செவ்வாய், 1 டிசம்பர், 2009

அப்பாவை தேடினால் ‘அம்மா’ கிடைத்தார்

லண்டன்: என் அப்பா யாரும்மா? என்று கேட்டு நச்சரித்த மகளிடம் அடையாளம் சொல்லி அனுப்பினார் அம்மா. தேடியலைந்த மகள் கண்டுபிடித்ததோ அப்பாவை அல்ல, இன்னொரு அம்மாவை! இந்த ருசிகர தேடல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அரங்கேறியது. 22 வயது பெண் எமிலி வாலிஸ். இவர் தந்தையை பார்த்ததே இல்லை, தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். ஆனால், அடிக்கடி அப்பா யாரும்மா? என்று தாயிடம் கேட்டு வந்தார். நீ வளர்ந்ததும் சொல்றேன், பொறுமையா இரு என்று சொல்லி வந்தார் அம்மா. ஓராண்டுக்கு முன், உன் அப்பா பேரு கிளைவ் ஹாரிங்சன் என்று கூறி அடையாளங்களைச் சொல்லி மகளை தேடி வரச் சொன்னார் அம்மா.

விடா முயற்சியுடன் கிளைவ் ஹாரிங்சனை தேடிய எமிலி, கடைசியில் கடந்த சில நாட்கள் முன்பு அவரைக் கண்டுபிடித்து விட்டார் . ஆனால், அப்பாவாக அல்ல, அம்மாவாக! ஆம். கிளைவ் ஹாரிங்சன், சலோ என்று பெயரை மாற்றிக் கொண்டு பெண்ணாக மாறியிருந்தார். லிப்ஸ்டிக் பூசிய உதடுகள், வீட்டில் 82 ஜோடி லேடீஸ் செருப்புகள் என சகதோழியாக அப்பாவை பார்த்து முதலில் அதிர்ந்தார் எமிலி. பிறகு, சகஜ நிலைக்கு திரும்பினார். இப்போது எப்படியோ, இனி அப்பன் பேர் தெரியாதவள் என யாரும் சொல்ல முடியாது. ஒரிஜினல் அப்பாவை கண்டுபிடித்தாகி விட்டது என மகிழ்கிறார் எமிலி.

அவர் கூறியதாவது: லிப்ஸ்டிக், வெள்ளி நிற சல்வார், மேக்கப், நீண்ட விக் என அப்பாவைப் பார்த்ததும் என்ன சொல்வது என புரியாமல் தவித்தேன். பிறகு, என்னை விட நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் அப்பா(!) என்றேன்.எனது அப்பாவைக் கண்டுபிடித்து அம்மாவுடன் ஒன்று சேர்க்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன்.  அவரைக் கண்ட பிறகு இனி, அதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தேன். எனினும், அவருடன் தோளோடு தோள் நின்று வாழ்க்கையை தொடர முடிவு செய்துள்ளேன்.முழு பெண்ணாக மாற அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துக் கொள்வேன். எனது திருமணத்தின்போது மணப்பெண் தோழியாக ÔசலோÕ எப்போதும் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் பெருமைப்படுவேன் என்றார். அம்மா ஏன் இந்த புது அம்மாவை விட்டுப் பிரிந்திருப்பார் என்பதை மகள் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.

கருத்துகள் இல்லை: