வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

பிளாக்பெரியை தொடர்ந்து கூகுளுக்கும் சிக்கல் ஆரம்பம்


   
பிளாக்பெரியை தொடர்ந்து கூகுள் மற்றும் ஸ்கைப் இணையதளங்களின் மெசேஜ் சேவைகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பிளாக்பெரி மொபைல் போன்கள் வாயிலாக அனுப்பப்படும் இமெயில்கள் மற்றும் மெசேஜ்கள் மூன்றாவது நபர் படிக்க முடியாத அளவுக்கு மிக சிக்கலான கோடிங் பயன்படுத்தி ரகசிய குறியீடுகளாக மாற்றப்படுகிறது. பிளாக்பெரி பயன்படுத்தும் தீவிரவாதிகளுக்கு இடையிலான செய்தி பரிமாற்றத்தைக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், சாதாரண கோடிங்குக்கு மாற வேண்டும்; அல்லது கோடிங் ரகசியத்தை இந்தியாவுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை பிளாக்பெரி முன்பு வைக்கப்பட்டது.

இதற்கு சம்மதிக்காத பட்சத்தில் பிளாக்பெரி மெசேஜ் சேவைக்கு தடை விதிக்கப்படும் என்று கூறி 31 தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. பிளாக் பெரியை போல் கூகுள் மற்றும் ஸ்கைப் இணையதளங்களும் சிக்கலான கோடிங்கை பயன்படுத்தி வருகின்றன. 

இதனால் பிளாக்பெரியைப் போல் கூகுள் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. பிளாக்பெரி பிரச்னை தீர்ந்தவுடன், கூகுள் மற்றும் ஸ்கைப் பிரச்னைகளை கையில் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

5 கருத்துகள்:

தூயவனின் அடிமை சொன்னது…

ஒரு நாட்டின் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு , இந்த நிறுவனங்கள் ஒத்துழைப்பது
தான் முறை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி.

எம் அப்துல் காதர் சொன்னது…

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்

எம் அப்துல் காதர் சொன்னது…

//ஒரு நாட்டின் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு , இந்த நிறுவனங்கள் ஒத்துழைப்பது
தான் முறை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்

Unknown சொன்னது…

நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்.அதனால்தான் மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்திருகிறது.

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

Unknown சொன்னது…

வாருங்கள் அப்துல் காதர்
தங்களின் வருகைக்கும்,
பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.