திங்கள், 9 ஆகஸ்ட், 2010

மன அழுத்தத்தைப் போக்க புதிய வழிகள் !எவ்வளவுதான் வேலைச் சுமை , கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடலாம் என  விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுப்பிடுதுள்ளனர்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள் பற்றி கனடாவின் " டோ" நகரில் உள்ள " ஸ்கார்பேரோ பல்கலைக்கழக " விஞ்ஞானிகள் சமிபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது.  

குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு,அவர்களை தவறு செய்தவர்கள்,தவறு செய்யாதவர்கள் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வை மேற்கொண்டனர். இரு தரப்பினது மூளையின் செயல்பாடுகளும் ஆராயப்பட்டன.

தவறு செய்யாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருந்தது.இதுவே தங்களை நல்லபடியாக வழி நடத்தும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் அதிகம் இருந்தது. அவர்களது வெற்றிக்கு இந்த நம்பிக்கையே காரணமாக இருக்கிறது.

அதிக தவறுகள் செய்கிறவர்களிடம் தன்னம்பிக்கையின்மை,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தது ஆய்வில்  தெரியவந்தது.இதுவே இவர்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருபதற்கு முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே தன்னம்பிக்கையுடன்,கடவுள் நம்பிக்கையும் இருந்தால் 
மன அழுத்தம் கணிசமாக குறையும் என விஞ்ஞானிகள் இந்த ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.
                                                                                                                    நட்புடன்

12 கருத்துகள்:

Riyas சொன்னது…

மன அழுத்தம் இப்போது நிறைய பேருக்குள்ள பிரச்சினை.. நல்ல பதிவு

மின்மினி RS சொன்னது…

நல்ல பகிர்வு.. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிக நல்ல கருத்துகள். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.

Unknown சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு..

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி
@ ரியாஸ்

Unknown சொன்னது…

வாருங்கள் மின்மினி
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

Unknown சொன்னது…

குறிப்பாக உங்களைப் போன்ற கணினி துறையில் இருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி @ அக்பர்.

Unknown சொன்னது…

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி @ சிநேகிதி

shanuk2305 சொன்னது…

இப்பொழுது மன அழுத்தம் இல்லாமல் இருக்க கூடிய வாய்ப்புக்கள் குறைவு.அப்படி அமைய பெற்றவர்கள் லக்கி மனிதர்கள்

Unknown சொன்னது…

நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி @ வெறும்பய @ சனுக்

தூயவனின் அடிமை சொன்னது…

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியம் செய்தி.

Tamilparks சொன்னது…

நல்ல பகிர்வு, மிக்க நன்றி