ஞாயிறு, 3 அக்டோபர், 2010

இளைஞர்களை வளைத்துப்போடும் வலைத்தளங்கள் ?


இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் விரல்நுனியில் உலகம் வந்துவிட்டது. இது பெருமைப்படக்கூடிய விஷயம். அதேவேளையில் சிறுமைப்படவைக்கும் சில நிகழ்வுகளும் உள்ளன. பொதுவாக இணையதளங்கள் அல்லது வலைத்தளங்கள் இன்று பல்கிப்பெருகிவிட்டன.

புதியபுதிய வலைத்தளங்கள், வலைப்பூக்கள் என எக்கச்சக்கம். இவற்றின் வளர்ச்சியால் லாபம் நஷ்டம் என்று பார்க்க முடிவதில்லை. "தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று எதற்காக கவிஞர் பாடினாரோ தெரியவில்லை. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.

"தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து கொள்ளடா' என கூறத்தோன்றுகிறது. அப்படி என்னங்க நடந்துட்டுது... என அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள், ஒருமுறை தமிழ் இணையதளங்களில் உலா வந்தால் போதும், அழுதே விடுவார்கள். மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது. இணையதளங்களில் தேடும் எந்திரத்தில் தமிழில் ஒரு எழுத்தை அடித்தால் போதும், வார்த்தைகளும் விஷயங்களும் தமிழையே அவமானப்படுத்துகின்றன.


இந்தத் "தூய' தமிழால் நாட்டுக்குத்தான் கேடு. காரணம் அத்தனையும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. இதைத் தவிர்த்து அறிவியல், கணிதம், பொறியியல் பற்றி எழுதவேண்டியதுதானே. இதைச் செய்வதால் இவர்களுக்கு என்ன திருப்தியோ அல்லது என்ன லாபமோ? இப்படிப்பட்ட தமிழ் இணையப்பக்கங்களை பெண்களும், சிறுவர்களும் பார்த்தால் என்ன ஆவார்கள்? 

இதுபோன்ற இடுகைகளை இணையதளங்களில் வெளியிடுபவர்களுக்கு தாய், சகோதரிகள் இருக்கிறார்களா இல்லையா?   இந்த இணையதளங்களில்தான் இன்று இளையதலைமுறை மூழ்கிக் கிடக்கிறது. பொது அறிவு வளரும் என்று யாராவது நினைத்து, தங்கள் பிள்ளைகளுக்கு வலைத்தளங்களை அறிமுகப்படுத்தினால் பிள்ளைகள் விரைவாகவே வீணாகிவிடுவார்கள்.இப்படி இளைஞர்களை வளைத்துப்போட இத்தகு வலைத்தளங்கள் ஏராளமாகப் பெருகி வருவது புற்றுநோயைவிடக் கொடுமையானதாகும்.


இவற்றை யார் தடைசெய்வார்கள்.இதைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சரி, இதை ஏன் பார்க்கிறீர்கள், இதைவிட நல்ல விஷயங்களே உங்கள் கண்ணுக்குப் படாதா என்று கேட்பவர்களும் உள்ளனர்.  நிச்சயமாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிமுகம். எனவே வலைக்குள் நுழைபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பிற தகவல்களுக்குள் தாராளமாக நுழைவதே சாலச்சிறந்தது. 


தமிழில் தலைசிறந்த வலைப்பூக்கள் வகைவகையாகப் பூத்திருக்கின்றன.  அதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதே நமது அவா.கிட்டத்தட்ட ஒரு நண்பனாய், ஆசிரியனாய் உதவக்கூடிய இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. தமிழிலேயே கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பிளாக்குகள் உள்ளன. இவை பெரும்பாலும் நாகரிகமாகவும், நகைச்சுவையாகவும் காணப்படுகின்றன.   தாராளமாகத் தங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். 

அரசியல், தனிமனித துவேஷங்களைத் தவிர்த்து நிறையப் பூக்கள் உற்சாகத்தை அளிக்கின்றன.இது தவிர இல்லத்தரசிகளுக்கு சிறந்த சமையல், ஆலோசனை, மருத்துவத் தகவல்கள் ஏராளமாக விரவிக்கிடக்கின்றன.  கணினி பயில விரும்புபவர்கள் ஒரு பைசாகூடச் செலவழிக்காமல் ஆன்லைனிலேயே தங்களுடைய பாடங்களைப் பயிலலாம். இதேபோல ஓவியம், பொறியியல் சந்தேகங்கள், விளையாட்டுகள், புதிர்கள், கதை, கவிதைகள், தரமான கட்டுரைகள் என இணையதளங்கள் விரவிக்கிடக்கின்றன. 

எந்தச் சந்தேகமாக இருந்தாலும் இருக்கவே இருக்கிறது இணையதளம் என்ற அளவுக்கு, அத்தனைக்கும் தேவையான ஒன்றாக இவை உள்ளன. அதைத் தவறான வழியில் பயன்படுத்துவதால் இளையதலைமுறையினரின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதே இணையதளங்களில் வைரஸ்களைப் பரப்பி, குழப்பம் விளைவிப்பவர்கள் பலர் உள்ளனர். மேலும் இணையதளத்தின் பயன்பாடு ஓர் எல்லையோடு இருப்பதே சரியானது.
 அதைவிடுத்து பல துன்பங்களுக்கும் தூண்டுகோலாக அமைந்துவிடுகின்றன. ஆன்லைன் திருமணத் தகவல் நிலையங்கள், பேஸ்புக், ஆர்குட் என சிக்கிச் சீரழிபவர்களின் எண்ணிக்கை ஏராளம். எனவே, அதைக் கருத்தில்கொண்டு இணையங்களில் உலாவருவது நல்லது. இல்லாவிட்டால் துன்பத்தின் வாசலுக்கே செல்ல நேரிடும். மேலும் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளையும் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து படிக்கலாம். 

பல்வேறு இதழ்கள், பத்திரிகைகள் தங்கள் சேவையை இலவசமாகவே செய்துவருகின்றன.  இவற்றில் ஒரு சில மட்டுமே சந்தா செலுத்துமாறு கூறுகின்றன. எதுவாக இருந்தாலும் தேடுதல் எந்திரத்தில் மிக ஜாக்கிரதையாகக் கையாண்டு தேவையான விஷயங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, இளைஞர்களுக்கு வலைவீசும் வலைத்தளங்களை புறக்கணிப்பதே சிறந்தது. 

நன்றி : தினமணி 

24 கருத்துகள்:

அஹமது இர்ஷாத் சொன்னது…

வலைத்தளங்கள் ஒருமைப்படுத்த வேண்டும்.சிறப்பான பகிர்வு..

ப.கந்தசாமி சொன்னது…

வலைத்தளங்கள் அல்ல, கொலைத்தளங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

எல்லாமே உண்மை. அருமையான கட்டுரை.

Unknown சொன்னது…

தங்களின் முதல் வருகைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன்றி
@ முனைவர் கந்தசுவாமி அவர்களே.

Unknown சொன்னது…

வாருங்கள் ஸ்டார்ஜன்.
தங்களின் வருகைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன்றி.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி
@அஹமத் இர்ஷாத்

velji சொன்னது…

அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்து!

தேவையான பகிர்வு.

ARUNMOZHI DEVAN சொன்னது…

naan oru mootha kudimagan. tharpodhuthan pala thamiz valaithalangalai paarthuvaruindren. thaangal solvadhu muttrilumunmaiyae. thangal idhupoondru migavum payanulla katturaigal eazhudhuvadhi naan migavum virumbukindren. nandri. vanakkam.

ARUNMOZHI DEVAN சொன்னது…

நான் ஒரு மூத்த குடிமகன். தற்போதுதான் தமிழில் பல வலைத்தளங்களைப் பார்த்துக் கொண்டு வருகின்றேன். தாங்கள் எழுதிய கட்டுரை மிகவும் பயனுள்ள ஒன்றேயாகும். அது போல் பல பயனுள்ள கட்டுரைகளை தமிழில் அதிகம் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!

