வெள்ளி, 4 டிசம்பர், 2009

“செக்ஸ்” ஆர்வத்தை கால் அசைவால் கண்டுபிடிக்கலாம்; புதிய விஞ்ஞான தகவல்


செக்ஸ்” ஆர்வத்தை கால் அசைவு மூலம் கண்டு பிடிக்கலாம் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை கண் அசைவு மற்றும் முகமாற்றங்கள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்பது ஏற்கனவே உள்ள நடைமுறை.

இப்போது கால் அசைவு மூலம் கூட மனதில் இருப்பதை கண்டு பிடித்து விடலாம் என்று இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழக மனோதத்துவ விஞ்ஞானி கோவரி பியெச்டல் கூறுகிறார். இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி இந்த தகவலை வெளியிட்டு உள்ளார்.

ஒரு பெண்ணுக்கு ஒருவர் மீது விருப்பம் இருந்தால் அவரை பார்த்ததும் நேராக நிற்கும் கால் பாதங்களை சற்று சற்று தளர்த்தி உடலை விட்டு விலகியபடி வைத்துக்கொள்வார்.

அவரை பிடிக்கவில்லை என்றால் கால்களை பெருக்கல்குறி போல குறுக்காக கால் நுனியை மடக்கியபடி விரைப்பாக வைத்து கொள்வார்.
 

இது போல செக்ஸ் ஆர்வம் இருக்கும் நேரங்களில் கால்களை வைத்திருக்கும் விதம், அசைவுகள் மாறி விடும் இதை வைத்தும் கண்டு பிடித்து விடலாம். அதே போல கோபம், ஏமாற்றம் எண்ணம் போன்றவற்றையும் கால் அசைவு மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்

கருத்துகள் இல்லை: