வியாழன், 15 அக்டோபர், 2009

பிரிட்டிஷ் கரன்சி தேய்கிறதா ?



பிரிட்டன் கரன்சி தேய்கிறது: 'யூரோ' முந்துகிறது : மாறிவரும் உலகிற்கு இது ஓர் அடையாளம்







பொருளாதார மந்த நிலை பாதிப்பு, பிரிட்டனை அதிகம் பாதித்திருக்கிறது. அமெரிக் காவை விட,

ஜெர்மானியை விடவும் அதிகம் பாதித்திருக் கிறது. அதன் அடையாளமாக, இதுவரை மிகவும் கவுரமாக கருதப்பட்ட பிரிட்டன் கரன்சியான பவுண்ட் ஸ்டெர்லிங், சற்று மதிப்பு குறைந்து விட் டது.ஆனால், ஐரோப்பிய நாடுகளில் புழங்கும் "யூரோ ' கரன்சி முந்துகிறது.



சமீபத்தில், அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் "ஜி-20 ' நாடுகளின் தலைவர்கள், உலகம் சந்திக்கும் பொருளாதார மந்த நிலை பற்றி ஆலோசித்தனர்.அதில்,"உலகப் பொருளாதாரத்தின் சமநிலை நீடிக்க வழிகாண வேண்டும். அதாவது அன்னியச்செலாவணி நடைமுறைகள் பற்றி ஆராய வேண் டும்' என்று, பேசி முடிவு செய்தனர். அதே சமயம் எந்த நாட்டு கரன்சியின் மதிப்பு, ஏற்றம், சரிவு அல்லது எதிர்கால போக்கு ஆகியவை பற்றி பேச வில்லை.மேலும்,"ஜி7' என்ற பணக் கார நாடுகளின் நிதியமைச் சர்கள் மற்றும் அந்தந்த நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள் இஸ்தான்புல் நகரில் சமீபத்தில் நடத்திய ஆலோசனைகளில் இந்த கரன்சிப் பிரச்னை பெரிதாக அலசப்படவில்லை. அளவுக்கதிகமான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை,� தாழில் துறை தேக்கம் ஆகிய பிரச்னையில் பிரிட்டனை ஆளும் தொழிற் கட்சியைச் சேர்ந்த பிரதமர் கார்டன் பிரவுன் ஆட்சி கலகலத்து வருகிறது.பொதுத் துறை நிறுவனங்கள் அதிகம் சிரமப்படுகின்றன. போதும் 12 ஆண்டுகள் ஆண்டது, இனி என்ன ஆனால் என்று கார்டன் பிரவுன் நினைக்கும் அளவுக்கு பிரச்னைகள் மண்டிக்கிடக் கின்றன.



பாங்க் ஆப் -இங்கிலாந்து தலைவர் மெர்வின் கிங் ,வெளிப்படையாக, "பவுண்ட் ஸ்டெர்லிங் அன்னியச் செலாவணியில் பலமிழந்தால் என்ன? உள்நாட்டு பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் சரி' என்றிருக்கிறார். பவுண்ட் ஸ்டெர் லிங்க் பலவீனப் பட்டாலும், ஏற்றுமதி அதிகரித்தால் அது நல்லது என்ற கருத்து, பிரிட்டனுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பிரிட்டனுக்கு சுற்றுலா வருபவர்கள் இனி அதிகம் செலவழிக்க வேண் டும், இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக அன் னியச் செலாவணியைக் கட்ட நேரிடும். இது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.



கடந்த ஏப்ரல்மாதத்தில் இருந்தே "யூரோ' கரன்சி தலைதூக்க ஆரம்பித்தது. அதாவது ஒரு யூரோ கரன்சி கொடுத்தால், அதற்கு ஈடாக 90.89 பென்ஸ் சமம் என்ற நிலை ஏற்பட்டது. நூறு பென்ஸ் சேர்ந்தது ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங்.அது மட்டும் அல்ல, அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட், ஐரோப்பிய "யூரோ' ஜப்பான் "யென்' ஆகிய சில நாடுகளின் ஒட்டு மொத்த நாணய மதிப்பீட்டில் "யூரோ' கவுரவம் அதிகரித்தது. பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு சரிந்தது. கடந்த சில நாட்களாகப் பார்த்தால், நம் ரூபாய் மதிப் பில் ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு 74.50 ரூபாய் ஆகும். அதே போல ஒரு யூரோ மதிப்பு 66.75 ரூபாய் ஆகும்.இந்த இரு நாணயங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது இதனால் புரியும்.



பிரிட்டனின் பொருளாதார நிலையை சில நிபுணர்கள், "இந்த சூழ்நிலையில் பிரிட்டன் அரசு புன்முறுவல் பூத்தது என்றால், அது நிதிக் கொள்கையை கோட்டை விட முன்வந்திருக்கிறது' என்று அர்த்தம் என்கின்றனர்.கடந்த 1999 ஜனவரி முதல் தேதியில், பெரிய எதிர்பார்ப்புடன் யூரோ கரன்சி அறிமுகமானது. ஐரோப்பிய நாடுகளில் 16 நாடுகளின் மதிப்பு மிக்க கரன்சியாக இப்போது இருக்கிறது. பிரான்சு,ஜெர்மனி ஆகிய வலுவான நாடுகள் மட்டுமின்றி சுலோவேகியா போன்ற ஏழை நாடுகளும் இந்த அணியில் அடங்கும். பிரிட்டன் தன் பழைய கவுரவம் கருதி பவுண்ட் ஸ்டெர்லிங்கை கைவிட்டு, யூரோவுக்கு மாறவில்லை.ஆனால், இன்று பவுண்ட் ஸ்டெர் லிங்கிற்கு மவுசு குறைகிறது. மாறாக யூரோ புதிய கரன்சியாக எழுகிறது. அமெரிக்க டாலர் சற்று சரிவைச் சந்திக்கும் காலம்.இனி அமெரிக்க டாலர் முந்தைய தலைமையிடத்தை ஏற்க முடியாது.



ஆசியாவைப் பொறுத்தளவில் சீனாவின் யுவான் மற்றும் ஜப்பான் யென் முக்கியத்துவம் பெறுகிற காலம்.அதே போல ஐரோப்பிய நாடுகள் என்றால், பிரிட்டிஷ் பவுண்டா, அல்லது யூரோவா என்றால் யூரோவை நேசிக்கும் காலம் வந்து விட்டது.அதன் அறிகுறியாக, எண் ணெய் வள நாடுகளே டாலரை மட்டும் முன்னிறுத்தி, தங்கள் வர்த்தகத்தை இனி மையப்படுத்த விரும்பாமல், பல்வேறு பெரிய நாடுகளின் கரன்சியை ஒருங்கிணைத்து செயல்பட விரும்புகின்றனர். காலம் எப்படி மாறி விட்டது பாருங்கள் ! சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று மார் தட்டும் பிரிட்டன் இன்று சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.அதில் முக்கியமானது அவர்களின் நாணயமான பவுண்ட் ஸ்டெர்லிங் முகமதிப்பு தேய்வதாகும்.

கருத்துகள் இல்லை: