வெள்ளி, 1 ஜனவரி, 2010

விரைவில் வல்லரசாகும் இந்தியா









இன்னும் 10 ஆண்டுகாலத்தில் வரும் 2020 ம் ஆண்டில் இந்தியா உலக அளவில் மாபெரும் சக்தி நிறைந்த நாடாக திகழும் என சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார நிபுணர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் பட்டினிச்சாவு இல்லாத ஆற்றல் மிக்க நாடாக திகழும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரபல நிபுணர் சமர்பித்த இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

உலக அளவில் பெரும் பொருளாதார வளர்ச்சி பெற்ற சீனாவை மிஞ்சும் வகையில் இதன் வளர்ச்சி இருக்கும். சீனாவில் வேலை ஆட்கள் குறைந்து விடுவர். இதன் காரணமாக சீனாவின் கரன்சி மதிப்பு குறையும், தொடர்ந்து சீனா பலவீனம் பெறும். இதே நேரத்தில் இந்தியாவில் வேலைக்கு கிடைக்கும் ஆள்பலம் அதிகரிக்கிறது,தொடர்ந்து இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் .


ஏற்றுமதியை பொறுத்தமட்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகள் எதிர்பார்க்கும் அளவிற்கு அதிகரிக்கும். இந்தியாவில் உள்ள பின்தங்கிய மாநிலங்கள் வளம் பெறும். இதன்மூலம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வரும் 2020 ல் 10 சதம் அதிகரிக்கிறது. ஆனால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7. 8 சதமாகவே இருக்கும். உலக அளவில் ஆங்கில அறிவு பெறும் அளவீடு உயர்ந்து தரம் பெறுகிறது.

குறிப்பாக அமெரிக்காவை மிஞ்சும் அளவுக்குகூட இருக்கலாம். உலக அளவில் இந்தியாவில் உள்ள வாங்கும் சக்தி கொண்டவர்களை குறி வைத்து வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியா நோக்கு நகர்ந்து வரும், பத்திரிகை உள்பட. அணு சக்தி உபகரணங்கள் அதிகம் தயாரித்து உலகிற்கே சப்ளை செய்யும் அளவிற்கு இந்தியநிலை உயரவிருக்கிறது.


அசாம், குஜராத், ராஜாஸ்தான் பகுதியில் பூமியில் உள்ள பாறைவகைகள் தரம் உலகளவில் எட்டும் . இயற்கை வாயு சக்தி பெருகுகிறது. இவ்வாறு வளர்ச்சிகள் அடுக்கி கொண்டே போகிறது. பல முனைகளிலும் இந்தியாவுக்கு பெரும் வளர்ச்சி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 ம் ஆண்டு பிறந்த இனிய நன்நாளில் இந்தியா உலக அளவில் கடும் வளர்ச்சி பெறும் என்பது மகிழ்சிதானே !

3 கருத்துகள்:

jothi சொன்னது…

மும்பையில் ரயிலில் கீழே விழுந்து சாகும் எண்ணிக்கை 3,000 என்பதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

எனக்கென்னவோ இந்தியா தன் மக்களில் அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முக்கியமாக வேளாண்மை ஏற்றுமதியில் சுத்தம். அதுதான் மிக அபாயகரமானது.

பதிவிற்கு நன்றி

Unknown சொன்னது…

இது போன்ற கற்பனயில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

a சொன்னது…

we should expectation for good positive thinking. Not only expectation, we can try to do that.
"JAI HIND"