ஞாயிறு, 18 ஜூலை, 2010

சச்சின் டெண்டுல்கர் : ஒரு சகாப்தம் ! பகுதி-2 !

சச்சின் ஒரு சகாப்தம்  தொடர்ச்சி.........................
 
  • பெர்புயும்,சன் கிளாஸ்,மியூசிக் சிஸ்டம்,பிரண்ட் சர்ட்,ஸ்போர்ட்ஸ் கார் இவைதான் சச்சின் அதிகம் விரும்பி வாங்குபவை! பட்டோடிக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆனவர் சச்சின். 
  • சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா,தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி தேடித்தந்தவர் கேப்டன் சச்சின். இருப்பினும் வெளிநாடுகளில் இவர் தலைமையிலான அணி பல தோல்விகளை கண்டதால் தானாகவே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்!  
  • இதுவரை மொத்தம் ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இருக்கிறார் சச்சின்.இதில் இந்தியாவிலும்,தென் ஆப்ரிக்காவிலும்  நடைபெற்ற  உலகக் கோப்பைப்  போட்டிகளில் அதிக ரன்களை குவித்து "மேன் ஆப் த சீரீஸ" விருது பெற்றிருக்கிறார்! 
  • 2001 -2002 ம் ஆண்டின்போது டென்னிஸ் எல்போ பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டார். ஆபரேஷன் காரணமாக விளையாட முடியாமல் இருந்தவருக்கு உறுதுணையாக இருந்தது மனைவி அஞ்சலி." என் மனைவி மட்டும் எனக்கு துணையாக இல்லை என்றால் மீண்டும் கிரிக்கெட் பேட்டை தொட்டிருக்கவேமுடியாது" என நெகிழ்ந்து சொன்னவர் சச்சின்.
  • பேட்ஸ்மேன்தான் என்றாலும் மீடியம் ஸ்பீட், லெக் ஸ்பின்,ஆப் ஸ்பின் என பெளலிங்கிலும் கலக்குவார்.விக்கெட் கீப்பிங் செய்யவேண்டும் என்பது சச்சினின் நீண்ட நாள் ஆசை. பத்மஸ்ரீ, பத்ம விபூஷன்,ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா எனப் பல விருதுகளைக் குவித்திருக்கிறார் சச்சின்!
  • சிறுவனாக இருந்த போது நான்கு மணிநேரம் விளையாடினாலும்,சச்சினை அவுட் ஆக்க முடியாமல் தவிப்பார்களாம்.பயிற்சியாளர் அச்ரேகர் ஒரு ரூபாய் நாணயத்தை ஸ்டம்பின் மேல் வைத்துவிட்டு, சச்சினை அவுட் ஆக்குபவருக்கு ஒரு ரூபாய் சொந்தம் எனச் சவால்விடுவாராம்! 
  • 2005-ம் ஆண்டின்போது பத்திரிகை ஒன்று " எண்டுல்கர் "("END "ULKAR )  எனத் தலைப்பிட்டு, சச்சினை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியது." என்னைப்பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன.ஆனால் இந்த விமர்சனத்தை மட்டும் என்னால் தாங்கிகொள்ளமுடியவில்லை. நான் மிகவும் அழுத நாள் அது மட்டும்தான் என்றார் சச்சின்.
  • சச்சினின் மொபைலில் இருந்து யாருக்கு  எஸ்.எம்.எஸ். வந்தாலும் "தேங்க்ஸ் அண்ட் லவ் சச்சின் "  என்பதே இறுதி வரியாக இருக்கும்.சச்சினுக்கு மிகவும் பிடித்தகார் ரேஸ் "பார்முலா-1 .ரேஸ் நடக்கும் மைதானங்களுக்கு நேரடியாக விசிட் அடிப்பார் சச்சின்.நரேன் கார்த்திகேயனுடன் பேசி,வேகமான கார்களைப்பற்றி அப்டேட் செய்துகொள்வார்.
  • கிரிக்கெட் விளையாட வந்த புதிதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் " கேரி சோப்பர்ஸ்" எழுதிய " Twenty Years at the Top " என்கிற புத்தகம்தான் ரெம்ப பிடிக்கும் என்று சொன்னார் சச்சின். இப்போது  20  வருடங்களைக் கடந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார் "மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின்"!
      இனிதே நிறைவு பெறுகிறது
         
      நன்றி:
      ஆனந்த விகடன்

2 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அபுல்பசர்.

Unknown சொன்னது…

வருகைக்கும், வாழ்த்துக்கும்
நன்றி @ அக்பர்.