ஞாயிறு, 20 டிசம்பர், 2009

உலகின் சிறந்த நிர்வாகிகள் : முகேஷுக்கு 5ம் இடம்


இந்திய பங்கு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் தலைசிறந்த நிர்வாகிகள் பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளார்.
 

உலகின் தலைசிறந்த 5 நிர்வாகிகளின் பட்டியலை ஹார்வர்டு பல்கலைகழகத்தின் ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் தயாரித்துள்ளது. பங்குச் சந்தையில் பதிவு பெற்றுள்ள 2000 கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் இந்தப் பட்டியலுக்காக ஆய்வு செய்யப்பட்டனர். 

1995 ஜனவரிக்கு பின் 2007 டிசம்பர் வரை பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் 33 நாடுகளைச் சேர்ந்தவர்கள். 48 தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் சராசரி வயது 52. இவர்களில் 1.5 சதவீதம் பேர் பெண்கள். 15 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் சொந்த நாடு அல்லாத பிற நாடுகளில் பணி புரிகிறார்கள்.
 

உலக அளவில் தலை சிறந்த 5 நிர்வாகிகளின் பெயரைக் கொண்ட பட்டியலுடன் தயாரித்து ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் வெளியிட்டுள்ளது. முதல் நான்கு இடங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், யுன் ஜோங்& யோங்& சம்சங் எலெக்ட்ரானிக்ஸ், அலெக்ஸி மில்லர்&கேஸ்புரோம் நிறுவனம்&ரஷ்யா, ஜான் சேம்பர்ஸ்&சிஸ்கோ சிஸ்டம்ஸ் ஆகியோர் உள்ளனர்.

டாப் 50 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி.

கருத்துகள் இல்லை: