வெள்ளி, 16 ஜூலை, 2010

இடஞ்சுட்டி பொருள் விளங்கு !


 
மோதிப்பார் முயற்சியுடன் 
மலைகளும் மண் துகள்களாகும்  !
படித்துப் பார் கவனத்துடன்
பாடங்களும் பக்குவப்படும் !!

சிரித்துப் பார் மனம்விட்டு
சிலிர்த்துக்கொள்ளும்  இதயம்  ! 
சிந்தித்துப்பார் நிதானமாக
சிந்தைத் தெளிவு பெரும் !!பேசிப் பார் பண்புடன்
பலரும்  பாராட்டுவர் !
பழகிப்பார் நட்புடன்
பகைவனும் பாசம்கொள்வான் !!

மறந்து விடு தீயதை
மனம் மகிழ்ச்சியுறும் 
வாழ்ந்துப்பார் ! நம்பிக்கையுடன் 
வாழ்க்கை வசந்தமாகும் !!!


நட்புடன்

5 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கு,வாழ்த்துக்கும்
நன்றி @ சரவணன்.

தமிழ் சொன்னது…

அருமை

வாழ்த்துகள்

Karthick Chidambaram சொன்னது…

அருமையான கவிதை. அதனால்தான் தமிழன் உலகிற்கு பார் என்றும் பெயர் வைத்தான்.
முயற்சித்து பார் வெற்றி பெறுவாய் என்று சொல்லவோ?

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,
பின்னூட்டத்திற்கும் நன்றி
@திகழ்
@கார்த்திக் சிதம்பரம்