ஞாயிறு, 18 அக்டோபர், 2009

2012ல் இந்தியா மீது சீனா போர்?

2012ல் இந்தியா மீது சீனா போர்? நான்கு திசையிலும் வகுக்கிறது ராணுவ வியூகம்
அக்டோபர் 18,2009,00:00 IST

Front page news and headlines today

ஆசியாவில் தன்னுடைய வலிமையை நிரூபிக்க, இந்தியா மீது 2012ம் ஆண்டுக்குள் சீனா போர் தொடுக்கும் என்று இந்திய பாதுகாப்பு ஆய்விதழ் ஆசிரியர் பாரத் வர்மா ஓர் ஆங்கில் இணையதளத்தக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.



சமீப காலமாக இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் சீனா கடுமையாக நடந்து கொள்வதற்கு இதுவே காரணம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்காக இந்தியாவின் நான்கு திசைகளிலிருந்தும், கடல் மற்றும் நிலப்பகுதியிலிருந்தும் தாக்குதல் நடத்தும் வல்லமையைப் பெற முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் மேற்கில்பாகிஸ்தான், வடக்கில் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரான அக்சாய்சின், கிழக்கில் மியன்மர் மற்றும் தெற்கில் இலங்கை ஆகிய நான்கு பகுதிகளிலும் சீனா தனது ராணுவ வியூகங்களை வகுத்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பக்கு வேறு எந்த நாட்டையும் விட தற்போது சினாவே பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.



கிழக்கு -மியன்மர்: மியன்மரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்படம் நடவடிக்கை தீர்மானங்களுக்கு சீனா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்து மியான்மருக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் நட்பு பாராட்டி வருகின்றன. தன்னுடைய நாட்டின் வழியே சீனா எண்ணெய் குழாய்களை அமைத்துக்கொள்ள மியான்மர் சம்மதம் தெரிவித்து பணி முடியும் நிலையில் உள்ளன. இதனால் இரு நாடுகளும் நட்பு பாராட்டி வருகின்றன. தன்னுடைய நாட்டின் வழியே சீனா எண்ணெய் குழாய்களை அமைத்துக்கொள்ள மியான்மர் சம்மதம் தெரிவித்து பணி முடியும் நிலையில் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மலேசியா அருகே உள்ள மலாக்கா குடா வழியே சுற்றி செல்ல வேண்டிய சீன கப்பல்கள் இனி வங்கக்கடலில் மியான்மர் யாக்பியூ துறைமுகத்துக்கு செல்லும். இப்பகுதியிலிருந்து கடற்படை கண்காணிப்பை சீனா மேற்கொள்ள முடியும்



மேற்கு- பாகிஸ்தான் : சீனாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக உறவு நீடித்து வருகிறது. சீனாவில தயாராகும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் வேறொரு பெயரில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக நட்பு பாராட்டுகின்றன. இந்தியாவுடன் சீனா போதை துவக்கினால், அதற்கு மனம் உவந்து உதவ பாகிஸ்தான் தயாராக உள்ளது.



வடக்கு- அக்சாய் சின் : காஷ்மீரில் சீனாவை ஓட்டிய கிழக்கு பகுதியில் ஏறத்தாழ 38 ஆயிரம் ச.கி.மீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இப்பகுதியில் ராணுவ வாகனங்கள் வந்து செல்ல ரோடு வசதிகள் செய்துள்ளது. போர் ஏற்படும் சூழ்நிலையில் இப்பகுதியில் தனது ஏவுகணைகளைக்கூட சீனா கொண்டு வந்து நிறுத்தும் வசதிகளை ஏற்கனவே செய்து முடித்துள்ளது.



தெற்கு- இலங்கை : இலங்கை அரசுடனான சீன உறவு அடிக்கடி புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுடன“ கொண்டிருக்கும் நட்பை விட, சீனாவுடன்நட்பு கொள்ளவே அந்நாட்டு அதிபர்கள் விரும்பி வந்திருக்கின்றனர். விடுதலைப்புலிகளை வெற்றி கொண்ட பிறகு, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நட்பை பலப்படுத்தி வருகிறது, தென் இலங்கையில் ஹம்பன்தொட்டாவில் துறைமுகப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அங்கு சீனாவின் கடல்படைத்தளம் அமைவதற்க்கான வாய்ப்புகள உள்ளன.



எல்லையில் தொடரும் தொல்லை:எல்லைப்புறத்திலிருந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் சீனாவை தடுத்து நிறுத்துவது தற்போது, இந்தியா முன் எழுந்துள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.



எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டனர் என்ற செய்தி கடந்த இரு மாதங்களுக்கு முன் வந்த போதிலிருந்தே, பிரச்னை விஸ்வரூபம் எடுத்து விட்டது. ஏறத்தாழ,4,056 கி.மீ., தூர ல்லையில் சீனா பிரச்னை செய்து வருகிறது. ப்பகுதியில் சீன ராணுவம் உஷாராக இருப்பதால் , இந்தியா தற்போது 60 ஆயிரம் துருப்புகளை அதிகரித்துள்ளது.



1914ம் ஆண்டில், எல்லையை வரையறுக்கும் விதமாக மக்மோகன் எல்லைக்கோட்டை பிரிட்டிஷ் அரசு வரைந்தது. காஷ்மீர் முதல் மியான்மர் வரை செல்லும் இந்த கோடுதான் தற்போதுள்ள பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.இந்த எல்லைப்பகுதியை ஏற்க மறுக்கும் சீனா, இந்தியாவிலுள்ள 90 ஆயிரம் ச.கி.மீ., பரப்பளவை அபரிக்க திட்டமிட்டு வருகிறது. அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதி, காஷ்மீரில் 38 ஆயிரம் ச.கி.மீ., பரப்பளவுள்ள அக்சாய்சின் பகுதி தங்களுடையது என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைத்தகராறு 1962ம் ஆண்டில் போராக உருவெடுத்தது. அப்போது இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்ததால் சீனா போர்நிறுத்தத்துக்கு திட்டமிட்டது. அமெரிக்கா இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், சீனாவை ஆதரித்து, அமெரிக்காவுடன் புதிய பகையை தேடிக்கொள்ள ரஷ்யா விரும்பவில்லை. ஆகவே சீனா போர்நிறுத்தத்துக்கு சம்மதித்தது.



சீனாவிலிருந்து வெளியாகும் இந்திய வரைபடங்களில் காஷ்மீர் இல்லாமலும், அருணாச்சல் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் இல்லாமலுமே தற்போது வெளியாகின்றன. தொடர்நது சொல்லப்படும் பொய், ஒருநாள் மெய் ஆகும் என்று சீனா கருதுகிறது.காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்த பாகிஸ்தான், அப்பகுதியில், காரகோரம் கணவாய் அருகே சில இந்திய பகுதிகளை சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வார்த்து கொடுத்துள்ளது. சாக்ஸ்காம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இப்பகுதி 5 ஆயிரம் ச.கி.மீ., பரப்பளவைக் கொண்டது



அருணாச்சல் பகுதியை தென் திபெத் என்று சீனா அழைத்து வருகிறது. 1951ம் ஆண்டில் திபெத்தில் ஊடுருவிய சீனா, அப்பகுதியை கைப்பற்றிய போது, அருணாச்சலில் உள்ள தவாங் எனும் பகுதி திபெத்துடன்தான் இருந்தது என்று கற்பனையாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிரிட்டிஷார் ஆட்சியின் போது, திபெத்தின் ஒரு பகுதியாக இருந்த தவாங் பகுதி ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விட்டது என்ற உண்மையை ஏற்க சீனா மறுக்கிறது. திபெத்திய தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உண்மையையே இந்தியா தனது நிலையாகக் கொண்டுள்ளது.இந்த உண்மையை எங்கே தலாய் லாமா போட்டு உடைத்து விடுவாரோ என்று அஞ்சம் சீனா, அடுத்த மாதம் தலாய்லாமா அருணாச்சலுக்கு போகக்கூடாது என்று மிரட்டி வருகிறது



