வியாழன், 15 அக்டோபர், 2009

தீபாவளி கொண்டாடினார் ஒபாமா

தீபாவளி கொண்டாடி அசத்தினார் அதிபர் ஒபாமா ; அமெரிக்காவில் இதுவரை நடக்காத இனிய செய்தி
அக்டோபர் 15,2009,09:41 IST

Top world news stories and headlines detail

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதன் முதலாக தீபாவளி கொண்டாடி அதிபர் ஒபாமா இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நாளை மறுநாள் ( 17 ம் தேதி ) இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. கொடியவன் நரகாசுரனை கொல்லப்பட்ட மகிழ்வை இந்து, சீக்கியர், ஜெயின் சமூகத்தினர் தீபத்திருநாளாக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக மக்கள் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகர வீதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் , கூட்டமாக பர்சேஸ் செய்து வருகின்றனர். குழந்தைகள் பட்டாசு கடைகளை மொய்க்க துவங்கி விட்டனர்.வேத மந்திரங்கள் முழங்கிட தீபம் ஏற்றினார் : இந்நிலையில் இது வரை இல்லாத விஷயமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். இங்குள்ள ஈஸ்ட் ரூம் என்னும் பாரம்பரிய அறையில் விழா நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டார். ஸ்ரீ நாராயணச்சாரியார் திகலகோடே வேத மந்திரங்களை படித்தார். உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஒபாமா தெரிவித்தார். இவ்விழாவில் ஒபாமா நிர்வாக அலுவலகத்தில் இடம்பெற்ற இந்திய அதிகாரிகள், இந்திய சமூக பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடினர் . விழாவில் இந்திய மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.ஏழைகளுக்கு உதவுங்கள் ஒபாமா வேண்டுகோள் : இத்திருநாள் குறித்து ஒபாமா கூறுகையில் ; இந்து , சீக்கியர், ஜெயின். மற்றும் புத்த இனத்தவர்கள் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர். கொடியவரை வீழ்த்திய மகிழ்வில் கொண்டாடடும் நாள் . வெற்றியின் அடையாளமாகவும், அறிவின்மை என்ற இருளை அகற்றி ஒளியேற்றும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இது கொண்டாட்ட தருணம் மட்டுமல்ல. நம்மில் பலர் ஏழைகளாகவும் , இல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்களை நினைத்து இத்திருநாளில் ஏழை, எளிய மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இது வரை அமெரிக்க அதிபர்களாக இருந்த யாரும் தீபாவளி திருநாளை கொண்டாடியதில்லை. ஒபாமா தீபாவளி கொண்டாடிய விஷயம் இந்தியர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது உள்ள மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: