சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை 100 அடி சாலையில் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்பதை பகுதி-1 -இல் பார்த்தோம்....
மேம்பாலங்கள் அமைத்து அதில் ரயிலை இயக்குவது நாம் பார்த்த ஒன்று.
இந்தியாவில் இது போன்ற ரயில் தடங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் சுரங்கபதை அமைத்து அதில் எப்படி ரயிலை இயக்கப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
இப்போது பறக்கும் ரயிலில் செல்லும்போது கட்டிடங்கள்,மொட்டை மாடிகளை கண்டி ரசிக்கிறோம்.மெட்ரோ ரயிலில் கட்டிடத்தின் அடித்தளத்தை ரசித்தபடி பயணம் செய்யலாம்." டனல் போரிங் மெஷின் " என்னும் நவீன துளையிடும் இயந்திரம் மூலம் பூமிக்கடியில் ஆழத்துக்கு தோண்டி சுரங்கப் பாதை அமைக்கிறார்கள்.
பூமிக்கு மேல் எந்த அதிர்வையும் இந்த பாதை வழியாக செல்லும் ரயில்கள் ஏற்படுத்தாது. 19 இடங்களில் அண்டர் கிரௌண்ட் ரயில்வே நிலையங்கள் அமைய போகிறது. சரியாக அண்ணா சாலை எல்.ஐ.சி கட்டிடத்திற்குக் கீழே ஒரு ரயில் நிலையம் அமையப்போகிறது.
இப்படி அமையும் ரயில்வே நிலையங்கள் எப்படி இருக்கும்....
ரயில் மற்றுமின்றி ரயில்வே நிலையங்களும் முழு குளிர்சாதனம் வசதியுடன் அமையும்.கதவுகள் சென்சார் சிஸ்டம் முறையில் இயங்கும்.நிலையங்கள் பற்றிய விபரங்கள் ரயிலுக்கு உள்ளேயே அறிவிக்கப்படும்.முழுவதும் தானியங்கி முறைதான்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடி. ஒரு கிலோ மீட்டர் பாதை அமைக்க சுமார் ரூ.250 கோடி செலவு. திட்ட மதிப்பில் 59% ஜப்பானின் " அனைத்து நாடுகள் நட்புறவுக்கான அமைப்பு" கடனாக வழங்குகிறது.மீதமுள்ள தொகையை மத்திய,மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன.....
இந்த திட்டத்தை முடிக்க 2015 -ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் அதற்கு முன்பாகவே திட்டத்தை முடிக்க தமிழக அரசும்,இத்திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள துணை முதலமைச்சருமான திரு.மு.க ஸ்டான்லின் அவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த ரயில் பாதைக்கான மேம்பால பணிகள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பால பணிகள் முடிவடைந்ததும் முதல் கட்டமாக " கோயம்பேடு - பரங்கிமலை " "சைதாபேட்டை - விமான நிலையம் " மார்கத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தால் ஏற்படப் போகும் நன்மைகள்:-
சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகருக்கு பஸ்சில் செல்ல ஒரு மணி நேரம் ஆகின்றது. அதவும் கூட்டத்தில் பிதுங்கியபடி செல்ல வேண்டிய சூழ்நிலை. இனி அந்த பிரச்சினை இருக்காது. 15 நிமிடங்களில் இந்த ரயிலில் குழு குழு வசதியுடன் சென்று விடலாம்.
ஆறு பெட்டிகளுடன் இயங்கவுள்ள இந்த ரயிலில் ஒரே சமயத்தில்
1500 பேர் பயணம் செய்யலாம்.இந்த எண்ணிக்கை, குறைந்த பட்சம் 16 பஸ்கள், 300 கார்கள் அல்லது 750 டூ வீலர்கள்
1500 பேர் பயணம் செய்யலாம்.இந்த எண்ணிக்கை, குறைந்த பட்சம் 16 பஸ்கள், 300 கார்கள் அல்லது 750 டூ வீலர்கள்
சாலைகளில் இருந்து விலகி கொள்வதற்கு சமமானது.
அதுவும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் இயக்கப்பட உள்ளதால் ட்ராபிக் ஜாமே இல்லாமல் போய்விடும்.பஸ்ஸை விட கட்டணம் குறைவாக இருக்கும்,உடனுக்குடன் ரயில் இருப்பதால் கூட்ட நெரிசல் இருக்காது.ரயில் நிலையங்களை ஒட்டி ஷாப்பிங் மால்கள், சினிமா தியாட்டர்கள் வர வாய்ப்புகள் அதிகம். ஒட்டு மொத்தத்தில் சென்னையின் வளர்ச்சி விகிதம் உயரும் என்பதில் சந்தேகமில்லை.
பாதுகாப்பு எப்படி :-
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதன்மை ஆலோசகராக இருப்பது டெல்லி மெட்ரோ ரயில் கழகம்.அந்த கழகம் தந்திருக்கும் பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் " எல்லா சாதகபாதகங்களையும் முறையாக ஆய்வு செய்தே திட்டப் பணிகளை தொடங்கியுள்ளோம்.மேலும் அதி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.கட்டுமானங்கள் மிக உறுதியாக இருக்கும்.
பாதுகாப்பு பற்றி அச்சப்படவே தேவையில்லை என்கிறது அந்த அறிக்கை.
உலகெங்கும் பல நாடுகளின் நகரங்களில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.அந்த வரிசையில் இணையப்போகிறது
" நம் சென்னை ". அந்த இனிய அனுபவத்திற்கு நாம் எல்லோரும் தயாராகுவோம்!
நட்புடன்
4 கருத்துகள்:
எல்லாம் ரொம்ப நன்னாயிருக்கு, நம்ம கெட்ட நேரம் ஆத்தா ஆட்சிக்கு வந்தா இந்த திட்டம் தொடருமா இல்லை கிடப்பில் போடப்படுமா?
Thanks Sweatha Sanjana.
am i already joined the www.jeejix.com.
Thanks for your invitation.
தங்களின் வருகைக்கும்,கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி
பரிதி நிலவன்.
அடுத்து ஆட்சிக்கு யார் வந்தாலும் இந்த திட்டம் மட்டும் இல்லை,மக்களுக்கு பயன்தரக் கூடிய எந்த திட்டங்களையும் கிடப்பில் போடாமல் தொடர்ந்து நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
அதுதான் ஓட்டடளித்த மக்களுக்கு அவர்கள் செய்யும் பரிகாரமாகும்.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
மிகவும் அருமை
கருத்துரையிடுக