புதன், 14 அக்டோபர், 2009

நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம்

ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு தமிழீழ அரசாங்கம்


ஆஸ்லோ, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, உதயமாகவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்க உள்ளது.

நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் இம்மாதம் 2ந் தேதி முதல் 4ந் தேதி வரை நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான செயற்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்மையில் நடந்த போரில் விடுதலைப்புலிகள் முழு வதுமாக ஒடுக்கப்பட்ட பின் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு நாடுகடந்த தமிழீழ அரசு அமைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. இந்த அரசின் மூலமாக ஈழத்தமிழர் களின் விடுதலைப் போராட்டம் அதன் இலக்கை அடையும் வரை முன்னெடுத்துச் செல்லப்படும் என்று விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக பொறுப்பேற்ற கே.பி .என்று அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கூறியிருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கு புலம் பெயர்ந்து வாழும் ருத்ரகுமார் என்ற வழக்கறிஞர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில், இவ்வரசை அமைப் பதற்கான செயற்குழு இம்மாதம் 2ந் தேதி முதல் 4ந் தேதி வரை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கூடி ஆலோசனை நடத்தியது. ஆஸ்லோவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களையும், அமைப்புகளையும் பொது மேடையில் சந்தித்து இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் நாடுகடந்த தமிழீழ அரசு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவது என்றும், நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கு முதற்கட்டமாக அரசியல் சாசனத்தை இயற்றும் (அரசியல் யாப்பு அவை) அவைக்கு தேர்தலை நடத்துவது தொடர் பாகவும், அதற்கான நடை முறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அரசியல் யாப்பு அவையில் இருபாலாரும் பிரதிநிதித்துவம் பெறுவது பற்றியும், தேர்தல் பற்றிய திட்டமிடல் மற்றும் கண்காணிப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங் களை அமர்த்துவது பற்றிய சாத்தியக் கூறுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன் ஜெனீவாவில் இயங்க வுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு, பல்வேறு நாடுகள் தழுவிய அளவில் செயற்குழுக்களை அமைத்து அவற்றை ஒருங் கிணைத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல் படுதல் ஆகியவை தொடர்பாகவும் ஆஸ்லோ ஆலோ சனைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.

அதன் ஒரு பகுதியாக முள்வேலி வதை முகாம்களில் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கு இந்த ஆலோசனைக் கூட்டம் இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் விடுதலை செய்யவும், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லவும் முகாம்களில் நடை பெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும் என்றும் இக்கூட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இத்தகவல்கள் ஒரு இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதன் வடிவம் மாறலாமே தவிர, போராட்டம் ஓயாது என்று விடுதலைப்புலிகள் அறிவித் திருந்தனர். அதற்கிணங்க தற்போது நாடுகடந்த தமிழீழ அரசு ஜெனீவா வில் இருந்து இயங்கவிருப்பது ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

2 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

இனி மேல் செல்ல வேண்டிய பாதை.பாதையின் தூரம்,இடர்கள் நிறைய இருக்கலாம்.ஆனால் காலம் வெளிச்சத்தைக் கொண்டு வரும்.

Unknown சொன்னது…

தங்களின் எண்ணங்களுக்கு என்னுடைய நன்றிகள்.