திங்கள், 2 ஆகஸ்ட், 2010

சென்னை மெட்ரோ ரயில் : ஒரு சிறப்புப் பார்வை !
சென்னைக்கு வரமாக வரப்போகிறது மெட்ரோ ரயில் !

சென்னையின் இப்போதைய மக்கள் தொகை ஏறக்குறைய 1 கோடியை நெருங்கிவிட்டது.தினமும் சென்னையைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 50  லட்சத்துக்கும் அதிகம். வருடந்தோறும் பல லட்ச வாகனங்கள் புதிதாக சாலைக்கு வருகின்றன.

இதுதவிர பேருந்துகளில் மட்டும் நாளொன்றுக்கு 40  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கின்றனர்.சென்னையில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல். 10  அல்லது 15  கிலோமீட்டர் தூரத்தை கடக்க  1  மணி நேரத்திற்கும் மேலாகிவிடுகிறது. சாலைகளின் பெரும்பகுதியை  கார்களும்,இருசக்கர வாகனங்களும்,ஆட்டோக்களும் அடைத்துகொள்கிறது.

சென்னையின் பஸ் பயணம் என்பது மிகக்கொடுமையான பயணங்களில் ஒன்றாகிவிட்டது. என்ன தான் குளிர் சாதன பேருந்துகள் விட்டாலும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொள்ளும் போது,பஸ் பயணம் போதுமடா சாமி என்றாகிவிடுகிறது.
 
 
இந்த போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் அருமருந்தாக வரப்போவதுதான் 
" சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ". 
மெட்ரோ  ரயில் இரண்டு வழித்தடங்களில் பயணிக்கப்போகிறது.மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம்.இன்னும் 5 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சென்னை மக்களை சுமந்து செல்ல தயார் ஆகிவிடும்.

முதல் வழித்தடம்: வடசென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து  பிராட்வே, சென்ட்ரல், ஸ்பென்சர் பிளாசா,ஜெமினி மேம்பாலம்,சைதாப்பேட்டை, கிண்டி,வழியாக சென்னை விமான நிலையம். இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை ( மொத்தம் 14.5  கி.மீ.) சுரங்கப்பாதையாகவும்,மீதமுள்ள பாதை மேம்பாலங்களிலும் அமையப்போகிறது.

இரண்டாவது வழித்தடம்: சென்னை சென்ட்ரலில் தொடங்கி வேப்பேரி,கீழ்ப்பாக்கம்,அமிஞ்சிக்கரை,அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி,அசோக் நகர் வழியாக பரங்கிமலையில் நிறைவடையும்.இதில் சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர் வரை ( 9 .7  கி.மீ.) சுரங்கப்பாதையாகவும் அமைக்கபடுகிறது. புற நகர் ரயில்,பறக்கும் ரயில்,மற்றும் பேருந்து நிலையங்கள் அனைத்தும் இந்த மெட்ரோ ரயில் பாதையுடன் இணைக்கப்படும்.
 
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் அத்தனை தொழில் நுட்பமும் அதி நவீன தொழில்நுட்பமே.ஒரே தூணில் கட்டப்படும் மேம்பாலங்கள். 30  மீட்டருக்கு ஒரு தூண்.அதில் இரண்டு ட்ராக். இத்திட்டத்தின்  முதல் கட்ட பணிகள் (அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை ) போர்கால வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ....  

இன்னும் வரும் ............

 

8 கருத்துகள்:

ராஜவம்சம் சொன்னது…

மகிழ்ச்சியான செய்தி பகிர்வுக்கு நன்றி.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

Matharaaspatinam........melirum

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும் ,கருத்து பரிமாற்றத்திற்கும் நன்றி
@ ராஜவம்சம்

Unknown சொன்னது…

சென்னை இன்னும் சிறப்பாக மிளிரும்.
தங்களின் கருத்துக்கு நன்றி
@ rk .குரு

மதுரைக்காரன் சொன்னது…

சென்னையின் பஸ் பயணம் என்பது மிகக்கொடுமையான பயணங்களில் ஒன்றாகிவிட்டது-----மறுக்க முடியாத உண்மை. ஆனால் என்ன தான் மெட்ரோ ரயில் திட்டம் வந்தாலும் அந்த திட்டம் வரும் காலத்தில் இப்பொழுது இருப்பதை விட மக்கள் தொகை பெருக்கம் கூடியிருக்கும். அப்பொழுது ஜப்பானில் இருப்பதைப் போல ஜெட் ரயில் திட்டம் என்ற ஒன்றை இங்கே ஆரம்பித்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை.

Unknown சொன்னது…

வாருங்கள் மதுரைகாரரே!தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்லும் ஜப்பானின்"ஜெட்" ரயில்வே திட்டம் சாத்தியப்படலாம்.

ஸாதிகா சொன்னது…

அறியத்தந்தமைக்கு நன்றி!

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்
நன்றி @ ஸாதிகா.