வியாழன், 15 ஜூலை, 2010

சச்சின் டெண்டுல்கர் : ஒரு சகாப்தம் ! பகுதி-1 .உலகின் முதல் டபுள் டன் ஹீரோ சச்சின் ! அவருக்கு "பாரத ரத்னா" வழங்கியாக வேண்டும் என்கிறார் கபில்தேவ். ஆம்....சச்சின் கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள். இவர் படைக்காத சாதனைகளே இல்லை,தனது சாதனைகளையே உடைத்து,புதிய,புதிய சாதனைகளைப் படைக்கிற ஆட்டக்காரர்.

சச்சின் ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும்,அடிக்கிற ஒவ்வொரு ரன்னுக்கும் உலக கிரிக்கெட் வரலாற்றை அப்டேட் செய்ய வேண்டி இருக்கிறது.

  • சச்சின் ரமேஸ் டெண்டுல்கர் என்பதுதான் முழுப்பெயர்.சச்சினின் அப்பா பிரபல மராத்தி எழுத்தாளர்.அவர் சச்சின் தேவ் பர்மன் என்னும் இசை அமைப்பாளரின் தீவிர ரசிகர் என்பதால் மகனுக்கு "சச்சின்" என்று பெயர் வைத்தார்.

  • 1988 -ம் ஆண்டு மும்பை வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது வினோத் காம்ளியுடன் இணைந்து குவித்த 664 ரன்கள்தான் சச்சினை கிரிக்கெட் உலகுக்குக் கொண்டுவர உதவியது.மும்பை அணிக்காக ஆடிய ரஞ்சிக் கோப்பையிலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து சட்டென எல்லோர் மனதிலும் பதிந்தார் சச்சின்.

  • சச்சினை கிரிக்கெட் விளையாட ஆர்வப்படுத்தியவர் அவரது அண்ணன் அஜித்.மும்பை பாந்த்ராவில் இருந்த சச்சினின் வீட்டில் இருந்து, கிரிக்கெட் கோச்சிங் போய் வர முடியாது என்பதால் சிவாஜி நகரில் உள்ள மாமா வீட்டில் சச்சினைத் தங்கவைத்து கூடவே இருந்தார் அண்ணன் அஜித்.


  • முதலில் சென்னை எம்.ஆர்.எப். பேஸ் பவுண்டேசனில் பவுலர் ஆவதற்கு பயிற்சி பெற வந்தார் சச்சின்.ஆனால் பயிற்சியாளரான "டென்னிஸ் லில்லி"  நீ சூப்பர் பேட்ஸ்மேன் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. போய் பேட்டிங் பயிற்சி எடு என்று அனுப்பிவைத்தார்.

  • ராமகாந்த் அச்ரேகரிடம் கிரிக்கெட் கோச்சிங் எடுத்தபோது, முதல் ஆளாக கிரிக்கெட் மைதானத்திற்கு வந்து,கடைசி ஆளாக போவாராம் சச்சின். எந்த பந்து வீச்சாளர்கள்  தன்னை அடிக்கடி அவுட் ஆக்குகிறார்களோ அவர்களின் பந்துக்களை எதிர் கொள்ளவதற்காக ஸ்பெஷல் ட்ரைனிங் எடுப்பாராம் சச்சின்.

  • 1998 -ம் ஆண்டு ஷேன்வார்நேயின் சுழல் பந்தை எதிர்கொள்ளச் சிரமப்பட்டவர்,சுமார் ஒருமாதம் காலம் சென்னையில் தங்கி சிவராமகிருஷ்ணன் இடம் பயிற்சி எடுத்தார்.அதன் பின் சச்சின் ஆடிய ருத்ரத் தாண்டவத்தை ஷேன் வார்னே இன்னும் மறக்கவில்லை. 

  • முதன் முதலாக "வேர்ல்ட் டெல்" நிறுவனத்துடன் 18 கோடி ரூபாய் என்கிற காண்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டார்.இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய தொகைக்கு யாரும் ஒப்பந்தமானது இல்லை என்று வியந்தது விளையாட்டு உலகம்.இப்போது சச்சினின் சொத்துக்கள் எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது.அண்ணன் அஜித் தான் சொத்துக்கள் முழுவதையும் கவனித்துகொள்கிறார்.  

  • கிரிக்கெட் இல்லையென்றால் மனைவி அஞ்சலி,மகன் அர்ஜுன்,மகள் சாராவுடன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் கிளம்பிவிடுவார். மகனை கிரிக்கெட் பிளேயராகவும்,மகளை டென்னிஸ் பிளேயராகவும் உருவாக்க வேண்டும் என்பது சச்சினின் கனவு.

  •  மக்களோடு மக்களாக இருக்கவேண்டும் என்பது சச்சினின் ஆசை. ஆனால் இந்தியாவில் அது முடியாத காரியம் என்பதால் சிலவருடங்களுக்கு முன்பு லண்டனில் சொந்தமாக வீடு வாங்கினார்.வீட்டின் அருகே உள்ள பார்க்கில் குடும்பத்தோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பதுதான் சச்சினுக்கு ரெம்பப் பிடிக்குமாம்.


  •  செண்டிமெண்ட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். கிரிக்கெட் என்றால் 10 -ம் நம்பர் ஜெர்சி.கார் என்றால் 9999 , என ராசியான நம்பர்களை யாருக்கும் விட்டுத்தர மாட்டார்.   

இன்னும் வரும்.............
நன்றி:
ஆனந்த விகடன்

1 கருத்து:

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கண்டிப்பா அவர் ஒரு சாதனை நாயகன்...