அருணாச்சல் மீது தொடர்நது கண் வைத்து வரும் சீனா, கடந்த 2007 மே மாதத்தில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்த அருணாச்சல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு டில்லியில் உள்ள சீன தூதரகம் விசா வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. அருணாச்சல் சீனாவின் ஒருபகுதி என்பதால் அவர்களுக்கு விசா தேவையில்லை என்று விஷமமாக பதில் அளித்துவிட்டது.



அருணாச்சல் பிரதேசம் சர்ச்சைக்குள்ளான பகுதி ஆகவே அங்குள்ள இந்திய திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி செய்யக்கூடாது என்று கூறிய சீனா, அதில் வெற்றியும் பெற்று விட்டது. இதனால் இந்தியாவுக்கு வரவேண்டிய 3,500 கோடி ருபாய் கிடைக்காமல் போய்விட்டது தவிர, அருணாச்சல் பிரதேசத்தில் சீனாவின் கோரிக்கை ஆசிய வளர்ச்சி வங்கியில் செல்லுபடியானது இந்தியாவை கவலைப்பட வைத்துள்ளது. இதையடுத்து அக்., 3ம் தேதி அருணாச்சலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். இதற்கு சீனா கடும் எதிர்பபு தெரிவித்துள்ளது.



இப்பிரச்னையை இந்தியா சுமூகமாகவே கையாள விரும்புகிறது. 1993ம் ஆண்டில் இருநாடுகளுக்கும் இடையில் நடந்த எல்லைப்புற அமைதி மற்றும் பதட்ட தணிப்பு ஒப்பந்தத்தின் படி, 4,065 கிமீ., நீளமுள்ள எல்லைப்பகுதியை போர்நிறுத்த எல்லையாக இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். 2003ல் இருதரப்பிலும் எல்லைப்புற பிரச்னை தீர்க்க கவனிக்கும் சிறப்புப் பிதிநிதியை நியமனம் செய்வது என்று முடிவானது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இருதரப்பினரும் சந்தித்துப் பேசிக்கொள்வதுஎன்பதும் முடிவானது. கடந்த ஆகஸ்டில் இருதரப்பினரும் 13வது முறையாக சந்தித்துக் கொண்டனர்.



எல்லைத் தகராறுக்கு உதவும் பாகிஸ்தானுக்கு ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலும் சீனா நன்றிக்கடன் செய்து வருகிறது. பாகிஸ்தானின் நீர்மின் திட்டம், ஆற்றுக் கால்வாய் பணிகளை சீனாவே முன்னின்று செய்து வருகிறது. சீனா மேற்கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. எனவே தற்போது இந்தியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.



அருணாச்சல் மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் இந்தியர்களுக்கு சீனாவே தாமாக முன்வந்து விசா அளிக்கிறது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், போர்என்பது தீர்வாகாது. ஆகவே, நம்முடைய நலன் பறிபோகாமல் காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். நிலப்பகுதிகளை கபளீகரம் செய்யத் துடிக்கும் சீனாவிடம் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2 கருத்துகள்:

ttpian சொன்னது…

சிவசங்கர மேனனும்,நாராயனனும்,அந்தோனியும், இந்தியாவை அழிவுப்பாதயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளார்கள்:
சோனிஅ என்ன செய்வார்?
சிறப்பு விமானத்தில் ஏறி,தப்பி இடாலி:
மஞ்சல் துண்டு?

Unknown சொன்னது…

தங்களின் எண்ணங்களுக்கு என்னுடைய நன்றிகள்.