ஞாயிறு, 13 டிசம்பர், 2009

துபை நெருக்​கடி உணர்த்​து​வது என்ன?து​பை​யில் ஏற்​பட்​டுள்ள நிதி நெருக்​க​டியால்,​​ இந்​தியா எந்த அளவு பாதிக்​கப்​ப​டும்?​ துபை அர​சுக்​குச் சொந்​த​மான,​​ "துபை வேர்ல்டு' நிதி நிறு​வ​னம் 5,900 கோடி டாலர் கட​னைத் திரும்​பச் செலுத்​து​வ​தற்கு மேலும் கால​அ​வ​கா​சம் கோரி​யுள்​ளது.​ ஏற்​கெ​னவே பொரு​ளா​தார மந்த நிலை​யில் சிக்​கி​யுள்ள உலக நாடு​கள் அதை ஓர் அபாய அறி​விப்​பா​கப் பார்த்​த​தில் வியப்​பில்லை.​
 

எ ​னவே,​​ இச் செய்தி உல​கின் முக்​கிய பங்​குச் சந்​தை​கள் அனைத்​தை​யும் உலுக்​கி​விட்​டது.​ நவம்​பர் 27 வெள்​ளிக்​கி​ழமை அன்று 223 புள்​ளி​கள் சரிந்​தன.​ குறிப்​பாக,​​ கட்​டு​மா​னத்​துறை மற்​றும் வங்​கித்​துறை பங்​கு​கள் பெரி​தும் சரிந்​தன.​ துபை​யில் ஏற்​பட்ட நிதி நெருக்​கடி இந்​தி​யா​வில் எவ்​வித பாதிப்​பை​யும் ஏற்​ப​டுத்​தாது என்று மத்​திய அரசு அறி​விப்பு வெளி​யிட்​ட​தைத் தொடர்ந்து சரிவு கட்​டுக்​குள் வந்​தது.​
 

து​பை​யில் நேர்ந்​தது என்ன?​ "துபை வேர்ல்டு' நிதி நிறு​வ​னம் கட்​டு​மா​னத் துறையை ஊக்​கு​விக்​கும் நோக்​கில்,​​ சில ஆண்​டு​க​ளுக்கு முன் 8000 கோடி டாலர் அள​வுக்​குக் கடன் வாங்​கி​யி​ருந்​தது.​ இத்​தொ​கை​யைக் கொண்டு,​​ நான்​காண்டு காலத்​துக்​குக் கட்​டு​மா​னப் பணி​களை முடுக்​கி​விட இந்த நிறு​வ​னம் திட்​டம் தீட்​டி​யி​ருந்​தது.​ இடை​யில் ஏற்​பட்ட சர்​வ​தேச பொரு​ளா​தார மந்​த​நிலை,​​ மற்ற நாடு​க​ளைப் போலவே,​​ துபை​யின் ரியல் எஸ்​டேட் துறை​யைப் பாதித்​தது.​
 

2008-ம் ஆண்டு வீடு​க​ளின் விலை உச்ச நிலை​யில் இருந்​தது.​ சர்​வ​தேச நிதி நெருக்​க​டி​யின் விளை​வாக விலை​கள் கிட்​டத்​தட்ட பாதி அள​வுக்கு வீழ்ச்சி அடைந்​தன.​ இதன் தொடர்​வி​ளை​வாக 8000 கோடி டாலர் கட​னில்,​​ செலுத்த வேண்​டிய 5900 கோடி டாலர் கட​னைத் திரும்​பச் செலுத்​து​வ​தற்கு 6 மாத கால அவ​கா​சம் கோரி​யுள்​ளது,​​ துபை வேர்ல்டு நிதி நிறு​வ​னம்.​
 

இது சர்​வ​தேச அள​வில் ஓர் அதிர்ச்சி அலை​யைத் தோற்​று​வித்​துள்​ளது.​ கார​ணம்,​​ பல நாடு​கள் இப்​போ​து​தான் மந்த நிலையி​லி​ருந்து சிறிது,​​ சிறி​தாக மீட்சி அடைந்து வரு​கின்​றன.​ வெண்​ணெய் திரண்டு வரும் சம​யத்​தில் தாழி உடைந்​து​வி​டக் கூடாதே என்ற அச்​சம் பல நாடு​களை கௌ​விக்​கொண்​டுள்​ளது.​ சர்​வ​தேச அள​வில் பங்கு விலை​கள் மட்​டும் அல்​லா​மல்,​​ கச்சா எண்​ணெய் விலை​யும் சரிந்​துள்​ளது.​
 

எ​னி​னும்,​​ வளை​குடா நாடு​க​ளில்,​​ துபைக்கு இந்த நிலை ஏற்​பட்​டி​ருந்​தா​லும்,​எண்​ணெய் வளம் மிகுந்த அபு​தாபி,​​ டோஹா போன்ற நாடு​கள் செல்​வச் செழிப்​பு​டன் வலு​வான நிலை​யில் உள்​ளன.​ இத​னால் நிதி நெருக்​க​டி​யைச் சந்​திக்​கும் துபைக்கு அபு​தாபி உத​வக்​கூ​டும் என்று வல்​லு​நர்​கள் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ள​னர்.
இந்​நி​லை​ யில்,​​ துபை​யில் ஏற்​பட்​டுள்ள நிதிச் சிக்​கல்,​​ இந்​தி​யா​வைப் பாதிக்​குமோ என்ற அச்​சம் ஏற்​ப​டு​வது இயல்பே.​ கடும் பாதிப்பு இருக்​காது என்​பதே பல வல்​லு​நர்​க​ளின் மதிப்​பீடு.​ அதி​லும் குறிப்​பாக,​​ வேலை​வாய்ப்பு மற்​றும் ஏற்​று​ம​தி​யைப் பாதிக்​காது என்ற நம்​பிக்கை பர​வ​லாக உள்​ளது.​
அங்கு பணி​பு​ரி​யும் ஊழி​யர்​கள் பணம் அனுப்​பு​வ​திலோ அல்​லது இங்​குள்ள உற​வி​னர்​கள் பெறு​வ​திலோ சிர​மம் இருக்​காது என்று மத்​திய நிதி அமைச்​ச​கம் தெளி​வு​ப​டுத்​தி​யுள்​ளது.​
 

சு​மார் 50 லட்​சம் இந்​தி​யர்​கள் வளை​குடா நாடு​க​ளில் வாழ்​கி​றார்​கள்.​ அவர்​கள் ​ இந்​தி​யா​வில் உள்ள தங்​க​ளது குடும்​பங்​க​ளுக்கு ஆண்​டு​தோ​றும் 46,000 கோடி ரூபாய் அள​வுக்கு அனுப்​பு​கி​றார்​கள்.​ இதில் சுணக்​கம் ஏற்​ப​டு​வ​தற்​கான வாய்ப்பு இல்லை.​அ​தே​போல்,​​ துபைக்கு இந்​திய ஏற்​று​மதி சரி​வ​தற்​கான சாத்​தி​யம் இல்லை என்று மத்​திய வர்த்​தக அமைச்​சர் ஆனந்த சர்மா கூறி​யி​ருப்​பது நம்​பிக்கை ஊட்​டு​வ​தாக உள்​ளது.​
 

 2008-2009-ம் ஆண்​டில் 2400 கோடி டாலர்​கள் மதிப்​பில் இந்​தி​யப் பொருள்​கள் ஏற்​று​மதி ஆனது.​ இந்த ஏற்​று​மதி அளவை நடப்​பாண்​டில் மேலும் அதி​க​ரிக்க வேண்​டும் என்​னும் இந்​திய ஏற்​று​ம​தி​யா​ளர்​க​ளின் இலக்கு எந்த அளவு கைகூ​டும் என்​பதை பொறுத்​தி​ருந்​து​தான் பார்க்க வேண்​டும்.​
இந்​தி​யத் தக​வல் தொழில்​நுட்​பத் துறையை எடுத்​துக்​கொண்​டோ​மா​னால்,​​ துபை நெருக்​க​டி​யின் விளை​வாக இந்​தி​யா​வில் இந்​தத் துறை​யி​ன​ருக்கு உட​னடி பாதிப்பு இராது என்​பதே முன்​னணி தக​வல் தொழில் நுட்ப நிறு​வ​னங்​க​ளின் கணிப்​பாக உள்​ளது.
 

முன்​ன​தாக ஏற்​பட்​டி​ருந்த மந்தநிலையி​லி​ருந்து மீட்சி அடைந்து வரும் இத்​து​றை​யி​ன​ருக்கு இது ஆறு​தல் அளிக்​கக்​கூ​டிய கணிப்பு என​லாம்.​
அ​தே​ச​ம​யம்,​​ இந்​தித் திரை உல​கத்​துக்கு துபை நிகழ்வு கொஞ்​சம் அச்​சு​றுத்​த​லாக இருக்​கக்​கூ​டும்.​ கார​ணம்,​​ இத்​து​றை​யி​ன​ருக்கு வசூல் ஆகும் வெளி​நாட்டு வரு​வா​யில் 40 முதல் 45 சத​வீ​தம் துபையி​லி​ருந்து தான் கிடைக்​கி​றது.​
 

சரி,​​ துபை​யில் வாழும் இந்​தி​யர்​கள் நிலை என்ன?​ துபை பொரு​ளா​தா​ரத்​தில் இந்​தி​யர்​க​ளின் பங்கு கணி​ச​மா​னது என்​பது அனை​வ​ரும் அறிந்​ததே.​
 தற்​போ​தைய நிலை​யில் அந்த நாட்​டில் ரியல் எஸ்​டேட் வியா​பா​ரம் சூடு​பி​டிக்க சில​கா​லம் ஆக​லாம்.​ எனவே அத்​து​றை​யில் முத​லீடு செய்​துள்ள இந்​தி​யர்​கள் பொறுமை காக்க வேண்டி இருக்​கும்.​
 

வீ​டு​கள் விற்​பனை 2008-ம் ஆண்டு பிற்​ப​கு​தி​யில் 50 சத​வீ​தம் அளவு சரிந்​தது.​ அப்​படி,​​ விற்​பனை ஆன வீடு​கள் மற்​றும் கட்​ட​டங்​க​ளின் பெரும் பகு​தியை இந்​தி​யர்​கள்​தான் வாங்கி வந்​த​னர் என்​பது சுவை​யான செய்தி.​ இந்​தத் தக​வ​லைத் தரு​வது துபை நில விற்​ப​னைத் துறை.​
பொ​து​வாக,​​ துபை​யில் உள்ள அடுக்​கு​மா​டிக் குடி​யி​ருப்​பு​க​ளில்,​​ 20 சத​வி​கி​தம் பிரிட்​டிஷ் குடி​மக்​க​ளும்,​​ 14 சத​வீ​தம் இந்​தி​யர்​கள் மற்​றும் பாகிஸ்​தா​னி​யர்​க​ளும்,​​ 11 சத​வீ​தம் இரா​னி​யர்​க​ளும் வாங்​கி​யுள்​ளார்​கள் என்று துபை அரசு தெரி​விக்​கி​றது.​
 

"வில்லா' எனப்​ப​டும் தனி வீடு​க​ளைப் பொருத்​த​வரை 21 சத​வீத வீடு​கள் இந்​தி​யர்​க​ளுக்​குச் சொந்​த​மா​னவை.​ ஒட் ​டு​மொத்​த​மா​கப் பார்க்​கும்​போது,​​ துபை நெருக்​க​டி​யின் விளை​வாக இந்​தியா பாதிக்​கப்​ப​டா​மல் போன​தற்​குக் கார​ணம்,​​ இந்​திய வங்​கி​கள் துபை வேர்ல்டு நிறு​வ​னத்​துக்கு வழங்​கி​யுள்ள கடன் தொகை அதி​கம் அல்ல.​ பாரத ஸ்டேட் வங்கி ரூ.​ 1,500 கோடி கடன் வழங்​கி​யுள்​ளது.​ இது அந்த வங்கி வழங்​கி​யுள்ள மொத்த கடன் அள​வில் வெறும் 0.3 சத​வீ​தம் மட்​டுமே.​ அதே​போல்,​​ இன்​னொரு அர​சு​டமை வங்​கி​யான,​​ பேங்க் ஆப் பரோடா சுமார் 930 கோடி ரூபாய் வழங்​கி​யி​ருப்​ப​தா​கச் செய்​தி​கள் கூறு​கின்​றன.​
 

 இந்​தி​யா​வின் மிகப்​பெ​ரிய தனி​யார் வங்கி துபை வேர்ல்டு நிறு​வ​னத்​துக்​குக் கடன் வழங்​கி​யி​ருக்​கக் கூடும்.​ இது​பற்​றிய உறு​தி​யான தக​வல் இது​வரை வெளி​யா​க​வில்லை.​  ஆக,​​ இந்​திய வங்​கி​க​ளின் கடன் தொகை துபை நிறு​வ​னத்​துக்கு மித​மான அள​வில் மட்​டுமே உள்​ளது என்​பது வெளிப்​படை.​
÷பா ​ரத ரிசர்வ் வங்கி இந்​தத் தக​வலை வங்​கி​க​ளி​ட​மி​ருந்து திரட்​டிக் கொண்​டுள்​ளது.​ சில தினங்​க​ளில் கடன் அளவு துல்​லி​ய​மா​கத் தெரி​ய​வ​ரும்.​
÷வங்​கிக் கட​னைத் தவிர,​​ இந்​தி​யா​வில் உள்ள ரியல் எஸ்​டேட் நிறு​வ​னங்​கள் மற்​றும் வணிக நிறு​வ​னங்​கள் துபை​யில் செய்​தி​ருக்​கக்​கூ​டிய முத​லீ​டு​க​ளை​யும் கணக்​கில் எடுத்​துக்​கொள்ள வேண்​டும்.​
 

ஐ​ரோப்​பிய வங்​கி​கள் துபை ரியல் எஸ்​டேட் கம்​பெ​னி​க​ளுக்கு சற்று தாரா​ள​மா​கவே கடன் வழங்​கி​யுள்​ளன.​ ஆனால்,​​ இந்​திய வங்​கி​கள் அப்​ப​டிச் செய்​யா​த​தற்கு பாரத ரிசர்வ் வங்​கி​யின் சரி​யான,​​ தெளி​வான வழி​காட்​டு​தல்​க​ளும் நெறி​மு​றை​க​ளுமே கார​ணம் ​ ​என்​றால் மிகை​யல்ல.​
 

ஆக,​​ 1997-ல் நிகழ்ந்த தென்​கி​ழக்கு ஆசிய நாடு​க​ளின் நிதி நெருக்​க​டி​யால் பாதிக்​கப்​பட்ட இந்​தோ​னே​சியா,​​ தென் கொரியா,​​ தாய்​லாந்து நாடு​க​ளின் பொரு​ளா​தா​ரச் சரி​வும் சரி;​ 2001-ல் நிகழ்ந்த ஆர்​ஜென்​டீனா நிதி நெருக்​க​டி​யா​னா​லும் சரி;​ இரண்டு ஆண்​டு​க​ளுக்கு முன் நாம் எதிர்​கொண்ட மிகப்​பெ​ரும் சர்​வ​தேச நிதி நெருக்​க​டி​யா​னா​லும் சரி;​ தற்​போ​தைய துபை நிதி நெருக்​க​டி​யா​னா​லும் சரி,​​ வங்​கி​கள் "கன்​ஸர்​வே​டி​ஸம்' என்​னும் "மித​வாத' கோட்​பா​டு​க​ளைக் கடைப்​பி​டித்​தி​ருந்​தால் அந்த நாடு​கள் நிதி நெருக்​க​டிக்கு ஆளா​கா​மல் இருந்​தி​ருக்​கும் என்​பது திண்​ணம்.​

நன்றி: 
எஸ்.கோபாலகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: