வெள்ளி, 18 டிசம்பர், 2009

செயற்கை கலப்பில்லாத இயற்கை ஆதரவு திருமணம்


மின்னொளி விளக்குகள் இல்லை, எங்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள் இல்லை, தாம்பூல கவரில்லை... விருந்தில் இடம்பெற்ற காய்கறியில் ரசாயன கலப்பில்லை. இப்படி முற்றிலும் இயற்கை ஆதரவு திருமணம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. 

குஜராத்தைச் சேர்ந்த அருஷி ஷா (22), தீபன் ஷா (24) ஜோடிக்கு கடந்த ஞாயிறன்று திருமணம் நடந்தது. மணமகன்  பருத்தி வேட்டி அணிந்திருக்க, மணமகள் காதி பட்டு சேலையில் இருந்தார். விருந்து நடைபெறும் இடத்தில் பன்னீர் டிக்கா, ஸ்பிரிங் ரோல் இல்லை. மாறாக, வேக வைத்த கடலை, பழங்கள் இருந்தன.

திருமண சீதனமாக அருஷி கொண்டு வந்தது ஒரு பசுவும் கன்றும். திருமணத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறவே தடை. பரிசுப் பொருட்களிலும் பிளாஸ்டிக் தவிர்க்க, பத்திரிகையில் வேண்டுகோள் இருந்தது. மாறாக, உபயோகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் செப்பு, வெள்ளி, பித்தளையில் இருந்தன.

மணமகள் குடும்பத்தினர் பணக்காரர்கள் என்ற போதிலும், திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. முதல்நாள் வரவேற்பில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு முற்றிலும் ரசாயனக் கலப்பின்றி விளைவிக்கப்பட்ட காய்கறிகளால், தூய நல்லெண்ணையில் தயாரான புலாவ் பரிமாறப்பட்டது.
இயற்கைக்கு மாறான பொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு  பூமி சூடாகும் பிரச்னையைத் தடுப்பது பற்றி டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகனில் சர்வதேச மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அதுபோன்ற பெரிய ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை. அருஷி, தீபன் போன்ற ஜோடிகள் செய்த முயற்சியே போதுமானது.

2 கருத்துகள்:

ரோஸ்விக் சொன்னது…

பாராட்டுதலுக்குரியது நண்பரே!
வாழ்த்துகிறேன். வணங்குகிறேன் அந்த தம்பதியரையும் அவரது பெற்றோரையும்.

malar சொன்னது…

இந்த முறைப்படியே இனிவரும் சந்ததியரும் வைபவங்களை நடத்தினால் நல்லது .

முன்பு ஒரு பதிவில் பார்தாவை அமல் செய்து விடகூடாது என்ற தலைப்பில் தோழி ஒருவர் பதிவிட்டு அதில் மரைக்கார் அவர்களின் லிங்க் கொடுக்கப்பட்டு இருந்தது .தற்போது அந்த லிங்க் என்னிடம் இல்லை .உங்களிடம் இருந்தால் எனக்கு தர முடிமா ?அல்லது இதை தெரிந்தவர்கள் யாராவதும் இன்ருந்தால் தரவும் .நன்றி