திங்கள், 7 டிசம்பர், 2009

துபாய் நிதி நெருக்கடிக்கு ஆடம்பரமே காரணம்


துபாயில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தாமின் ஆடம்பர வாழ்க்கையே காரணம் என்று கூறப்படுகிறது.துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தாம். 2006ல் இவர் பதவிக்கு வந்தார். இப்போது வயது 60. லண்டன், நியூயார்க் போன்ற மேற்கத்திய தோற்றத்துக்கு துபாயை மாற்றப் போவதாக பதவிக்கு வந்தவுடன் ஷேக் சபதம் செய்தார். அரசியலைக் கடந்த வர்த்தக நோக்கில் அவரது பார்வை இருந்தது.
இதனால், அரபு உலகின் பழமைவாதம் மற்றும் கடுமையான அரசியல் கட்டுப்பாடுகள் மறைந்தன. மேற்கத்திய நாகரீகம் நுழைந்தது. துபாயின் மாற்றங்களை ஷேக் நேரடியாக மேற்பார்வை செய்தார். செயற்கை தீவுகள், வானை முட்டும் கட்டிடங்கள், சர்வதேச பள்ளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், சொகுசு ஓட்டல்கள் என துபாய் முழுவதும் நாளுக்கு நாள் புதிதாக முளைத்தன.அரபு இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததுடன், மேற்கத்திய நாகரீக சொகுசு வாழ்க்கை பழக்கப்படுத்தப்பட்டது. அதேநேரம், ஒட்டகங்கள், குதிரைகள் வளர்த்தார் பிரதமர். பாலைவனத்தில் அவற்றில் சவாரி செய்தார்.
மறுபுறம் மெர்சிடஸ் பென்ஸ் காரில் துபாயின் பளபளக்கும் சாலைகளில் விரைந்தார். பழமையான முறையில் தர்பாரில் அமர்ந்து மக்கள் குறை கேட்ட ஷேக், அடுத்த விநாடியே ட்விட்டர், பேஸ்புக் இணைய தளங்களில் இளைஞர்களுடன் புகுந்து விளையாடினார்.

அவரது இந்த ஆடம்பர வாழ்க்கை முறைக்கு தேவையான பணத்துக்கு பல வர்த்தகங்களில் கவனம் செலுத்தினார். போர்ப்ஸ் இதழ் கணிப்பின்படி ஷேக் முகமது பின் ரஷீத் மக்தாமின் சொத்து மதிப்பு ரூ.55,500 கோடி. ஆனால், தவறான முடிவுகளால் துபாய் நிறுவனங்கள் கடன் சுமையில் தத்தளிக்கும் தொகை ரூ.2.75 லட்சம் கோடி. கடந்த வாரத்தில் துபாய் நிதி நெருக்கடி விவகாரம் வெடிக்கும் முன் பிரதமர் ஷேக் அளித்த பேட்டியில், ÔÔதுபாய்க்கு எந்த பிரச்னையும் இல்லை. அதனால், கவலையில்லைÕÕ என்றார். ஆனால், சில தினங்கள் முன், நிதி நெருக்கடிக்கு சர்வதேச நிறுவனங்களே காரணம் என்று அவர் ஆத்திரத்துடன் கூறினார்.

1 கருத்து:

shabi சொன்னது…

இப்ப உள்ள சூழலுக்கு ஏற்ற கட்டுரை