சனி, 17 அக்டோபர், 2009

வருமான வரித்துறை எச்சரிக்கை


சென்னை, போலி இ-மெயிலை நம்பி வங்கி கணக்கு விவரங்களை தந்து ஏமாறவேண்டாம் என வருமானவரி துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து வருமானவரித்துறை தலைமை ஆணையர் பி.பி.ஸ்ரீவஸ்தவா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வருமானவரித்துறையின் சின்னம் பொறித்த போலியான இ-மெயில் மற்றும் வெப்சைட் மூலம், வருமானவரி செலுத்துபவர்களிடம் சில தகவல்களை பெறுகிறார்கள். அதில், ‘உங்களுக்கு ரீபண்ட் அனுப்ப வேண்டும். உடனடியாக உங்களது வங்கி கணக்கு எண், பின் (ரகசிய எண்) ஆகியவற்றை பதிவு செய்து அனுப்புங்கள்’ என்று கோரப்படுகிறது.
அதுபோலவே, நீங்கள் வருமானவரி குறித்த விவரங்களை தெரிவிக்காமல் இருப்பதால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை அனுப்பப்படுகிறது. இ-மெயில் அல்லது வெப்சைட் மூலம் வங்கி கணக்கு எண், பின் (ரகசிய எண்) உள்ளிட்ட விவரங்களை வருமானவரி துறை ஒருபோதும் கேட்காது. எனவே, ஆதாரமில்லாமல் வரும் இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம். அப்படி ஏதாவது நீங்கள் உங்களது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை போலியான வெப்சைட் அல்லது இ-மெயிலில் தெரிவித்திருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது உரிய அமைப்பை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: