வியாழன், 17 டிசம்பர், 2009

நா.முத்துக்குமார்: பாடல்களில் மனித வாழ்கையின் தேடல்


கடந்த 5 வரு​டங்​க​ளைப் போலவே இந்த வரு​ட​மும் அதி​கப் பாடல்​களை எழு​தி​யி​ருக்​கி​றார் பாட​லா​சி​ரி​யர் நா.முத்​துக்​கு​மார்.​ இப்​போது 34 படங்​க​ளில் தனி பாட​லா​சி​ரி​யர்,​​ 126 பாடல்​கள் என நீண்டு கொண்டு இருக்​கி​றது இவ​ரது சாத​னைப் பட்​டி​யல்.​

முக்​கி​ய​மான பாடல்​கள்....​ ​இலக்​கி​யத்​தின் மீதான காத​லும்,​​ அதை அமைத்​துக் கொடுக்​கிற தரு​ணங்​க​ளும்​தான் என்னை இவ்​வ​ளவு தூரத்​துக்கு இழுத்து வந்​த​தாக நினைக்​கி​றேன்.​ ஒவ்​வொரு பாட​லை​யும் எழுதி முடித்​த​தும்,​​ பாட​லின் தரு​ணங்​க​ளுக்​காக காத்​தி​ருந்​த​து​தான் என்னை நகர்த்​திக்​கொண்​டி​ருக்​கி​றது.​ முக்​கி​ய​மான பாடல்​கள் எனப் பார்க்க போனால் ஒரு கல் ஒரு கண்​ணாடி...,​​ விழி மூடி யோசித்​தால்...,​​ ஏதோ செய்​கி​றாள்...​ என சொல்​லிக் கொண்டே போக​லாம்.​ ஆனால் அவற்றை முக்​கிய பாடல்​கள் என்ற கேள்​வி​யில் அடைக்க விரும்​ப​வில்லை.

பல்​ல​விக்கு மெனக்​கெ​டலா?​​ ​பாட ​லில் பல்​ல​வி​தான் முக்​கி​யம்.​ ஆனால் புது வார்த்​தை​கள் வேண்​டும்.​ மன​சுல பதிந்து சிற​க​டித்து கிடந்த விஷ​யங்​கள் எல்​லாம் பழ​மை​யாகி விட்​டது.​ கதையை உள்​வாங்​கு​கிற மக்​கள்,​​ நிச்​ச​யம் பாட​லை​யும் அதற்கு ஏற்​றால்​போல் எதிர்​பார்க்​கி​றார்​கள்.​ பாப​நா​சம் சிவ​னில் ஆரம்​பித்து கண்​ண​தா​சன் ஏன்..?​ என் காலம் வரைக்​கும் எல்லா பாடல்​க​ளும் மக்​களை சென்​ற​டைந்து கொண்​டு​தான் இருக்​கி​றது.​ அதில் எத்​தனை பாடல்​கள் இன்​னும் முணு​மு​ணுக்​கப்​ப​டு​கி​றது எனத் தெரி​ய​வில்லை.​ 1500 பாடல்​க​ளுக்கு மேல் எழுதி விட்​டேன்.​ அதில் 90 சத​வீ​தம் ஹிட்.​ எல்லா பாடல்​க​ளும் இப்​படி எழு​தி​ய​து​தான்.​ சில பாடல்​க​ளுக்கு அனு​ப​வங்​கள் கை கொடுக்​கும்.​ சில​வற்​றுக்கு உலக இலக்​கி​யங்​கள் முதல் மனி​தனை படித்​தது வரை சில விஷ​யங்​கள் கை கொடுக்​கும்.​ இப்​ப​டித்​தான் என் பய​ணம் போய்க் கொண்​டி​ருக்​கி​றது.​ 

பாடல்​க​ளின் தேடல்...​ ​திரைப் பாடல்​கள் என்​றாலே அதீத கற்​ப​னை​யும்,​​ கொஞ்​சம் அறி​வி​ய​லோடு பட்​டி​யல் தன்​மை​யும் கோலோச்சி இருந்​ததை மாற்றி கண்​ண​தா​ச​னின் இலக்​கி​யத் தரத்​துக்கு எளி​மை​யாக்கி இருப்​ப​தாக நினைக்​கி​றேன்.​ கடைக் கோடி மனி​த​னை​யும் சென்​ற​டை​யும்,​​ ஒரே ஆயு​த​மாக இருக்​கும் பாடல்​க​ளுக்​குள் மனித வாழ்க்​கை​யின் தேடலை வைத்​தது என் வெற்​றி​யாக இருக்​க​லாம்.​ அதை​யும் தாண்டி தேட​லில் என் வாழ்க்கை தொட​ரும்.

சினிமா இயக்​கம்....​ ​இரண்டு வரு​டங்​கள் ஆக​லாம்.​ அல்​லது அதற்கு மேலும் ஆக​லாம்.​ திட்​டம் மட்​டும் நிஜம்.​ லிங்​கு​சாமி,​​ "கீரி​டம்' விஜய் மாதி​ரி​யான சினிமா நண்​பர்​கள் கதை கேட்​டி​ருக்​கி​றார்​கள்.​ அதை ஒய்வு நேரங்​க​ளில் எழு​து​வ​தற்​கான முயற்​சி​க​ளில் இருக்​கி​றேன்.​ இப்​போ​தைக்கு பாடல்​கள் எழு​தவே நேரம் போத​வில்லை.

பாராட்​டு​கள்....​ ​ ​நிறைய இருக்​கி​றது.​ வாழ்க்கை முழு​வ​தும் வழி நெடு​கி​லும் பாராட்​டு​கள்​தான் என்னை இயங்க வைக்​கி​றது.​ சபாஷ் என என் வரி​கள் மீது சில வார்த்​தை​கள் சிந்​தும் போது என் படைப்​பு​க​ளுக்​கான தரு​ணங்​களை எண்​ணிப் பார்த்து மனம் நெகிழ்​கி​றேன்.​ பால​சந்​தர் தொடங்கி சசி​கு​மார் வரை எழுதி விட்​டேன்.​ ஒவ்​வொரு பாட​லுக்​கும்,​​ வரிக்​கு​மான பாராட்​டு​கள்​தான் என் வாழ்​நாள் பொக்​கி​ஷம்.​ 

"அங்​காடி தெரு' படத்​தின் பாட​லுக்கு விரு​தாமே?​ ​ஆமாம், ​​ "அங்​காடி தெரு'வில் வரும் ""புல்​லும் பூண்​டும் வாழும் உல​கம்..​ நீயும் நானும் வாழ வழி​யில்​லையா?​'' என்ற பாடலை எழு​தி​யி​ருக்​கி​றேன்.​ வறுமை பற்றி எழு​தப்​பட்ட கவி​தை​க​ளில் உல​கின் 5 சிறந்த படைப்​பு​க​ளில் ஒன்​றாக "உலக கவி​ஞர்​கள் சங்​கம்' அதை தேர்வு செய்​தி​ருக்​கி​றது.​

கேள்​வி​கள்...​ ​பிர​பஞ்​சமே கேள்​வி​க​ளின் அணுக்​க​ளால் ஆனது.​ பதில் உள்ள கேள்​வி​கள்.​ பதில் இல்லா கேள்​வி​கள்.​ கேள்​வி​க​ளுக்​குள் அடங்​காத கேள்​வி​கள்.​ விடையே கேள்​வி​யாய் இருக்​கும் கேள்​வி​கள்.​ என நம் மன​தின் மரக்​கி​ளை​யில் ஆயி​ரம் கேள்​வி​கள் உதிர்ந்​துக் கொண்​டி​ருக்​கி​றது.​ எனக்​குள்​ளும் சில கேள்​வி​கள் உண்டு.​ கொஞ்​சம் முயன்றால் அவற்​றுக்கு பதில் கிடைத்து விடும்.​ ஆனால் அவை கேள்​வி​யாய் இருப்​பதே எனக்கு பிடித்​தி​ருக்​கி​றது.​ அத​னால் சில கேள்​வி​க​ளின் சேமிப்​பு​க​ளு​டன் என் நாள்​க​ளுக்கு சுவா​ரஸ்​யம் சேர்த்து கொள்​கி​றேன்.​

கருத்துகள் இல்லை: