வெள்ளி, 4 செப்டம்பர், 2009

விமான விபத்தில் இறந்த இந்திய தலைவர்கள்

விமான விபத்தும், இந்திய அரசியல் தலைவர்களும்!
செப்டம்பர் 04,2009,00:00 IST

புதுடில்லி : ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, நேற்று முன்தினம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். கடந்த கால வரலாற்றை புரட்டிப் பார்த்தால், பல்வேறு முக்கிய தலைவர்கள், இதே போன்ற விமான விபத்தில் சிக்கியது தெரியவரும்.விமான விபத்துகளில் உயிரிழந்த சில தலைவர்கள்:* ராஜசேகர ரெட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன், பிரகாசம் மாவட்டத்தில் இருந்து, ஐதராபாத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற போது, இதே போன்ற விபத்து ஒன்றை எதிர்கொண்டார். அப்போது, மோசமான வானிலை காரணமாக, பள்ளி மைதானம் ஒன்றில், ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. இந்த முறை, அவருக்கு அத்தகைய அதிர்ஷ்டம் ஏற்படவில்லை.* கடந்த 2005ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி நிகழ்ந்த, ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில், அரியானா மாநிலத்தின் அப்போதைய விவசாயத்துறை அமைச்சர் சுரேந்திர சிங் மற்றும் தொழிலதிபர் ஓ.பி.ஜிண்டால் ஆகியோர் உயிரிழந்தனர்.* கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி, ஆந்திராவின், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், அப்போதைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி.பாலயோகி உயிரிழந்தார். மோசமான வானிலையால், குறைந்த வெளிச் சத்தில், குளத்தை சமதளமாக கருதி ஹெலிகாப்டரை தரையிறக்கியதால், அந்த விபத்து நிகழ்ந்தது.* கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி, உ.பி.,யில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரான மாதவ் ராவ் சிந்தியா உயிரிழந்தார்.* கடந்த 1973ம் ஆண்டு, இந்திரா காந்தியின் மகன் சஞ்சய், சென்ற கிளைடர் விமானம், டில்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தார்.* காங்கிரஸ் தலைவர் எஸ்.மோகன் குமாரமங்கலம், டில்லி விமான விபத்தில் காலமானார்.

கருத்துகள் இல்லை: