திங்கள், 25 ஜனவரி, 2010

இ-மெயில் பார்ப்பதால் ஏற்படும் விளைவு ?
 
அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இ-மெயில் பார்க்கவும், அவற்றுக்கு  பதில் அனுப்பவும் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகள் வரை செலவிடுவதாக ஒரு ஆய்வு முடிவு  தெரிவிக்கிறது. இதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய அவசர தேவைக்கு ஏற்ப, கடிதப் போக்குவரத்து முறையும் எலக்ட்ரானிக் மயமாகி உள்ளது.

அதுதான் இ-மெயில். ஆனால், சிலர் இதற்கு அடிமையாகவே ஆகி உள்ளனர். கடும் வேலை நெருக்கடிக்கு இடையிலும், அலுவலக ஊழியர்கள் 5 நிமிடத்துக்கு ஒரு முறை  இ-மெயில் ஏதேனும் வந்துள்ளதா என பார்ப்பதாக ஸ்காட்லாந்தின் ஐ.டி. பயிற்சி நிறுவனமான இண்டிசியா டிரெய்னிங் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இ-மெயிலுக்கு உடனே பதிலும் அனுப்புகின்றனர்.

இதனால் செய்யும் வேலை பாதிக்கப்படுகிறது. இ-மெயிலுக்காகவே ஒரு வாரத்துக்கு ஒரு ஊழியர்  8.5 மணி நேரம் செலவிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் வாழ்நாளில் 9.7 ஆண்டுகளை வீணடிக்கிறதாம் இ-மெயில். இந்த பழக்கம் நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 


சிலர் நடு இரவில் யூரின் போவதற்காக எழுந்தால்கூட அந்த நேரத்தில் இ-மெயில் ஏதாவது வந்துள்ளதா என பார்க்கிறார்கள். பொதுவாக எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் இதுபோல செய்கிறார்கள்.

புகை, மது, சூதாட்டம் போன்றதுதான் இந்த பழக்கமும். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்,என உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

1 கருத்து:

goma சொன்னது…

நம்ம அடிமைப் படுத்தும் விஷயங்கள் இது போல்,இன்னும் எத்தனையோ இருக்கின்றன.