சனி, 21 ஆகஸ்ட், 2010

ஆக்டோபசை அடுத்து முதலை ! பலிக்குமா ஆருடம்



  
ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் பிரதமர் தேர்தலில்  50 
ஆண்டுகளில் இல்லாதகடும் போட்டி நிலவுகிறது. அதில் தற்போதைய பிரதமர் "ஜூலியா"  வெற்றி பெறுவார் என முதலை ஒன்று ஜோசியம் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய பெண் பிரதமர் ஜூலியா ஜிலார்ட் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து எதிர் கட்சி வேட்பாளராக " டோனி அபார்ட் " களத்தில் நிற்கிறார். 

கடந்த சில மாதங்களாக இந்த இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.தேர்தல் பிரச்சாரத்தின் போது அவ்வப்பொழுது எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் இரண்டுபேருக்குமிடையே சிறிதளவு இடைவெளியே இருப்பதாக கருத்து கணிப்புக்கள் தெரிவித்தன.

இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை உறுதியாக கூறமுடியாத நிலையில் அரசியல் பார்வையாளர்கள் உள்ளனர்.ஆனால் இபொழுது உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முடிவை தன ஜோசியத்தின் மூலம் கூறி உலகப் புகழ் பெற்றுவிட்ட " ஆக்டோபஸ் பால் " இந்த தேர்தலில் " ஜூலியா" வெற்றிபெறுவார் என்று கணித்துள்ளது. 

இதை பின்பற்றி ஆஸ்திரேலியாவில்,சிட்னியில் உள்ள முதலை பண்ணையில் உள்ள " ஹேரி " என்ற முதலையும் இந்த தேர்தலில் " ஜூலியா வெற்றிபெறுவார் என்று கணித்துள்ளது. இந்த முதலையின் தொட்டிக்கு மேல் இரண்டு கயிறுகளில் கோழி கறி,மற்றும் களத்தில் உள்ள இரண்டு வேட்பாளர்களின் படங்களும் கட்டி தொங்கவிடப்பட்டது.

ஒரு நிமிடம் இரண்டு படங்களையும் அதன் உடன் இணைக்கப்பட்ட கோழி கறியையும் உற்று நோக்கிய " ஹேரி " ஜூலியா படம் இருந்த கோழி கறியை கவ்விசென்றது. இதனை அடிப்படையாக வைத்து இந்த தேர்தலில்" ஜூலியா" வெற்றிபெறுவார் என்று  கணிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஜோசியம் பலிக்குமா என்று ஆஸ்திரேலியா மக்கள் ஆவலுடன் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருகின்றனர்.


11 கருத்துகள்:

ராஜவம்சம் சொன்னது…

பலிக்குமா ஆருடம் ?
என்று வைத்ததர்க்கு
திறுந்துமா மானுடம் ?
என்று வைத்திருக்கலாம்.

ஜோதிஜி சொன்னது…

என்னாச்சு சுஜாதா தொடர்.

Unknown சொன்னது…

நல்ல தலைப்பு. திருந்துமா மானுடம்
என்று வைத்தால் எல்லோருக்கும் புரியுமா என்ற சந்தேகத்தில் தான்
" பலிக்குமா ஆருடம் " என்று வைத்தேன்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றி @ ராஜவம்சம்

Unknown சொன்னது…

வணக்கம் ஜோதிஜி அவர்களே.
சுஜாதா அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் எழுதுகிறேன்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இந்த மாதிரி செய்யிறவங்களை என்ன செஞ்சா தகும்

தூயவனின் அடிமை சொன்னது…

காலத்துக்கும் நாங்கள் திருந்த மாட்டோம் என்று மீண்டும் ஒரு முறை இவர்கள் ஊளை இடுகிறார்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்ன தான் நாகரீகமும் விஞ்ஞானமும் வளர்ந்தாலும்.. இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது...

Unknown சொன்னது…

வாருங்கள் அக்பர்.
இப்படி போன்ற செயல்கள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து மூடனம்பிகையைதான் வளர்க்கும்.
இனியாவது திருந்துவார்களா.
இப்படிப்பட்ட விசயங்களை வைத்து காசு பார்க்கும் ஒரு கூட்டம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

Unknown சொன்னது…

வாருங்கள் இளம் தூயவன்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
காலத்திற்கும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் நிறையப்பேர்.

Unknown சொன்னது…

வாருங்கள் வெறும்பய.
நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவில் தான் இந்த கொடுமை நடந்துள்ளது.
அங்கேயும் ஒரு "பெரியார்" தேவை படுகிறார் .

புல்லாங்குழல் சொன்னது…

சுஜாதா இருந்திருந்தால் வசந்த்," பாஸ்! நம்ப பட்சியெல்லாம் அவுட்டு. ஆஸ்திரேலியாவுல கறி சாப்டுட்டு முதலை ஜனாதிபதியை கப்புன்னு தேர்ந்தெடுக்குது பாஸ்" என கணேஷிடம் சொல்லியிருப்பார்.