாக வைத்து இந்த தேர்தலில்" ஜூலியா" வெற்றிபெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோசியம் பலிக்குமா என்று ஆஸ்திரேலியா மக்கள் ஆவலுடன் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

