திங்கள், 7 ஜூன், 2010

தமிழ் இணைய மாநாட்டில் புதிய மென்பொருள்களின் அணிவகுப்பு


  
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் கண்காட்சியில், தமிழில் உருவாக்கப்பட்டுள்ள ஏராளமான புதிய மென்பொருள்கள் இடம் பெறுகின்றன. 

தமிழ் இணைய மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 400 பேர் பிரதிநிதிகளாகப் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 120 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.தமிழ் இணைய மாநாட்டின் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 

பல்வேறு அரசுத் துறைகள், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, கணித் தமிழ்ச் சங்கம், உத்தமம் அமைப்பு, ஊடகங்கள், மென்பொருள் நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன.இந்த அரங்குகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இணையதள வசதி கொடுக்கப்படுகிறது. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் ஏறத்தாழ ரூ.1 கோடி செலவில் கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. 


அதேபோல, தங்குதடையற்ற தொலைத்தொடர்பு வசதிக்காக பிஎஸ்என்எல் மற்றும் பல்வேறு தனியார் செல்போன் நிறுவனங்கள் 30 செல்போன் கோபுரங்களை அமைக்கின்றன. இவற்றில் பெரும்பகுதி, நடமாடும் செல்போன் கோபுரங்களாகும். கண்காட்சி அரங்குகளில் பெரும்பகுதி முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

இந்த கண்காட்சியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் சார்பில் இரு அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்து பல்கலை.யின் இயக்குநர் பி.ஆர்.நக்கீரன் கூறியது:தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்கு 2 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள புதிய மென்பொருள்கள், பல்கலை.யின் செயல்திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்படும். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்காக 4 பொறியியல் கல்லூரிகள் புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொடுத்துள்ளன. அவையும் இக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. 

இந்த மென்பொருள்களை உருவாக்கிய மாணவர்களே கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.மக்களுக்கு பயன்தரக்கூடிய புதிய மென்பொருள்கள், தமிழ் எழுத்து வடிவம், மொழியாக்கத்துக்கான மென்பொருள்கள் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி இருக்கும். 

இந்த கண்காட்சியின்போது புதிய மென்பொருள்களும் அறிமுகம் செய்யப்படும். பல்வேறு அரசுத் துறைகளின் மின்ஆளுமைத் திட்டங்களும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன என்றார் அவர்.

நன்றி:
தினமணி 

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

செம்மொழியான தமிழ் மொழி பாடல் பார்க்க வேண்டுமா உடனே இந்த லிங்கை கிளிக் செய்க http://trailer.jupiterwebsoft.com/2010/05/semmozhiaana-tamil-mozhiaam-original-high-quality-by-a-r-rahman/

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல தகவல்கள்.. தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

தமிழில் புதிய மென்பொருள் வருவதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சியும் பெரிதளவில் மாற்றம் காணும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

மேலும் உங்களின் உங்களின் எதிர் காலம் எப்படி உள்ளது என்றும் உங்கள் காதல் கல்வி வேலை திருமணம் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ளவும் இந்த இணையம் பெரிதும் பயனாக இருக்கும். www.yourastrolgy.co.in