திங்கள், 14 டிசம்பர், 2009

சாதித்து காட்டியது இந்தியா



இந்தியாவின் பலத்தை காட்டிட அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்த வேண்டியுள்ளது. விஞ்ஞான ரீதியாக முன்னேற்றம் காணும் நாடுகளில் நாமும் ஒரு சேர வருகிறோம் என அவ்வப்போது இந்தியா நிரூபித்து வருகிறது. இன்று காலை வங்கக்கடல் பகுதியில் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.  இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையினர் , கப்பற்படை இணைந்து உருவாக்கிய இந்த தனுஷ் ஏவுகணை ஏறக்குறைய பிரிதிவியின் சற்று முன்னேற்ற வடிவம் ஆகும்.

350 கிமீ தூரம் வரை சென்று தாக்கும்: விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ஒரிசா மாநிலம் பாலசோர் அருகே வங்க கடல் பகுதியில் காலை 11.30 மணியளவில் குறிப்பிட்ட இலக்கை நோக்கி சோதனை செய்யப்பட்டது.  இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது. அணு ஆயுதம் சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. இது கடல் மற்றும் கடலோர பகுதியில் 350 கிமீ தூரம் வரையிலான இலக்குகளையும் தாக்கக் கூடிய திறன் பெற்றது.


கடந்த 2000 ல் ஏப்ரல் 11ம் தேதி தனுஷ் ஏவுகணையின் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது தோல்வியை தழுவியது. சில தொழில்நுட்ப கோளாறுகளால், ஏவுகணையின் பல பகுதிகள் வெடித்து சிதறின. இந்த ஏவுகணையின் சோதனை கடந்த 2007ம் ஆண்டு வெற்றிகரமாக  நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: