வியாழன், 21 ஜனவரி, 2010

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 1)

 
 

 

 
தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988 ம் ஆண்டு தொடங்கி சுமார் 5 ஆண்டு காலம் நீடித்தது.
 
ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளுடன் நடத்திய கொலை சம்பவங்கள், `திகில்' சினிமா படங்களில் வரும் காட்சி கள் போல அமைந்தன. காதலி உள்பட 6 பேரை கொடூரமான முறையில் படு கொலை செய்த ஆட்டோ சங்கருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான்.
 
சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் காந்தி தெருவில் வசித்தவன் சங்கர் (வயது 29) ஆட்டோ டிரைவர். இதனால் ஆட்டோ சங்கர் என்று அழைக்கப்பட்டான். சங்கர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வந்து திருவான்மியூர் பகுதியில் விற்பனை செய்தான். அதன் பிறகு அவன் ஆட்டோ ஓட்டும் தொழிலை கை கழுவினான். சாராய தொழிலில் அவன் மிகவும் தீவிரமாக ஈடுபட்டான்.
 
திருவான்மிïரில் உள்ள ஒரு ஓட்டலில் (லாட்ஜ்) சங்கர் அறை எடுத்து சாராய வியாபாரத்தை கவனித்தான். அங்கு அழகிகளை அழைத்துக்கொண்டு வந்து விபசாரம் நடத்தினான். சாராயம், விபசாரம் ஆகிய தொழில் நடத்தியதன் மூலம் சங்கர் பெரும் பணக்காரன் ஆனான்.
 
பெரியார் நகரில் 2 பங்களா கட்டினான். அங்கு எல்லா அறைகளையும் "ஏர்கண்டிஷன்" வசதி செய்தான். விலை உயர்ந்த கட்டில்கள், கலர் டெலிவிஷன், டெலிபோன் வசதிகளை செய்து ஆடம்பர சொகுசு பங்களாவாக மாற்றினான்.
 
இந்த நவீன பங்களாவுக்கு கோடம்பாக்கம், சேலம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து அழகிகள் அடிக்கடி வந்து போவார்கள். முக்கிய பிரமுகர்களுக்கு அந்த சொகுசு பங்களாவில் சங்கர் விபசார விருந்து படைப்பான். ஆட்டோ சங்கருக்கு ஜெகதீசுவரி என்ற மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள். ஆனாலும் விபசார தொழிலில் இறங்கிய தால் அவனுக்கு பல காதலிகள் இருந்தார்கள். அழகிகளை மயக்கி மனைவி ஆக்கிக் கொள்வான்.
 
இப்படி பெங்களூரில் இருந்து வந்தவள் அழகி லலிதா (வயது 19). சங்கர் அவளை தனது 4,வது மனைவி ஆக்கிக்கொண்டான். அவள் திடீரென்று ஆட்டோ சங்கரை விட்டு ஓடி, சுடலை (மற்றொரு ஆட்டோ டிரைவர்) என்பவனுடன் வசித்து வந்தாள். அதோடு தொழிலில் ஏற்பட்ட போட்டி சங்கரை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த சூழ்நிலைகளும், நண்பர்களின் துதி பாடல்களும் அவனை சிக்கலில் மாட்டி விட்டன.
 
சென்னை மந்தைவெளியை சேர்ந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் ஆட்டோ சங்கர் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவர்களது பெற்றோர்கள் 29.5.1988-ல் போலீசில் புகார் செய்தார்கள். 
 
இது தொடர்பாக செங்கல்பட்டு டி.ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் அலி, சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏறத்தாழ ஒரு மாத கால தீவிர விசாரணைக்கு பிறகு அதில் துப்பு துலங்கியது.
தொடரும்.....................................
 

2 கருத்துகள்:

மகா சொன்னது…

Nice start....wishes for the upcoming posts also....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான பதிவு அபுல் பசர் சார்