வெள்ளி, 1 அக்டோபர், 2010

காமன் வெல்த் போட்டி : கோலாகல துவக்கம் !காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்  டெல்லியில் நாளை மறுநாள் (03.10.2010) வண்ணமயமான  கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது.

இதில் பங்கேற்க பல நாடுகளை சேர்ந்த 8 ஆயிரம் விளையாட்டு 
வீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் குவிந்துள்ளனர். காமன்வெல்த் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை, இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி வைத்தார். இது 54 நாடுகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயணம் செய்து நேற்று டெல்லி வந்தடைந்தது.

நகரில் முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை மறுநாள் டெல்லி ஜவஹர்லால் ஸ்டேடியத்தை வந்தடைகிறது.அதன்பின் காமன்வெல்த் ஜோதி ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிதொடங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக காமன்வெல்த்போட்டி நடப்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


காமன்வெல்த் போட்டி, நாட்டின் கவுரவம். இதை தேசிய விழாவாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது எல்லா பணிகளும் முடிந்து, விளையாட்டு போட்டிக்கு தயார் நிலையில் டெல்லி உள்ளது.

71 நாடுகள் போட்டிகளில் பங்கேற்கின்றன. அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வீரர்கள் டெல்லி வந்து தங்கியுள்ளனர். போட்டி நடக்கும் இடங்கள், காமன்வெல்த் கிராமம் உள்பட டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

4 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

good view for commonwealth

Unknown சொன்னது…

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி @ ஸ்டார்ஜன்.

ஸாதிகா சொன்னது…

கோலாகலதுவக்கத்தைப்பற்றி உற்சாகமாக பகிர்ந்தமைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாருங்கள் சகோதரி ஸாதிகா.
தங்களின் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும் நன்றி.