பெயரில்லா சொன்னது…

//அத்தனையும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. இதைத் தவிர்த்து அறிவியல், கணிதம், பொறியியல் பற்றி எழுதவேண்டியதுதானே//

இதோ தமிழில் தொழில்நுட்பம் எழுதுபவர்களில் பட்டியல்

அறிவூட்டும் 66 தமிழ் கணினி வலைப்பூக்கள் - அக்டோபர் 2010

சகோதரன் ஜெகதீஸ்வரன் சொன்னது…

பாலியல் வலைப்பூக்கள் என்று குறிப்பிட்டால் எப்படி, . சில வலைப்பூக்கள் ஆபாச கதை எழுதுகின்றன. சில வலைப்பூக்கள் அவசிய கட்டுரைகள் எழுதுகின்றன,.

இதில் நீங்கள் எதை குறிப்பிடுகின்றீர்கள்,

http://sagotharan.wordpress.com/

சின்னு சொன்னது…

மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது என அடுத்தவன் மீது பழி போடுவதே நம்ம வேலையாகிவிட்டது. என்னவோ, நம்ம தமிழ் கலாச்சாரம் என்னவோ பாரில் சிறந்தது போல ஒரு எண்ணம் நமக்கு! யூடியுபில் போய் தமிழ் என அடித்து அது தரும் suggestion-களை பாருங்கள்.பின் தெலுகு அல்லது ஹிந்தி என அடித்துப் பாருங்கள். நம்ம கலாசாரத்தின் லட்சணம் புரியும்!

Riyas சொன்னது…

GOOD POST SIR.

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

akkravikumar சொன்னது…

neengal solvedhu 100% unmail. ippodhirukum valaithalangal mosamagave irukindrana..

Unknown சொன்னது…

தங்கள் முதல் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி
@அருண்மொழி தேவன் அவர்களே.
உங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் தரும் இந்த
ஆக்கமும்,ஊக்கமும் எங்களைப்போன்றவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.
நன்றி.

Unknown சொன்னது…

வாருங்கள் சுதந்திர-இலவச-மென்பொருள்.
தமிழில் தொழில்நுட்பம் எழுதுபவர்களின் வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
பயனுள்ள தகவல்கள்
பலரையும் சென்றடையவேண்டும் என்பதே நம் எல்லோரின் இலட்சியமாக இருக்கட்டும்.

Unknown சொன்னது…

ஆபாசத்தை அரங்கேற்றும் வலைப்பூக்களைத்தான்
" பாலியல் " வலைப்பூக்கள் என்று குறிப்பிட்டு
இருக்கிறேன்.
சில வலைப்பூக்கள் அவசிய கட்டுரைகள் எழுதுகின்றன் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவசிய கட்டுரைகள் என்பது " ஆக்கபூர்வமாகவும், அறிவுபசிக்கு தீனி போடக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என்பதே நம் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.
தங்களின் வருகைக்கும்,
கருத்துப் பரிமாற்றத்திற்கும்
மிக்க நன்றி @ ஜெகதீஸ்வரன்.

Unknown சொன்னது…

வாருங்கள் சின்னு.
உங்கள் கோபம் நியாயமானதே.
அதே கோபம்தான் எனக்கும். அதன் வெளிப்பாடே இந்த பதிவின் மைய்ய கருத்து.
தங்களின் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும் நன்றி @ சின்னு.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@ ரியாஸ்.

Unknown சொன்னது…

தங்களின் வாழ்த்துக்கு நன்றி
@டெனிம்.
அடிக்கடி வந்து என்வலைப்பூவை பார்த்து தங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

Unknown சொன்னது…

எல்லா வலைத்தளங்களும் ஆபாசத்தை போதிக்கின்றன என்று சொல்லி விடமுடியாது.
நல்ல விசயங்களை பகிர்ந்துக் கொள்ளக்கூடிய வலைத்தளங்கள் அதை விட அதிகமாகவே இருக்கிறது. நாம்தான் கவனமாக இருந்து நல்ல வலைத்தளங்களைத் தேடி அதை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
தங்களின் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி
@அக்க்ரவிகுமார் அவர்களே.

erodethangadurai சொன்னது…

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

Unknown சொன்னது…

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்