சனி, 17 அக்டோபர், 2009

பட்டத்து இளவரசராகிறார் வில்லியம்ஸ்


லண்டன்:பிரிட்டிஷ் அரசி எலிசபெத், தனது பேரன் வில்லியமை அரசனாக்க முயற்சிக்கிறார். பிரிட்டிஷ் அரசி எலிசபெத்துக்கு 83 வயதாகிறது. இவரது மகன் இளவரசர் சார்லஸ், டயானாவை விவாகரத்து செய்து விட்டு, ஏற்கனவே திருமணமான கமீலாவை மறுமணம் செய்து கொண்டதால், சார்லசுக்கு முடிசூட்டப்படவில்லை.



இந்நிலையில், சார்லஸ் - டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியமுக்கு தற்போது 27 வயதாகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஹெலிகாப்டர் பைலட்டாக பயிற்சி பெற்று வருகிறார்.பிரிட்டிஷ் அரசின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளின் அழைப்பின் பேரில், எலிசபெத் அந்த நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்.



வயோதிகத்தின் காரணமாக அவரால் நீண்ட தூரத்துக்கு பயணம் செய்வதில் தற்போது சிரமம் ஏற்படுகிறது.அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு வரும்படி பிரிட்டிஷ் அரசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனக்கு பதில் பேரன் வில்லியமை அந்த நாடுகளுக்கு, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் சார்பில் பயணம் செல்லும் படி அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் வில்லியமை அவர் பிரிட்டிஷ் அரசனாக்க விரும்புகிறார் என, லண்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: