ஞாயிறு, 20 ஜூன், 2010

ரூ. 16 கோடிக்கு ஏலம் போன இந்தியரின் ஓவியம்:

  
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைசிறந்த ஓவியர் சயீது ஹைதர் ராசா, இந்திய கலாசாரத்தை மையமாக வைத்து வரைந்த நவீன ஓவியம், லண்டனில் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு, சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் பிரபல ஓவியர் சயீது ஹைதர் ராசா. தற்போது பிரான்சில் வசிக்கிறார். தலைசிறந்த ஓவியரான இவரின் ஓவியங்கள், இதற்கு முன் பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்திய கலாசாரத்தை மையமாக வைத்து, 1984ல் இவர் வரைந்த சவுராஷ்டிரா என்ற நவீன ஓவியம், சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது. வண்ணமயமான, அதிசயிக்கத்தக்க இந்த ஓவியம், 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன், சயீது வரைந்த நவீன இந்திய ஓவியம் ஒன்று, எட்டு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. தற்போது 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் நவீன ஓவிய வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் என்ற சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

எச்.சி.எல்., டெக்னாலஜியின் நிறுவனர் சிவ் நாடாரின் மனைவியும், ஓவிய சேகரிப்பாளருமான கிரண் தான், இந்த ஓவியத்தை ஏலம் எடுத்துள்ளார்.

நன்றி:
தினமலர்.

3 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

அருமையான ஓவியம்..

goma சொன்னது…

ஓவியக் கலைஞருக்கு வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றி சகோதரி ஆசியா ஒமர்
நன்றி கோமா