ஞாயிறு, 18 அக்டோபர், 2009

அனுமதியின்றி பறந்த அமெரிக்க விமானம்

அனுமதியின்றி பறந்த அமெரிக்க விமானம் . . , 205 கடற்படை வீரர்களுடன் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி அதிகாரிகள் விசாரணை

Front page news and headlines today

மும்பை: இந்திய வான் எல்லையில் அத்துமீறியும், கட்டுப்பாட்டு அறைக்கு உரிய சிக்னல் கோடு வழங்காமலும் பறந்து சென்ற அமெரிக்க விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு பின்னர் கிளம்பி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.அமெரிக்காவை சேர்ந்த விமானம் 767, இந்திய எல்லைக்குள் இன்று காலையில் பறந்து வந்துள்ளது.



இந்நேரத்தில் இதனை கண்டறிந்த மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் இந்த விமானத்தை ஓட்டி வந்த பைலட் சரியான கோடு வாடு உபயோகிக்கவில்லை. அதாவது பயணிகள் விமானத்திற்கும், ராணுவ படை விமானத்திற்கும் தனித்தனியான சங்கேத வார்த்தைகள் உண்டு . இது சரியானதாக இல்லை என்பதை உணர்ந்த அதிகாரிகள் விமான பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அமெரிக்க விமானத்தை தரையிறக்க உத்தரவிட்டனர். இதன்படி விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமானநிலையத்தில் இறக்கப்பட்டது.



விடுமுறையை கழிக்க தாய்லாந்து பயணம் : இந்திய விமானப்படை அதிகாரிகள் விமானத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். விமானத்தில் 205 அமெரிக்க கடற்படை வீரர்கள் இருந்துள்ளனர். புஜாரா ( ஐக்கிய அரபு எமிரேட் ) பகுதியில் இருந்து பாங்காங் செல்வதாக கூறினர். இருப்பினும் இந்திய எல்லைக்குள் வரும் போது கட்டுப்பாட்டு அறைக்கு உரிய தகவல் கொடுக்காததால் விசாரணை நடத்தப்பட்டது.



விமான நிலையத்தில் இந்திய மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் விடுமுறை நாளை கழிப்பதற்காக பாங்காங் (தாய்லாந்து ) செல்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து விமான படை துறையினர் முழுமையாக விசாரித்து பின்னர் விடுவித்தனர். 6 மணி நேர விசாரணைக்‌கு பின்னர் விமானம் மதியம் 2.30 மணியளவில் தாய்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றது.



கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஜூன் மாதம் இதேபோல் ஒரு அமெரிக்க விமானம் ஆயுதங்களுடன் எல்லைக்குள் பறந்து சென்றது. இது தரையிறக்கப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: