திங்கள், 7 டிசம்பர், 2009

புவி வெப்பத்தை குறைப்பதில் நமது பங்கு?பு​வி​வெப்​பத்​தைக் குறைப்​ப​தில் தனது பங்கு என்ன என்​பதை அமெ​ரிக்கா அறி​வித்​து​விட்​டது. அதா​வது 2005-ம் ஆண்டு வெளி​யேற்​றிய பசுமை இல்ல வாயுக்​க​ளின் அள​வில் 18 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​ளப்​போ​வ​தாக தெரி​வித்​தி​ருக்​கி​றது. 
வள​ரும் நாடு​க​ளில் மிக அதி​க​மாக பசுமை இல்ல வாயுக்​களை வெளி​யேற்​றும் சீனா,​ தான் 35 முதல் 40 விழுக்​காடு குறைக்​கப் போவ​தாக அறி​வித்​துள்​ளது. சீனா​வைப் போலவே ​ இந்​தி​யா​வும் ஓர​ளவு இதே அளவை அறி​வித்​தாக வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கி​றது.தற்​போது வெளி​யேற்​றப்​ப​டும் பசுமை இல்ல வாயுக்​க​ளின் அளவை இந்​தியா 40 சத​வீ​தம் குறைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இந்​தியா இழக்க வேண்​டிய தொழில்​வ​ளர்ச்​சி​யும் எதிர்​கொள்ள வேண்​டிய செல​வி​னங்​க​ளும் மிக அதி​கம்.

இந்​தி​யா​வின் மின்​உற்​பத்​தி​யில் பெரும்​பங்கு அனல்​மின் நிலை​யங்​களி​லி​ருந்​து​தான் கிடைக்​கி​றது. இவற்​றின் மூலம் வெளி​யேற்​றப்​ப​டும் கரி​ய​மில வாயு அள​வும் அதி​கம். இதற்​காக அனல்​மின் நிலை​யங்​களை உட​ன​டி​யாக மூடு​வதோ,​ மின்​உற்​பத்​தி​யைக் குறைத்​துக்​கொள்​வதோ இய​லாத காரி​யம்.இந்​தி​யா​வில் சூரி​ய​சக்தி மூல​மாக மின்​சா​ரம் தயா​ரித்து,​ இழப்பை ஈடு செய்ய முடி​யும் என்​பது உண்​மையே என்​றா​லும்,​ அதற்​கா​கும் செலவு பல ஆயி​ரம் கோடி ரூபாய். இதில் ஒரு பகு​தியை ஐக்​கிய நாடு​கள் சபை வழங்​கும் என்​றா​லும்,​ புதிய மின்​உற்​பத்தி முறைக்கு அது முற்​றி​லும் பயன் அளிக்​காது. ​தொ​ ழில்​து​றை​க​ளில் வெளி​யேற்​றப்​ப​டும் கரி​ய​மில வாயு அள​வைக் குறைப்​ப​தற்​காக,​ தொழிற்​கூ​டங்​க​ளில் புதிய தொழில்​நுட்​பத்​தைப் புகுத்த வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இத்​தொ​ழில் துறைக்கு மானி​யம் மற்​றும் சலு​கை​கள் அறி​வித்​தாக வேண்​டும். இத​னால் இந்​தி​யா​வுக்கு பெரும் வரு​வாய் இழப்பு ஏற்​ப​டும். வளர்ச்​சிப் பணி​கள் தடைப்​ப​டும்.இந்​தியா அதன் பிரச்​னையை எதிர்​கொள்​ளும் அதே வேளை​யில்,​ இந்​தி​யர் என்ற முறை​யில் ஒவ்​வொ​ரு​வ​ரும் புவி​வெப்​பத்​தைக்குறைக்க சில வழி​கள் இருக்​கின்​றன. 
மின்​சா​ரத்தை அள​வா​கப் பயன்​ப​டுத்​து​வது,​ வாக​னப் பயன்​பாட்​டைக் குறைத்​துக்​கொள்​வது,​ சீர்​வளி அரங்​கு​கள் மற்​றும் குளிர்​ப​தன பெட்டி பயன்​பாட்டை கட்​டுக்​குள் வைப்​பது போன்​ற​வற்றை மேற்​கொள்​ள​லாம். இவை யாவற்​றை​யும் காட்​டி​லும் மிக அதி​க​மாக ஒரு மனி​தன் இந்​தப் புவிக்கு நன்மை செய்ய விரும்​பி​னால்,​ அவர் சைவ உண​வுக்கு மாறு​வ​தன் மூலம் அதைச் செய்ய முடி​யும்.அண்​மை​ யில் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் குறிப்​பி​டு​கை​யில் "மாட்​டி​றைச்சி சாப்​பி​டு​வதை நிறுத்​து​வ​தன் மூலம் புவி​வெப்​பத்​தைக் குறைக்​க​லாம்' என்று கூறிய கருத்து உண்​மையே. இதை நோபல் பரிசு பெற்​ற​வ​ரும் ஐக்​கி​ய​நா​டு​க​ளின் ஒரு பிரி​வா​கிய பரு​வ​நிலை மாற்​றத்​துக்​கான சர்​வ​தேச அமைப்​பின் தலை​வர்ராஜேந்​தர் கே. பச்​செüரி பல கருத்​த​ரங்​கு​க​ளில் தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றார்.

ஒரு கிலோ மாட்​டி​றைச்​சி​யைத் தவிர்ப்​ப​தன் மூலம் வளி​மண்​ட​லத்​தில் 36.4 கிலோ கரி​ய​மில வாயு கலப்​ப​தைத் தவிர்க்க முடி​யும் என்று அவர் சொல்​வது வெறும் புள்​ளி​வி​வ​ரம் அல்ல. நடை​முறை வாழ்க்​கைக்கு சாத்​தி​ய​மா​ன​தும்​கூட. ஆடு,​ மாடு​கள் வளர்ப்​ப​தற்​காக அழி​ப​டும் காடு​கள்,​ இறைச்​சியை வேறு இடங்​க​ளுக்​குக் கொண்டு செல்​வ​தற்​கான வாக​னப் போக்​கு​வ​ரத்து,​ இறைச்​சியை குளிர்​ப​த​னப் பெட்​டி​யில் வைத்​தி​ருத்​தல் போன்ற தொடர்​ந​ட​வ​டிக்​கை​யால் ஏற்​ப​டும் கரி​ய​மில வாயுவை கணக்​கிட்டு இந்​தக் கணக்​கீடு செய்​யப்​ப​டு​கி​றது.இ​றைச்​ சிக் கடை​கள் என்​பது ஊருக்கு ஒரு சில​வாக இருந்த நாள்​கள் என்​பது முற்​றி​லு​மாக மாறிப்​போய்,​ இப்​போது எல்லா நாள்​க​ளி​லும் எல்லா இடங்​க​ளி​லும் தெரு​வுக்​குத் தெரு இறைச்​சிக் கடை​க​ளும்,​ பிரி​யா​ணிக் கடை​க​ளும் இருப்​ப​தைக் காண்​கி​றோம். 2006 ம் ஆண்டு உல​கம் முழு​வ​தும் 28 கோடி டன் இறைச்சி உண​வுக்​காக பயன்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது. இது ஐம்​பது ஆண்​டு​க​ளுக்கு முன்பு இருந்த அள​வைக் காட்​டி​லும் 5 மடங்கு அதி​கம்.ஒரு எக்​டேர் நிலப்​ப​ரப்​பில் வேளாண்மை செய்து உரு​வாக்​கப்​ப​டும் காய்​கறி,​ கனி​கள் பருப்​பு​வ​கை​கள் மூலம் ஒரு ஆண்​டுக்கு 30 பேருக்கு உண​வ​ளிக்க முடி​யும்.

ஆனால் இதே நிலப்​ப​ரப்பை கால்​நடை வளர்ப்​புக்​குப் பயன்​ப​டுத்தி அதன் மூலம் கிடைக்​கும் முட்டை,​ பால்,​இறைச்சி ஆகி​ய​வற்​றின் மூலம் ஒரு ஆண்​டுக்கு 10 பேருக்கு மட்​டுமே உண​வ​ளிக்க முடி​யும் என்​றும் கணக்​கி​டப்​ப​டு​கி​றது.ஒரு கிலோ கிராம் மாட்​டி​றைச்சி பெறு​வ​தற்கு 10 கிலோ கால்​ந​டைத் தீவ​னம் தேவைப்​ப​டு​கி​றது. ஒரு கிலோ பன்​றிக் கறிக்கு 5 கிலோ தானி​ய​மும் ஒரு கிலோ கோழிக்​க​றிக்கு 3 கிலோ தானி​யம் தேவை​யாக இருக்​கி​றது. ஆனால் இந்த தானி​யத்​தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனி​தன் உண்ண முடி​யும். மேலும்,​ காய்​கறி உண​வைச் சமைக்​கத் தேவைப்​ப​டும் எரி​சக்​தி​யைக் காட்​டி​லும் இறைச்சி உணவு தயா​ரிக்க 25 மடங்கு எரி​சக்தி தேவை​யாக இருக்​கி​றது. இவை யாவற்​றை​யும் கருத்​தில் கொள்​ளும்​போது,​ ஒரு​வர் சைவ உண​வுக்கு மாறு​வது மண்​ணு​ல​கிற்கு மட்​டு​மல்ல,​ வளி​மண்​ட​லத்​திற்​கும் நன்மை செய்ய முடி​யும்.சைவ உணவு மனி​த​ருக்கு எளி​மை​யான உணவு என்​ப​து​டன்,​ வளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளில் கரி​ய​மில வாயு​வை​விட 30 மடங்​கும் அதிக தீமை விளை​விக்​கும் மீத்​தேன் வாயுக்கு இறைச்சி கார​ண​மாக இருக்​கி​றது என்​பதை எண்​ணும் போது,​ இந்​தி​யர்​கள் ஒவ்​வொ​ரு​வ​ரும் மாமிச உண​வைத் தவிர்ப்​ப​தும்,​ வச​தி​க​ளைக் குறைத்​துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்​வ​தும் அர்த்​த​முள்ள வாழ்க்​கை​யாக இருக்​கும்.

மேலும்,​ புவி வெப்​பத்​தைக் குறைத்து பரு​வ​நிலை மாற்​றங்​களை கட்​டுக்​குள் கொண்​டு​வ​ர​வும் உத​வும். ஒவ்​வொ​ரு​வ​ரும் தங்​க​ளால் இயன்ற அள​வில் வளி​மண்​ட​லத்​தைக் காப்​பது என்று உறு​தியை ஏற்​றுக் கொண்​டால்,​ புவி​யைக் காக்​க​லாம். நாடு அத​ன​ள​வில் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்க முற்​ப​டும்​போது குடி​ம​கன்​க​ளா​கிய நாமும் நம்​மால் முடிந்த பங்​க​ளிப்​பைச் செய்​தால் என்ன!

நன்றி: தினமணி