வியாழன், 10 டிசம்பர், 2009

கைத்தொலைபேசியால் மூளை புற்று நோய் வர வாய்ப்பு


மூளைப்புற்றுக்கும் கைத்தொலைபேசிக்கும் இருக்கும் தொடர்பை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேற்பட்டு கைத்தொலைபேசியைப் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் அரிதாக ஏற்படும் மூளைப்புற்று ஏற்படும் ஆபத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. காதுக்குப் பக்கத்தில் உள்ள தலைப்பகுதியில் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.

கைத்தொலைபேசியில் உள்ள அணுக்கதிர்கள் மூளை செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தி நினைவாற்றலைப் பாதிக்கின்றன.

மூளைப்புற்று ஏற்பட்ட 1600 பேர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேற்பட்டு கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும்பொழுது மூளையின் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு ஒரு பக்க காது செவிடாகிறது. 1980களில் இலட்சம் பேரில் ஒருவருக்குத்த¡ன் மூளைப்புற்று ஏற்பட்டது. இப்பொழுது 80,000 பேரில் ஒருவருக்கு மூளைப்புற்று என்ற நிலையில் உள்ளது.

கருத்துகள் இல்லை: