சனி, 19 செப்டம்பர், 2009

உலக தமிழர் மாநாடு -கோவை

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : முதல்வர் கருணாநிதி தேதி அறிவித்தார்
செப்டம்பர் 19,2009,13:02 IST


சென்னை: வரும் 2010 ம் ஆண்டில் ஜனவரி மாதம் 21,22,23,24 உள்ளிட்ட தேதிகளில் உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் கருணாநிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கான அழைப்பிதழ் உடனடியாக தயார் செய்து உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.



சென்னையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு நடந்தது. மாநாட்டு துவக்க விழாவில் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதன்படி மாநாடு நடத்துவது குறித்து இன்று முதல்வர் கருணாநிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.



கூட்ட முடிவிற்கு பின்னர் அவர்கூறுகையில் ; உலகத்தமிழ் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜனவரி மாதம் 21,22,23,24 தேதிகளில் 4 நாட்கள் கோவையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டுக்குழு அமைப்பது தொடர்பாகவும், மாநாட்டு நிகழ்ச்சி பொறுப்புக்களை யார், யாரிடம் ஒப்படைப்பது, வெளிநாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு அனுப்புவது ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டு நிகழ்ச்சிகள் குறித்து அடுத்து நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதற்கான முதற்கட்ப்பணிகள் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: